Who walked past the window of my childhood and breathed on it?
Who walked past in the deep night of childhood,
that still was starless?
With his finger he made a sign on the pane,
on the moist pane
with the ball of his finger,
and then passed on to think of other things,
leaving me deserted
for ever.
How should I be able to interpret the sign,
the sign in the moist afterwards of his breath?
It stayed there a while, but not long enough
for me to be able to interpret it.
For ever and ever would not have sufficed to interpret it.
Par Lagerkvist
யார் எனது குழந்தைப் பருவம் என்ற சன்னல் அருகே நடந்து செல்வது?
நடந்து சென்று அதன் மீது மூச்சு விடுவது?
குழந்தைப் பருவம் என்ற ஆழம் கொண்ட இரவின் அருகே
இன்னமும் நட்சத்திரங்கள் இல்லாத இரவின் அருகே
யார் நடந்து செல்வது?
விரலால் அவன் சன்னல் கண்ணாடி மீது ஏதோ குறி இட்டான்
விரல் நுனியால்
ஈரமாக இருந்த கண்ணாடி மேல்
பிறகு வேறு விஷயங்களில் கவனம் செலுத்தத் தலைப்பட்டான்
என்னை நிரந்தரமாகக் கைவிட்டவனாய்
அவன் இட்டுச் சென்ற குறியை எவ்விதம் புரிந்து கொள்வது?
அவனது சுவாசக் காற்றுக்கும் பிந்தைய அந்தக் குறி
அது அங்கே கொஞ்ச நேரமே இருந்தது
நான் புரிந்து கொள்ள அந்த கொஞ்ச நேரம் போதவில்லை
அது காலம் முற்றிலும் அங்கே இருந்தாலும்
புரிந்து கொள்ள முடியுமா என்ன?
தமிழில்
தி சந்தானம்
Lovely thought. Beautifully translated.
ReplyDeleteThank you
Deleteஅழகான மொழி பெயர்ப்பு. அருமையான. சிந்தனை
ReplyDeleteThank you Ram
Delete