Skip to main content

இன்மையின் இரவு





Tonight I can write the saddest lines.

Write for example, "The night is shattered

And the blue stars shiver in the distance
The night wind revolves in the sky and sings.

Tonight I can write the saddest lines.
I loved her, and sometimes she loved me too.

Through nights like this one I held her in my arms
I kissed her again and again under the endless sky.

She loved me sometimes, and I loved her too.
How could one not have loved her great still eyes.

Tonight I can write the saddest lines.
To think that I do not have her. To feel that I have lost her.

To hear the immense night, still more immense without her.
And the verse falls to the soul like dew to the pasture.

What does it matter that my love could not keep her.
The night is shattered and she is not with me.

This is all. In the distance someone is singing. In the distance.
My soul is not satisfied that it has lost her.

My sight searches for her as though to go to her.
My heart looks for her, and she is not with me.

The same night whitening the same trees.
We, of that time, are no longer the same.

I no longer love her, that's certain, but how I loved her.
My voice tried to find the wind to touch her hearing.

Another's. She will be another's. Like my kisses before.
Her voide. Her bright body. Her inifinite eyes.

I no longer love her, that's certain, but maybe I love her.
Love is so short, forgetting is so long.

Because through nights like this one I held her in my arms
my soul is not satisfied that it has lost her.

Though this be the last pain that she makes me suffer
and these the last verses that I write for her.


Pablo Neruda


இன்று  இரவு துயரம் மிகுந்த வரியை நான் எழுதக் கூடும்


சான்றாக இப்படி, 

“இரவு நொறுங்கிப் போனது, மேலும் நீல நட்சத்திரங்கள் தொலை தூரத்தில் நடுங்குகின்றன” 


இரவுக் காற்று வானில் சுழன்றபடி பாடுகிறது


இன்று இரவு நான் மிகுந்த துயரமான

வரிகளை எழுதக் கூடும்

நான் அவளை நேசித்தேன்.

சில பொழுது அவளும் என்னை


இது போன்ற இரவுகளில் நான் அவளைக் கைகளில் ஏந்தி இருக்கிறேன்

முடிவற்ற ஆகாயத்தின் கீழே மீண்டும் மீண்டும் அவளை முத்தமிட்டிருக்கிறேன் 


சில பொழுது அவள் என்னை விரும்பினாள்

நானும் கூட அவளை..

அவளுடைய பெரிய, அமைதியான கண்களை யார்தான் நேசிக்காமல் இருக்க முடியும்?


இன்று இரவு நான் மிகுந்த துயரமான வரிகளை எழுதக் கூடும்

அவள் என்னுடன் இல்லை என்பதை நினைத்து

நான் அவளை இழந்து விட்டேன் என்பதை உணர்ந்து


பெருகி வரும் இந்த இரவைக் கேட்பதற்கு

அவளது இன்மையால் இன்னமும பெருகும் இந்த இரவை….

பனித் துளி நிலத்தில் விழுவது போல்

பாடல் உயிரின் மீது விழுகின்றது 


எனது காதல் அவளை எனக்காக்க வில்லை

என்பது ஒரு விஷயமா என்ன?

இரவு நொறுங்கிப் போனது

அவளும் என்னோடு இல்லை

இவ்வளவு தான்


தொலைவில் யாரோ பாடுகிறார்கள்

தொலைவில்….

எனது உயிருக்கு நிறைவில்லை,அவளை இழந்து விட்டேன் என்பதில்


எனது பார்வை அவளைத் தேடுகிறது

ஏதோ அவளிடம் போக வேண்டும் என்பது போல

எனது இதயம் அவளைத் தேடுகிறது, அவள் என்னோடு இல்லை என்ற போதும்


அதே இரவு மரங்களில் வெண்மை சேர்க்கிறது

நாங்கள் அப்பொழுது முன்பிருந்தவர்களாக இல்லை


இனியும்  நான் அவளை நேசிக்கவில்லை என்பது உறுதி,  ஆனால் அவளை எப்படி எல்லாம் நேசித்தேன்

எனது குரல் காற்றைத் தேடுகிறது

அவள் காதில் ஒலியாகத் தொடும் காற்றை


இன்னொருவனுடையவள்

அவள் இனி இன்னொருவனுடையவள்

என்னுடைய முந்தைய முத்தங்கள் போல.

அவளுடைய வாசம்

அவளுடைய ஒளி பொருந்திய உடல்

அவளுடைய முடிவில்லாத கண்கள் 

இன்னமும் நான் அவளை நேசிக்கவில்லை

இல்லை..அவளை நேசிக்கிறேனோ என்னவோ?

காதல் என்பது சில நாள்

மறத்தல் என்பது பல நாள்


இது போன்ற இரவுகளில் அவள் என் கைகளில் இருந்ததனால்

எனது உயிர் அவளை இழந்து போனதில் நிறைவுறவில்லை


இது அவள் நான் துடிதுடிப்பதற்கெனத் தந்த கடைசி வலியாக இருக்கலாம் 

ஆனாலும் இவையே நான் அவளுக்காக எழுதும் கடைசிக் கவிதைகள்


தமிழில்

தி சந்தானம்



Comments

  1. 'இன்மையின் இருள்' - நல்ல தலைப்பு. இல்லாமை, அதுவும் இருந்து பின் இல்லாதிருப்பதின் நீட்சி தனிமை. நினைவுகளை பின் நோக்க வைக்கும் தனிமை.
    பி.கு. இன்மை என்றவுடன் முதலில் நினைவுக்கு வந்தது 'இன்மையில் நன்மை தருவார் கோவில்' - ஆனால் அது இம்மை என்பது மருவி இன்மை ஆனது. ஏதாவது ஒரு வகையில் மதுரையின் நினைவுகள் :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி சீனு. இம்மை என்றுதான் சொல்கிறார்கள். இன்மையில் நன்மை என்று சொல்வதும் சுவாரஸ்யமாக இருக்கிறது

      Delete
    2. இன்மையின் இரவு இன்மையின் இருள் ஆனதைப் போல.

      Delete
  2. கவிதை அனுபவம் ஆகும் போது அது வேறு வேறு வரிகளை மனதில் எழுதிப் போகிறது. அதிலும் ஒரு சுவாரஸ்யம்

    ReplyDelete
  3. I meant 'இன்மையின் இரவு' in my first comment - the original title.

    ReplyDelete
  4. One of the best translations that carries the essence of the poetic original. This is one of my favourites. Very involved soulful take on the original.

    ReplyDelete
    Replies
    1. Thanks Janani. Yes it is hard to bring out the essence of the original. Something gets lost in the translation

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...