சிவசங்கரி எழுதிய கதை நண்டு. தினமணி கதிர் பத்திரிக்கையில் தொடராக வந்ததா? சரியாக நினைவில்லை. நான் அந்தக் கதையைப் படித்ததில்லை. என் சகோதரிகள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது ஒரு சோகமான கதை என்று. இந்தக் கதை திரைப்படமாக வந்தபோது பார்த்தேன். அது ஒரு நல்ல திரை அனுபவமாக இருந்தது. உணர்வுகளைக் கடத்துவதில் இசை முக்கிய பங்காற்றியது.
இந்தப் படத்தில் டைட்டில் ஓடும் போது பின்னணியில் பாடல் ஒலிக்கும். பாடியவர் பூபேந்தர் சிங். இவர் ஹிந்தித் திரைப்படங்களில் குறைவான பாடல்களையே பாடியிருக்கிறார். ஆனால் அவை அனைத்தும் நுட்பமான உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள்.
மேலே குறிப்பிட்ட பாடலில் பூபேந்தரின் குரலோடு சாளரம் சாளரமாக காலத்தின் கதவுகள் திறக்க காற்றைப் போல நாம் எங்கோ எங்கோ பின்னோக்கிச் செல்கிறோம். என்ன ஒரு குரல்? சில குரல்கள் அப்படித் தான் நம்மைப் பாதித்து விடுகிறது இல்லையா?
கேட்கலாம்.
Note: No copyright infringement intended
Beautiful voice. Some voices do have that innate tendency to draw you into an introspective mode. Astute observation as always.
ReplyDeleteThank you. Yes, some voices disturb you
Deleteஆகர்ஷிக்கக் கூடிய குரல். நல்ல பாட்டு. இந்தக்கதை படித்திருக்கிறேன். படம் பார்க்கவில்லை. நல்ல பதிவு
ReplyDeleteநன்றி ராம்
Delete