என்னது? பீத்தோவனப்ரியா என்று ஒரு ராகமா? எனக்கும் உங்களை போல வியப்பாகத்தான் இருந்தது. ரமேஷ் விநாயகம் இந்தக் காணொளியைப் பதிவேற்றியிருக்கிறார். அபிஷேக் ரகுராம் திருவருள் தர வருவாய் என்று பாடுகிறார்.
சரி பீத்தோவனப்ரியா? பீத்தோவனின் இசைக் குறிப்பு ஒன்று fur elise என்று. கேட்கும் திறன் ஏறக்குறைய குறைந்து விட்ட போது பீத்தோவன் இதை எழுதியதாகச் சொல்கிறார்கள். பியானோவில் இசைக்க எழுதப் பட்ட இதுவும் அபிஷேக் ரகுராம் பாடிய பாடலின் ராகமும் ஒன்று போல இருக்கிறது. எனவே இது பீத்தோவனப்ரியா. இந்தப் பெயரைச் சூட்டியது ரமேஷ் விநாயகம்.
எனக்கு இதைக் கேட்டவுடன் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் எழுபதுகளில் ஓலித்த என் மனது ஒன்றுதான் என்ற பாடல் நினைவுக்கு வந்தது.
இந்தப் பாடலின் இறுதிச் சரணத்தில் இது தேவலோக ராகம் நம் ஆயுட்கால கீதம் என்று வருகிறது. எத்தனை பொருத்தமான வரிகள்!
Note: No copyright infringement intended in. uploading the above youtube videos
உதவி. The Hindu dated June 4 2024, Article' What if Beethoven composed Carnatic Kriti ?' By Srinivasa Ramanujan
மூன்று பாடல்களும் கேட்டேன். ஒரு similarity தெரிகிறது. ஆச்சரியமான விஷயம். நல்ல பதிவு
ReplyDeleteநன்றி ராம் கேட்டு உணர்ந்ததற்கு
DeleteNice blog ! Yes, there is a resemblance to 'En manathu ondruthaan'. Some discussions in Tamil Film Music groups had talked about that too previously.
ReplyDelete-Cheenu
Thank you. Was it about Beethoven too?
DeleteYes
Deleteஅருமையான கண்டுபிடிப்பு.
ReplyDeleteஅல்லவா?
DeleteFor a minute I was wondering if the raaga name was real. Good analysis.
ReplyDeleteThank you. Yes, really
Delete