மலர் நள்ளிரவில் அவிழ்ந்து மணம் பரப்புகிறது. அது ஒரு ரகசியம் வெளிப்படுவது போல் இருக்கிறது. இசை காதில் வந்து சேருகிறது. அதிலும் எத்தனையோ ரகசியங்கள்.
நேற்று ஒரு பாடலைக் கேட்டேன். வெகு நாட்களுக்குப் பிறகு கேட்டேன். மீரா என்ற மிகப் பழைய திரைப்படத்தில் வரும் ஒரு பாடல்.
எழுபதுகளில் வந்த ஒரு ஹிந்தித் திரைப்படம். அதன் பெயர் ஷர்மிளி. மதுரையில் அந்தப் படம் வெளிவந்தது. ஷர்மிளி என்ற திரைப்படத்தின் தலைப்பை அழகாக “நாணமுள்ள நங்கை” என்று மொழிபெயர்த்து போஸ்டர் ஒட்டி இருந்தார்கள். அதில் ஒரு பாடல். மேகா சாயே ஆதீ ராத் என்று துவங்கும். மேகங்களின் நிழலில் பாதி இரவு என்று பொருள் கொள்ளலாம்.
நிழல்கள் என்ற திரைப்படத்தைப் பார்க்க நண்பர்கள் எல்லாம் விழுந்து அடித்து ஓடினார்கள். நான் சற்றுத் தாமதித்து விட்டேன். நான் பாரக்கும் போது அந்தப் பாடல் காட்சி இடம் பெறவில்லை. அந்தப் பாடல் தூரத்தில் நான் கண்ட உன் முகம் .
“தூக்கு மரத்தின் நிழலில்”என்று ஒரு தொடர்.. C.A. பாலன் எழுதியது. பிரபல வார இதழில் வந்தது. அதை அடிப்படையாகக் கொண்டு எடுத்த படம் “இன்று நீ நாளை நான்”. மதுரையில் சென்ட்ரல் என்று ஒரு தியேட்டர் உண்டு. நண்பர் ஒருவரோடு பார்த்தேன். இரவுக் காட்சி. இரவின் அமைதியில் திரையில் அந்தப் பாடல் ஒலித்தது. உறவுகள் பிறழும் சூழலுக்கு அமைந்த பாடல் அது. பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் என்ற பாடல்.
அருமை. 👌🏻 இசை கூறும் ரகசியம். தாகம் தீர்ந்து விட்டதா என்ன என்பன.
ReplyDeleteநான் பார்த்தபோது நிழல்கள் படத்தில் இந்த பாட்டு இருந்தது.
நீ அவ்வளவு தாமதமாகவா பார்த்தாய்.
அல்லது படம் வணிக ரீதியாக வெற்றி பெறாததால்,உடனே எடுத்து விட்டார்களா.
அந்த படம் வெற்றி பெறாதது வருத்தமே.
ஆமாம் மதி. நான் பார்க்கும் போது அந்தப் பாடல் காட்சி இல்லை. அவ்வளவு தாமதம் இல்லை. கொஞ்சம் தாமதம். அதற்குள் அந்தப் பாடலைத் தூக்கி விட்டார்கள். இன்று இதைப் பதிவிடும் போதுதான் முழுப் பாடல் காட்சியையும் பார்த்தேன். நான் கற்பனை செய்திருந்தது வேறு.
ReplyDeleteஅருமையான பாடல். படத்தில் பாடல் இருந்ததா என்ற நினைவில்லை. கருத்தும் அருமை. படம் அருமையான படம்.
ReplyDeleteநன்றி ராம்
Delete