Skip to main content

நாளை வந்து சேரும்

 பாஸ்டர்நாக் எழுதிய நாவல் டாக்டர் ஷிவாகோ. அதில் பிற்சேர்க்கையாக டாக்டர் ஷிவாகோவின் கவிதைகள் வரும்.

எனது முந்தைய பதிவு Three of Us என்ற திரைப்படம் குறித்து. அதில் ஷைலஜா பல ஆண்டுகளுக்குப் பின் பள்ளித் தோழன் பிரதீப் காமத்தைச் சந்திக்கிறாள். எது அவளை அந்த ஊருக்குக் கொண்டு வந்து சேர்த்தது? அவள் இங்கே வந்து என்ன தேடுகிறாள்?  என்ன தொலைந்து போயிற்று? இப்படி எல்லாம் அவன் யோசிக்கிறான். அவன் கவிதை எழுதுபவன் தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு அன்று ஒரு கவிதை எழுதுகிறான். அந்தக் கவிதையின் தலைப்பு தோற்றுவாய். கவிதை வருமாறு


ஓசையின் காட்சி நாளைய தினத்தைத் 

தாங்கிக் கொள்வதற்கு

நம்பிக்கையின் ஒரு கல் மலையேற்றத்தில்

மூச்சு வாங்கியபடி புரட்டுவதற்கு

இன்று விளையாடித் தீர்ந்த பின்பு தானே

நாளை வந்து சேரும்

நீ ஏற்கனவே வழியைக் கண்டடைந்து விட்டாய், எனவே கேள்

நாம் அந்த நகரத்தை நோக்கி நடப்போம் 

வாழ்க்கை எத்தனை தூரம் நம்மை இட்டுச் செல்கிறதோ அத்தனை

இன்று விளையாடித் தீர்ந்த பின்பு தானே

நாளை வந்து சேரும்

ஆயிரம் ஆயிரம் முத்துக்களை நீ சேகரித்துக் கொள் 

இறுதி நாளில் நீ வெறும் கையோடு தான்

செல்ல வேண்டி இருக்கும்

இன்று விளையாடித் தீர்ந்த பின்பு தானே

நாளை வந்து சேரும்


மறுநாள் அவன் வீட்டிற்கு ஷைலஜாவும் அவள் கணவரும் வருகிறார்கள். பிரதீப் கவிதைகள் எழுதுவது பற்றிப் பேச்சு வருகிறது. பிரதீப் அதை ஒரு கூச்சத்துடன் எதிர்கொள்கிறான். பிரதீப்பின் மனைவி அவனுடைய கவிதைகள் அடங்கிய நோட்டை எடுத்து வருகிறாள். அதில் ஒரு கவிதை


நிலவு கடலிடம் சொன்னது

நீ கடைந்தது எல்லாம் வீண்

நீ ஏங்குவது எல்லாம் பொய்

நீ என்னைக் காண வருவது இல்லை

கடல் சொன்னது

நிலவே எனதன்பே

உன்னை விரைவில் காண வேண்டி 

எனது இதயம் பொங்குகிறது 

ஆனால் என்ன செய்வது?

ஒவ்வொரு முப்பது நாளிலும் 

முப்பது விதமாக உனது முகம் 

மாறுகிறதே




இந்தக் கவிதையை பிரதீப் வாசிக்கிறான். ஷைலஜாவின் கணவர் கவிதை அருமையாக இருக்கிறது என்று சொல்கிறார். ஷைலஜா இந்தக் கவிதை உனது என்று என்னால் அடையாளம் காண முடியும். கவிதையில் உள்ள கள்ளமின்மைதான் அதன் அடையாளம் என்கிறாள். பிரதீப்பின் மனைவி இந்தக் கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இது மிகவும் சாதாரணமான கவிதை என்று இவர் சொல்லுகிறார் என்றாள். எல்லாவற்றிற்கும் பிரதீப் புன்னகையே பதிலாகத் தருகிறான்.


கவி உள்ளம் ஆழமானது. அந்த ஆழத்தில் என்ன புதைந்து இருக்கும் என்பதை அறிவது கடினம்.



டாக்டர் ஷிவாகோ நாவலில் பிற்சேர்க்கை போல எனது முந்தைய பதிவின் பிற்சேர்க்கையாக மேலே சொன்ன கவிதைகளைக் கருத வேண்டுகிறேன்




Comments

  1. அருமை 👌🏻
    பிற்சேர்க்கை மொழியாக்கம்

    ReplyDelete
  2. சொன்னா நம்ப மாட்ட.. அந்த கவிதை சீன் வந்த உடனயே நீ இங்க அந்த பட பதிவுல மொழியாக்கம் செஞ்சிருப்பேன்னு நெனச்சு வந்தேன். காணமேன்னு பார்த்தா தனி போஸ்ட். இரு இன்னும் படிக்கல. படிச்சுட்டு வரேன். நா கூட சப் டைடில் உதவியோட முயற்சி செய்யலாமான்னு பார்த்து வேணாம் விஷப்பரீட்சைன்னு விட்டேன். :)

    ReplyDelete
  3. 400 லிருந்து 500 வார்த்தைகளுக்குள் பதிவு அடங்கி விட வேண்டும் என்று நினைப்பது உண்டு. சில சமயம் நீண்டு விடுகிறது. இதையும் தாண்டி சில விஷயங்கள் விடுபட்டுப் போகிறது. எனவே....

    ReplyDelete
  4. அருமை அருமை இரண்டாது பதிவு மற்றும் மொழியாக்கம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம் தொடர்ந்து படிப்பதற்கு

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...