Skip to main content

நினைக்கப்படும்

 


அலீஸ் மன்றோ தனது தொண்ணூற்றி இரண்டாவது வயதில் இறந்து போனார். அவரைப் பெண் செகாவ் என்றே அழைத்தார்கள். செகாவைப் போலவே அவர் அளவில் அதிகமான சிறுகதைகளை எழுதினார். செகாவைப் போலவே அவரது கதைக் கரு பலவகைப் பட்டதாக இருந்தது.


அலீஸ் மன்றோவைப் பற்றி

அ.முத்துலிங்கம் எழுதியதை வைத்தே தெரிந்து கொள்ள முடிந்தது. அ.முத்துலிங்கமும் கனடாவில் தான் இருக்கிறார். அலீஸ் மன்றோவைச் சந்திக்கவும் பேட்டி காணவும் முயன்றதைப் பற்றி சுவாரசியமாக

எழுதியிருக்கிறார். எத்தனையோ பேரைப் பேட்டி கண்ட அவருக்கு அலீஸ் மன்றோவை மட்டும் பேட்டி காண முடியவில்லை. எண்பத்திரண்டு வயதில் அலீஸ் மன்றோ நோபல் பரிசு வென்றார்.


அலீஸ் மன்றோவின் கதைகள் அதிகமும் நியூயார்க்கர் இதழில் வந்திருக்கின்றன. அதில் ஒரு கதை, What is remembered.  ஒரு இல்லத்தரசியின் கதை. 


பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இல்லத்தை நடத்தும் பெண்களுக்கு அலீஸ் மன்றோ எழுதிய வரிகள் பொருத்தமாக இருக்கிறது. அவர் இப்படி எழுதுகிறார்.


It was the women, then, who could slip back—during the daytime hours, and always allowing for the stunning responsibility that had been landed on them, in the matter of the children—into a kind of second adolescence. A lightening of spirits when the husbands departed. Dreamy rebellion, subversive get-togethers, laughing fits that were a throwback to high school, mushrooming between the walls that the husband was paying for, in the hours when he wasn’t there.


ஓரு முறை துக்கம் விசாரிப்பதற்காகக் கணவன் பியர், மனைவி மெரியல் இருவரும் விசைப்படகில் ஏறி அருகில் இருக்கும் தீவிற்குச் செல்கிறார்கள். இறந்து போனது பியரின் நண்பன் ஜோனா.பன்னிரண்டு வயதிலிருந்து பழக்கம். பியருக்கு இளங்கலை படிப்பு அமைந்தது. நண்பன் ஜோனாவிற்குப் பொறியியல் படிப்பு. கணவன்  பியர் பள்ளியில் ஆசிரியர் வேலைக்குச் சேர்ந்தான். நண்பன் ஜோனாவோ எந்த வேலையிலும் நிலையாக இருக்கவில்லை. எந்தப் பெண்ணோடும் நீடித்த உறவு இல்லை. யாரையும் மணக்கவும் இல்லை. மாறாக இவர்கள் திருமணம் குழந்தைகள் என்று செட்டில் ஆகி விட்டார்கள். இறந்து போனவன் இவர்கள் வீட்டிற்கு சில முறை வந்தது உண்டு. கணவனைப் பள்ளியில் அழைக்கும் பட்டப் பெயர் வைத்து ஜோனா கூப்பிடுவது இவளுக்குப் பிடிப்பது இல்லை. சளசளவென்ற அவனது பேச்சும் தான். இது குறித்து இப்போது குற்ற உணர்வு அடைகிறாள். இறப்பை ஒட்டி அந்தத் தீவுத் தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டம் நடக்கிறது. அதில் பாதிரியார் பேசுகிறார்.  இறந்து போன ஜோனாவின் வாழ்க்கையை கருவில் வாழும் குழந்தையோடு ஒப்பிட்டுப் பேசுகிறார். அலீஸ் மன்றோ அதை இவ்வாறு எழுதியிருக்கிறார்.


The baby, he said, knows nothing of any other existence and inhabits its warm, dark, watery cave with not an inkling of the great, bright world it will soon be thrust into. And we on earth have an inkling, but are really quite unable to imagine the light that we will enter, after we have survived the travail of death. If the baby could somehow be informed of what would happen to it in the near future, would it not be incredulous as well as afraid? And so are we, most of the time, but we should not be, for we have been given assurance. Even so, our blind brains cannot imagine, cannot conceive of, what we will pass into. The baby is lapped in its ignorance, in the faith of its dumb, helpless being. And we who are not entirely ignorant or entirely knowing must take care to wrap ourselves in our faith.


பிரார்த்தனை முடிந்தபின் விருந்து நடக்கிறது. ஜோனாவின் நண்பனான ஒரு டாக்டர் அறிமுகமாகிறார். பியர் உடனே திரும்ப வேண்டியிருக்கிறது. மெரியல் பக்கத்து ஊரில் இருக்கும் முதிய பெண்மணியைப் பார்க்கப் போக வேண்டும்.அந்த முதியவள் அம்மாவின் ரொம்ப நாள் சிநேகிதி. ஜோனாவின் டாக்டர் நண்பர் மெரியலைத் தனது காரில் அழைத்துச் செல்ல சம்மதிக்கிறார். முதிய பெண்மணியை மெரியல் சந்திக்கும் போது அவரும் கூட இருக்கிறார். சாதாரணமாக அவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு மெரியல் பஸ் பிடித்து படகுத் துறைக்குத் திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்ய முடியாமல் எது தடுத்தது?  ஒரு பூங்காவிற்கு ஏன் அவர்கள் போக வேண்டும்? அவர்களுக்கிடையே என்ன நிகழ்ந்தது? எதையும் அலீஸ் மன்றோ நமக்குச் சொல்வது இல்லை. பூடகமாக விட்டு விடுகிறார்.  நாம் ஒருவாறு புரிந்து கொள்கிறோம்.  சிறு பொழுதில் அவர்களுக்கு இடையே ஒரு நெருக்கம் கூடி வந்திருப்பதை. விசைப்படகுத் துறையில் டாக்டர் அவளைக் கொண்டு விட்டுவிட்டு விடைபெறுகிறார். இரண்டு விஷயங்கள் அவளுக்கு உறுதியாகத் தோன்றியது. பியருடையதான அவளது மண வாழ்க்கை தொடரும். இனி ஒருபொழுதும் அந்த டாக்டரை அவள் மீண்டும் சந்திக்கப் போவதில்லை.


வருடங்கள் ஓடுகின்றன. மெரியலின் கணவன் பியர் நோய்வாய்ப்படுகிறான். மெரியல் அவனுக்கு துர்கனேவின் Fathers and Sons கதையைப் படித்துச் சொல்கிறாள். அதில் வரும் ஒரு பகுதியை இருவரும் விவாதிக்கிறார்கள். அது பஸாரோவ்  அன்னாவிடம் ஆவேசத்துடன் தனது காதலை வெளிப்படுத்தும் கட்டம். பிறகு ஏதோ நினைத்துக் கொண்டவனாய் ஜோனாவின் மரணத்தின் போது சந்தித்த டாக்டரைப் பற்றி கேட்கிறான், டாக்டரோடு அவள் காரில் பயணித்ததைப் பற்றியும் கேட்கிறான். இத்தனை வருடம் கழித்து. மெரியல் இதை சாதாரணமாக எதிர்கொள்கிறாள்.  இது நடந்த சில நாட்களில் பியர் இறந்து விடுகிறான்.


முன்னதாக டாக்டர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து போனது தெரிய வருகிறது. மெரியலுக்கு டாக்டரோடு கழித்த நாள் நினைவிற்கு வருகிறது. ஒரு தேர்ந்த திரைப்பட எடிட்டரைப் போல கதையை முன்னும் பின்னுமாக வெட்டிச் சுவைபடச் சொல்கிறார் அலீஸ் மன்றோ.


மெரியலின் வாழ்வில் மின்னல் வெட்டி மறைந்தது போல் தான் டாக்டரோடு இருந்த தினம்.

இயல்புக்கு மாறாக அவள் அதிகம் பேசிய தினம் அது. டாக்டர் மிகக் குறைவாகவே அன்று பேசினார். அன்று அவள் கொண்ட ஆர்வம் மற்றும் பரபரப்பு இன்று நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது. ஏதோ ஒருவிதமாக அது தேவைப்பட்டிருக்கிறது.


அலீஸ் மன்றோவின் Runaway என்ற கதைத் தொகுப்பை வாங்கியிருக்கிறேன். படிக்க வேண்டும்.










                           



Comments

  1. பதிவைப் படித்தேன். மேல் நாட்டு எழுத்தாளர்களின் கதைகளைப் படிக்க ஒரு தூண்டுதலாக இருந்தது. நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...