ஜானி என்று ஒரு திரைப்படம் 1980ம் வருடம் வெளிவந்தது. மகேந்திரன் இயக்கம். .
ஜானி என்ற திரைப்படம் ஒன்றும் காவியம் அல்ல. அது ஒரு மென்மையான உணர்வுக் கோலம். குறிப்பாக பாடகி அர்ச்சனா (ஸ்ரீதேவி) ஜானி (ரஜினி) சம்பந்தப்பட்ட காட்சிகள் . இளையராஜா என்ற கலைஞன் தொட்டுச் சென்ற புதுப்புது இசைப் பரிமாணங்கள். அது ஒரு காலம். அது ஒரு விதமான திறமைகளின் தற்செயலான சேர்க்கை. அந்திச் சூரியன் விழும் பொழுது வானில் வந்து விழும் வண்ணக் கோடுகள் போல.
ஜானி என்ற திரைப்படத்தைப் பார்த்தேன் அது வெளியான போது. மீண்டும் பாரத்தேன். சில வருடங்கள் சென்ற பின் மறுபடியும் பார்த்தேன். ஏன் என்று விளக்க முடியுமா? இளமை தரும் பரவசமும் மன வெழுச்சியும் யாவரும் அனுபவித்தது தானே?
ஒரு சின்னக் காணொளி
டைரக்டர் மேந்திரனின் கைவண்ணம். ரஜினி-ரஜினி ஶ்ரீதேவி நடித்தது.எல்லோரும் அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்கள். பாயல்கள் ஒவ்வொன்றும் முத்து. எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காது. ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும் என்றால் நாமும் இளையராஜாவுடன் பயணப்பட வேண்டியதுதான். Master piece. ஃ🎂
ReplyDeleteதிருத்தங்கள்: பாடல்கள், மகேந்திரன் என்று இருக்க வேண்டும். திருத்திக் கொள்ளவும்
ReplyDeleteநன்றி ராம்
Deleteபல வருடங்களுக்கு முன் பார்த்த படம். சோகச் சித்திரமாக மனதில் பதிந்த ஸ்ரீதேவி, ரஜினி நல்லா நடிச்சிருப்பார், அருமையான பாடல்கள். நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. நேரம் கிடைக்கும் போது மறுபடியும் பார்க்கனும்.
ReplyDeleteபாரேன்
Delete