I carry inside myself my earlier faces, as a tree contains its rings.
Tomas Transformer
மரங்கள் எப்படியாவது கவர்ந்து இழுத்து விடுகிறது. நடை பழகும் காலை நேரங்களில் பெரிய பெரிய மரங்களைப் பார்த்தபடியே நின்று விட நேர்கிறது.மரத்தின் கீழே அமர்ந்து கண்மூடி அசையாமல் எவரேனும் இருந்தால் அவரும் மரமே என்றே தோன்றுகிறது. மாலை நேரங்களில் இள வயது ஆணும் பெண்ணும் மரத்தடியில் தான் பேசுகிறார்கள். என்ன ஒரு பேச்சு. தீராத பேச்சு. மரத்தின் இலைகள் ஒன்றுடன் ஒன்று பேசுவதைப் போல.
மரத்தடியில் தான் கெளதமனுக்கு ஞானம் பிறந்தது. பின்பு அவர் புத்தர் ஆகிவிட்டார். அவர் பல நாட்கள் அலைந்து திரிந்தார். மனிதர்கள் துக்கத்தில் வீழ்ந்து அல்லல் படுகிறார்கள். இதைத் தீர்க்க வழி ஏதும் உண்டா என்றே அவருக்குச் சிந்தனை. பல நாள் அலைச்சல். பல நாள் பசி. சுருண்டு விழுந்து விடுகிறார். அப்போது கறந்த பாலைக் சுமந்து செல்லும் பெண் அவரைக் காண்கிறாள். இயல்பான அக்கறையோடு அவருக்குப் பாலருந்தத் தருகிறாள். சிறிது சிறிதாகப் பருக ஒரு தெம்பு பிறக்கிறது.
அவர் ஒரு முடிவுக்கு வருகிறார். இனி உணவின்றி இந்த உடலை வாட்டுவது கிடையாது. கொஞ்சம உணவாவது தேவை. இல்லை என்றால் இந்த உடலைச் செலுத்துவது எப்படி? தெளிவோடு கூடிய வைராக்கியம் பிறக்கிறது. மரத்தடியில் சென்று கண்மூடி அமர்கிறார். அது ஒரு அத்தி மரம். ஞானம் அங்கே பிறந்ததால் அது போதி மரம்.
காலையில் நகரத்துக்குத் திரும்புகிறார் ஏசு. அவருக்குக் கடுமையான பசி. வழியில் ஒரு அத்தி மரத்தைப் பார்க்கிறார். அந்த மரத்தில் இலைகளைத் தவிர எதுவும் இல்லை. ஏசு இந்த மரத்தில் எதுவும் காய்க்காது என்று சாபமிடுகிறார். அந்த ஒரு சொல்லிற்கு மரம் பட்டுப் போகிறது.
பள்ளிப் பருவத்தில் பாடத்தில் வரும் ஓரு பாடல். படிக்காசுப் புலவர் எழுதியது. ஈயாத புல்லர் இருந்தென்ன போயென்ன காயாத எட்டி மரம் காய்த்தென்ன காய்த்துப் பலன் என்ன? அது நினைவுக்கு வருகிறது இல்லையா?
அறியாப் பருவத்தில் பார்த்த ஒரு திரைப்படம் அன்னை. அந்தத் திரைப்படத்தின் காட்சிகள் குழப்பமாக மனதில் ஓடும். அதில் ஒரு பாடல்
பூவாகிக் காயாகிக் கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று.
கேட்டாலே மனதில் வேதனை பெருகும்.
சில திரைப்படங்களில் மரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும். ரித்விக் கடக் இயக்கிய வங்காளப் படம் ஒன்று. மேகே தக்கா தாரா
என்று. துவக்கக் காட்சியில் பின்னணியில் ஆலாபனை ஒலிக்க மரங்களைக் கடந்து நாயகி நடந்தபடி வருவதாக அமைக்கப் பட்டிருக்கும். நதியின் கரையருகே நாணல் புதர். அதன் அருகே பாடிப் பழகும் குரல் அவளுடைய சகோதரனுடையது. . தொலைவில் பாலத்தில் பனி மூட்டத்தின் ஊடே ஒரு புகைவண்டி தடதடத்துச் செல்லும். அவளுடைய இதழில் ஒரு புன்னகை. அருமையான கறுப்பு வெள்ளைக் காட்சி.
Why I must go
I do not want to go
Night creeps into my days
My spent dreams are scarred with silence
I throw them into nights empty sleep
They fall into the deserts of nightmare, of misery
In the eyes of this village… dry and scorched
I seem to find myself
But I must traverse the path of ill omen
I am accursed
இந்த வரிகள் ஓடும் போது கிளைகள் உயர்த்திய ஒரு மரம் நிழலோவியமாய் எதிரே விரிகிறது. மலைப்பாதையில் செல்லும் போது ஜீப் நிறுத்தப் படுகிறது. போலீஸ் வலுக்கட்டாயமாக அனைவரையும் இறக்கி விடுகிறது. இறந்த உடலை ஜீப்பில் ஏற்றுகிறார்கள். தற்கொலை கேஸ் என்று சொல்கிறார்கள். அந்த முகம் புருஷனுக்குப் பரிச்சயமானது போல் தோன்றுகிறது. அவன் ஒரு தாள வாத்தியக் கலைஞன். இயக்க நாடகங்களில் தபலா வாசிப்பவன். அருகில் இருந்த கிராமவாசி ஒருவர் மலைப் பாறையில் ஒரு மரத்தில் அவன் தூக்கில் தொங்கியதாகச் சொல்கிறார். புருஷன் மலைப்பாறையில் ஏறி அந்த மரத்தைப் பார்க்கிறான். மரத்தில் ஒரு கயிறு காற்றில் அசைந்தபடி இருக்கிறது.
பின்னணியில் பாப்லோ நெருடாவின் கவிதை ஒலிக்கிறது.
I do not know, I am ignorant, I hardly see
but it seems to me that its song has the colour of wet violets,
violets well used to the earth,
since the face of death is green,
and the gaze of death green
with the etched moisture of a violet's leaf
and its grave colour of exasperated winter.
But death goes about the earth also, riding a broom
lapping the ground in search of the dead -
death is in the broom,
it is the tongue of death looking for the dead,
the needle of death looking for the thread.
மரணம் என்ற ஊசி தனது நூலைத் தேடுகிறது. மரத்தின் கிளையில் அந்தக் கயிறு காற்றில் அசைந்தபடி இருக்கிறது.
மரம் ஒரு குறியீடு. அது மனிதர்களை அறியும். ஒரு மெளன சாட்சியாய் நிற்கும். அன்று ஒரு நாள் ஒரு மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. சடசடவென்று ஒரு சத்தம் எழுந்தது. மரம் வீழ்ந்து கிடந்ததைப் பார்க்கும் போது ஒரு பெரும் வாழ்வு வீழ்ந்து கிடப்பதைப் போலிருந்தது.
ஆஹா அருமை அருமை. என்ன ஒரு அழகான எழுத்து.
ReplyDeleteமரம் வெறும் வார்த்தையில்லை. அது ஒரு உணர்வு.
ஒரு குட்டி ஃப்ளாஷ்பேக். போன வருடம் புயல் அப்ப எங்காத்து வாசல்ல இருந்த வாதா மரம் வேரோட சாய்ந்த்தது. சாய்ந்து முழுதும் தரையில் விழாமல் இருந்ததை கார்ப்பரேஷன்ல இருந்து, JCB எடுத்தண்டு வந்து அதை கீழே சாய்த்தனர். சொன்னால் நம்ப மாட்டாய், நம்மாத்து வாசல் அகலமான 40 அடிக்கு அது அப்படியே முழுவதுமாக அடைத்துக்கொண்டு கிடந்தது. இரவு நேரம், மழை, வண்டியின் வெளிச்சம் மட்டும், பால்கனியில் இருந்து பார்க்க திகில் படம் பார்ப்பது போல் இருந்தது. பழைய புராண சினிமால காமிக்கற மாண்டு கிடக்கும் பெரிய அரக்கன். போலக் கிடந்தது அந்த மரம். ஒரு மாதிரி பயம், வேதனை எல்லாம் கலந்து அழுகை அழுகையாக வந்தது. அத அப்றம் க்ளியர் பண்ண மேலும் நான்கு நாட்கள் ஆச்சு.
அழகாகச் சொன்னாய்.
Deleteமரம் என்ற ஒரு வார்த்தை பற்றி எவ்வளவு தொடர்புடைய எவ்வளவு விஷயங்கள். அருமையான மொழி பெயர்ப்பு. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராம்
DeleteBeautifully written , thoroughly enjoyed
ReplyDelete.
Thank you Ram
Delete