Skip to main content

நான் ஏதும் இல்லை

 


கல்லூரியில் ஹிந்தி மொழியைக் கற்றேன். தமிழ் இலக்கியம் போலச் செறிவு மிகுந்தது அல்ல ஹிந்தி இலக்கியம். தமிழ் மீது தணியாத ஆர்வம் உண்டு. எனினும் பண்டைத் தமிழ் இலக்கியச் சுவையைப் பருகினேன் அல்லேன்.

ஹிந்தியைத் தேர்வு செய்யப் பெரிய காரணம் ஒன்றும் இல்லை. ஹிந்திப் பிரச்சார சபை நடத்திய ஓரிரண்டு தேர்வுகளை எழுதியிருந்தேன்.முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தேன். ஓரளவு ஹிந்தி அப்போது தெரிந்தது. அப்போது நான் ஹம்ராஜ் என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். நீல வானம். பனி மூடிய இமயத்தின் சிகரங்கள். வண்ண மலர்கள். இந்தக் காட்சிகள் எல்லாம் திரையில் விரிந்தது. மனதைப் பறி கொடுத்தேன். இசையோ இனிமை. ஆனால் பாடலின் பொருளோ பேசும் வசனமோ சிறிதும் புரியவில்லை. எனவே ஹிந்தியில் மேல் ஒரு ஆர்வம். ஹிந்தியைத் தேர்ந்து எடுத்தேன்.

கபீர் தாஸ் என்ற பெயர் அறிமுகம் ஆனது. அவர் எழுதிய கண்ணிகளைத் தோஹா என்று குறிப்பிடுவார்கள். எளிமையான சொற்கள். பெரிய உண்மைகள் அதிலே பொலிந்து நிற்கும். யோசிக்க வைத்து விடும். ஒரு பேச்சுக்காக திருக்குறளைப் போல என்று சொல்லலாம்.  அதன் சுருங்கிய வடிவத்திற்காக. ஆனால் இரண்டும் வேறானவை. கபீர் தாஸின் கண்ணிகள் சில இன்றளவும் மனதில் நிற்கிறது. அதில் ஒன்று. துக்கம் வரும் போது எல்லோரும் இறைவனை நினைக்கிறார்கள். சுகம் வரும் போது நினைப்பார் இல்லை. சுகம் வரும் போதும் அவனை நினைத்தால் துக்கம் எப்படி வரும?  பிறிதொன்று.   ஜப மாலையை எடுத்து உருட்டுகின்றேன். மனமோ பத்து திசைகளிலும் உருளுகின்றது.  கடவுளே எனக்கு இத்தனையே வேண்டும். அது நானும் குடும்பமும் பசியாது வாழப் போதுமானதாக  இருக்க வேண்டும். சாது ஜனங்களுக்கு உணவிடவும் போதுமானதாக இருக்க வேண்டும்.

கபீரின் பிறப்புப் பற்றி தெளிவான குறிப்புகள் இல்லை. ஒரு இஸ்லாமியர் அவரைக் குளக்கரையில் கண்டெடுத்து வளர்த்ததாகச் சொல்வர்.

சமீபத்தில் கபீரின் பாடல்களை ஆங்கிலத்தில் படிக்க நேர்ந்தது. அதைத் தமிழில் செய்ய முயன்றிருக்கிறேன்.

A drop falls in the ocean
Everyone agrees
The ocean held in a drop?
A rare one sees

The wave in the ocean
Is the ocean itself
Rising, water, falling, water
Tell me how it could be
Any other?

Instead of ‘ocean’
You call it a ‘wave’
By doing so
Does it lose its water?

The world’s a mirage
That obscures the eternal
Kabir has seen through it
And blown its cover


ஒரு துளி கடலில் விழுகிறது

அனைவரும் ஒத்துக் கொண்டார்கள்

ஒரு துளியிலே கடல்?

இதை அரிதாக யாரோ  காண்கிறார்கள்

கடலிலே அலை என்பது

கடலே தான்

எழுவதும் நீரே, விழுவதும் நீரே

சொல்லேன், அது வேறு எதுவாக இருக்கும்?

கடல் என்று அழைப்பதற்குப் பதில்

நீ அலை என்று அதை அழைக்கிறாய் 

அப்படிச் செய்வதால்

அது நீரை இழந்து விடுமா என்ன?

உலகம் ஒரு கானல்

நிரந்தரத்தை அது மறைத்து விடுகிறது

கபீர் அதைப் பார்த்து விடுகிறான்

அந்த மறைப்பை ஊதியெடுத்து விடுகிறான்


This truth, that truth is one!

One breath, two lives

Look in your heart, and you will know

What is stirring in mine


Nothing in me, is mine to claim

All that is, is yours

I surrender what’s yours

To you again

What can I say I’ve lost?



இந்த உண்மை, அந்த உண்மை ஓன்றே  உண்மை

ஒரு சுவாசம், இரு வாழ்க்கைகள்

உன் இதயத்தைப் பார்

நீ அறிவாய்

எனது இதயத்தில் எது அசைகிறது என்று


எனக்குள்ளே எதுவும் எனதல்ல உரிமை கொள்ள

உள்ளது எல்லாம் உனது

எது உனதோ அதை

நான் உன்னிடமே ஒப்படைப்பேன் 

நான் இழந்தது என்று எதனைச் சொல்வேன்?



I won’t come

I won’t go

I won’t live

I won’t die


I’ll keep uttering

The name

And lose myself

In it


I’m bowl

And I’m platter

I’m man

And I’m woman


I’m grapefruit

And I’m sweet lime

I’m Hindu

And I’m Muslim


I’m fish

And I’m net

I’m fisherman

And I’m time


I’m nothing

Says Kabir

I’m not among the living

Or the dead



நான் வர மாட்டேன்

நான் போக மாட்டேன்

நான் வாழ மாட்டேன்

நான் சாக மாட்டேன்


நான் தொடர்ந்து உச்சரிப்பேன் 

பெயரை

என்னையே அதற்குள்ளே 

தொலைத்து விடுவேன்


நான் கிண்ணம்

நான் தட்டு

நான் மனுஷன்

நான் மனுஷி


நான் திராட்சை

நான் சாத்துக்குடி

நான் இந்து

நான் முஸ்லீம்


நான் மீன்

நான் வலை

நான் மீனவன்

நான் காலம்


கபீர் சொல்கிறான்

நான் ஏதும் இல்லை

நான் வாழ்பவரில் இல்லை

செத்தாரிலும் இல்லை


கபீர் நெசவாளியாக இருந்தார். நெசவின் வழியாகவே வாழ்க்கையை அறிந்தார். நெய்யும் ஒவ்வொரு இழையிலும் ராமனைக் கண்டார். அவருடைய உலகத்தில் ராமன் வேறு. ரஹீம் வேறு அல்ல.


எனவேதான் அவர் இறந்தபோது இந்துக்களும் அவர் உடலுக்குச் சொந்தம் கொண்டாடினார்கள். இஸ்லாமியரும் அவர் உடலுக்குச் சொந்தம் கொண்டாடினார்கள். 


அவர் உள்ளத்தை அறிந்தார்  எவரும் இல்லை.

Comments

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...