கவிதை என்பது ஓயாமல் சளசளப்பது அல்ல. கவிதை என்பது நமக்குள்ளே ஆழத்தில் ஒரு மெளனத்தை விதைப்பது.
தேவதச்சனின் கவிதைகளைப் படித்து முடித்தவுடன் ஒரு நிசப்தம் உள்ளே இறங்குகிறது.
இந்தக் கவிதைகளைப் படியுங்களேன்.
அரசமரம்
அரசமரத்திற்குக்
கீழ்
நின்றுகொண்டிருந்தேன்
ஒவ்வொரு
இலை விழும்போதும்
ஒரு அரசமரம்
வீழ்ந்து சரிந்தது
சாலையில்
வேகமாய்
விரையும்
வாகனங்களின் சக்கரத்தை
ஒட்டிப்
பறக்கும் ,
அரசிலைகள்
வாகனத்தில்
ஏறவும் இல்லை
சக்கரங்களை
நிறுத்தவு மில்லை
******************
தாய்மொழி
என்னைவிட
இளைஞர்களிடம் நான்
பேசுவதில்லை
எனது முதுமையின்
பாடல்கள்
அவர்களுக்கு எதுக்கு?
என்னைவிட
முதியவர்களிடமும்
பேசுவதில்லை
நேற்றைய உலகம்
எப்பவோ
காணாமல் போய்விட்டதே
பூனைகளிடமும் பூச்சிகளிடமும்
மரங்களோடும்
பேசுவதில்லை
அவைகளுக்குப்
பதிலுக்குப் பேசத் தெரிவதில்லை
என்னோடும் பேசுவதில்லை
இரண்டு நான்களை
என்னால்
தாங்க முடியாது
நான் பேசுவதெல்லாம்
நீர்க்குமிழிகளோடுதான்
அவைகளுக்கும் எனக்கும்
ஒரே தாய்மொழி என்பதால்
***********
அருமையான கவிதை
ReplyDeleteரசித்தேன்
ReplyDeleteநன்றி ராம்
Delete👌 அருமை *தாய் மொழி* பிரமாதம்.
ReplyDeleteநன்றி மதி
Delete