Skip to main content

இருள் விழும் போது

 



பெர் லாகர்க்விஸ்ட் ஸ்வீடன் தேசத்து எழுத்தாளர். அவர் எழுதிய நாவல் Barabbas. அது நோபல் பரிசு பெற்ற நாவல். சென்ற வருடம் தான் படித்தேன். பாரப்பாஸ் ஒரு கொள்ளையன்.  சிலுவையில் ஏற்றப்பட்டு தண்டனை பெற வேண்டியவன். பஸ்கா விருந்து நாளில் மக்கள் விரும்பினால் ஒருவரை தண்டனையிலிருந்து விடுவிக்க முடியும். பிலாத்து கேட்கும் போது எல்லோரும் நசரேயன் என்ற ஏசுவைச் சிலுவையில் ஏற்றச் சொல்லிக் கூக்குரல் இடுகிறார்கள்.  பிலாத்து ஏசுவைச் சுட்டிக் காட்டி இந்த மனிதன் மேல் நான் ஒரு குற்றமும் காணவில்லையே என்று சொல்கிறான். பின்பு தண்ணீர் கொண்டு வரச் சொல்லி ஒரு பாத்திரத்தில் தனது கைகளைக் கழுவிக் கொள்கிறான். நீங்கள் சொல்வதால் ஏசுவைச் சிலுவையில் ஏற்றும் தண்டனையை வழங்குகிறேன். இந்தப் பாவம் என்னைச் சேராது என்கிறான்.

பாரப்பாஸ் நாவல் தண்டனைக்குத் தப்பிய கொளளையனைப் பற்றியது. இதனுடைய ஆங்கில மொழிபெயர்ப்பை படித்தது பற்றியே மேலே குறிப்பிட்டிருந்தேன்.  பெர் லாகர்க்விஸ்டின் எழுத்து எளிமையான சொற்களால் ஆனது.  ஆனால் அதனுடைய ஆழம் நம்மை எங்கோ கொண்டு அமிழ்த்தி விடும். நம்மைப் பற்றி மிகவும் யோசிக்க வைக்கும்.  ஒரு ஆன்மிக தளத்தில் நின்று பேசுவதாக இருக்கும்.  சாரம் கொண்ட தனிமையில் ஊறி வந்த சொற்கள் அவருடையது.

நாவலைப் படித்ததின் தொடர்ச்சியாக இவரது பல கவிதைகளைப் படித்தேன். அதில் ஒரு கவிதையைத் தமிழில் செய்தேன். அது.

           

   When Darkness Falls


It’s the most beautiful when darkness falls
All the love heaven holds
is gathered in a dim light
over the earth,
over the house of the field.

Everything is tenderness, everything is touched by hands.
The Lord Himself obliterates distant shores.
Everything is close, everything is distant.
Everything is given
man as a loan

Everything is mine, and everything shall be taken from me
Soon everything will be taken from me.
The trees, the clouds, the ground where I go.
I will walk
lonely without traces.


Par Lagerkvist



                 இருள் விழும் போது


இருள் விழும் போது அத்தனை அழகு


சொர்க்கம் கொண்டிருக்கும் எல்லா அன்பும்

ஒரு மங்கிய வெளிச்சத்தில் சேகரிக்கப்படுகிறது


பூமியின் மேலிருக்கும்

வயல் வெளி வீட்டின் மேலிருக்கும்

மங்கிய வெளிச்சத்தின் மேல்


எல்லாமே மென்மை


எல்லாமே கைகளால் தீண்டப்படுகிறது 


தூரத்துக் கரைகளை இறைவனே அழித்து விடுகிறான்


எல்லாமே அருகில், எல்லாமே தொலைவில் 


எல்லாமே கடனாக வழங்கப்பட்டிருக்கிறது.


எல்லாமும்  எனது. எல்லாமும் என்னிடமிருந்து எடுத்துச் செல்லப்படும்

விரைவிலேயே எடுத்துச் செல்லப்படும் 


மரங்கள், மேகங்கள், நான் செல்கின்ற நிலப் பரப்பு


நான் தனியே நடந்து செல்வேன்

தடயங்கள் ஏதும் இன்றி


தமிழில்

தி சந்தானம்


இந்தக் கவிதை ஒரு தரிசனத்தைத் தந்தது.

பெர் லாகர்க்விஸ்டை அறிய வாய்த்தது ஒரு பேறு.


Comments

  1. Very beautiful thought. Your search and the books you meet in your journey fascinate me in all these posts.

    ReplyDelete
  2. இது மாதிரி ஒரு நாவலைப் பற்றி கேள்விப் பட்டதே இல்லை. தேடித் தேடி விஷயங்களை பகிர்ந்தற்கு நன்றி

    ReplyDelete
  3. Mathivanan InbarajApril 4, 2024 at 4:45 PM

    அருமை

    ReplyDelete
  4. Wonderful piece of writing . You are introducing lots of new authors to us.Very interesting series.Congratulations

    ReplyDelete
    Replies
    1. Thank you Ram. I know you would appreciate this. Cherish our moments of identical interest

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...