காற்று காதில் ஓசையைக் கொண்டு வந்து சேர்க்கிறது. அந்த ஓசையில் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அதற்கு ஒரு வடிவம் இருக்கிறது. வார்த்தைகள் சேர்ந்து ஒரு முறைமை அதற்கு வழங்கி வருகிறது. அது இசை என்று பெயர் கொள்கிறது.
ராகங்களை வெறும் கேள்வி அறிவைக் கொண்டு அறிவது ஒரு வினோதமான அனுபவம். ராகங்களுக்கு ஒரு அடையாளம் இருக்கிறது. அது சுரங்கள் வழியாக வந்து சேருகிறது. அதற்கு ஒரு ஏறுமுகம் மற்றும் இறங்கு முகம் இருக்கிறது. இசையோ இலக்கணமோ அறியாத நிலையில் ஒரு ராகத்தை எப்படி அடையாளம் கொள்வது? கேட்டுக் கேட்டுப் பழகி அந்த ஓசையின் ஒழுங்கு பிடிபடுகிறது. ராகங்களுக்கும் பெயர் உண்டு தானே? கற்று உணர்ந்தவர்கள் சொல்லும் போது அந்தப் பெயர்கள் எல்லாம் புழங்கி வருகிறது. பெயரில் என்ன இருக்கிறது?
இன்று ஒரு ராக ஆலாபனையைக் கேட்டேன். அதை நீங்களும் கேளுங்கள்.
இந்த ராகத்தின் பெயர் சிம்மேந்திர மத்யமம்.
எனக்கு எட்டு வயது இருக்கும் போது ஒரு பாடலைக் கேட்டிருக்கிறேன். அது ஒரு ஓசை. அது ஒரு ஒழுங்கு. அந்தப் பாடலை வரிகளோடும் பாடியவரோடும் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் மீதும் தான் முதலில் தொடர்பு படுத்திக் கொள்ள முடிந்தது. பின்பு இசையை மேன்மேலும் கேட்க கேட்கக் காதுகள் கேள்வியால் தோட்கப்படுகிறது அல்லவா? ராகத்தின் பெயர் ஒரு கட்டத்தில் பிடிபட்டு விடுகிறது.
இந்தப் பாடல் இல்லாததொன்றில்லை என்று துவங்குகிறது. தத்துவம் தோய்ந்த முதல் வரி. பாடகர் சுருதியின் உச்சத்தை எளிதில் அடைந்து அங்கேயே நின்று சஞ்சரிக்கக் கூடியவர். டி.ஆர்.மகாலிங்கம்.
பாடல் முதல் பகுதியின் ராகம் சிம்மேந்திர மத்யமம். மற்ற இரண்டு பகுதிகளில் வரும் ராகங்களைக்
கேட்பவர்களின் ஊகத்துக்கு விட்டு விடுகிறேன்.
வருடங்கள் சென்றபின் இந்த ராகத்தை ஒரு இளைய இசையமைப்பாளர் திரைப்படப் பாடலில் கையாண்டிருந்தார். மேற்கத்திய செவ்வியல் இசையை முறையாகப் பயின்ற அவர் கைகளில் இந்த ராகம் ஒரு புது வடிவம் பூண்டது. பாடலைக் கேட்கும் போது சொல்ல முடியாத ஒரு தவிப்பு பெருகி வந்தது.
கேட்கலாம்
அருமையான பாடல். பலமுறை கேட்டிருக்கிறேன். ராகம் வகைப்படுத்தத் தெரியாது. நல்ல பதிவு.இந்தப் படம் பார்த்த நினைவு
ReplyDeleteநன்றி ராம்
DeleteMiga Arumai.,
ReplyDeleteNanri
Delete