To brood
translated from the Farsi by Haleh Liza Gafori
To brood is to wander through a grove
where one sheep strays
and a hundred wolves follow.
Why did I make brooding my vocation
when awe was an option?
சிந்திப்பது என்பது ஒரு தோப்பின் ஊடே அலைவது போல
அங்கே ஒரு ஆடு வழி மாறிப் போனால்
ஒரு நூறு ஓநாய்கள் பின் தொடரும்
சிந்திப்பதை ஏன் நான் தொழிலாகக் கொண்டேன்?
வியந்து போய் நிற்பது என்று ஒரு தேர்வு இருக்கும் போது.
Jalal al-Din Rumi
Let’s love each other
translated from the Farsi by Haleh Liza Gafori
Let’s love each other,
let’s cherish each other, my friend,
before we lose each other.
You’ll long for me when I’m gone.
You’ll make a truce with me.
So why put me on trial while I’m alive?
Jalal al-Din Rumi
நேசித்தல்
நாம் ஒருவரை ஒருவர் நேசிப்போம்
நாம் ஒருவரை ஒருவர் விரும்புவோம்
எனது நட்பே
நாம் ஒருவரை ஒருவர் இழக்கு முன்
நான் போன பிறகு நீ எனக்காக ஏங்குவாய்
நீ என்னுடன் சமாதானமாகப் போய் விடுவாய்
எனவே நான் உயிரோடு இருக்கும் போதே
என் மேல் எதற்கு வழக்கு?
இறந்த போது
கல்லாய் மடிந்தேன் செடியாய் எழுந்தேன்
செடியாய் மடிந்தேன் விலங்காய் எழுந்தேன்
விலங்காய் மடிந்தேன் மனிதனாய் எழுந்தேன்
நான் ஏன் அஞ்ச வேண்டும்?
இறந்ததால் நான் இழந்ததென்ன?
பறவைகளின் பாடல்
பறவைகளின் பாடல்
எனது தவிப்புக்கு
அமைதி கொண்டு வருகிறது
அவற்றைப் போலவே
நான் களிப்புறுகின்றேன்
சொல்ல ஏதுமின்றி…..
உலகளாவிய உள்ளங்களே!
ஒரு பாடலை
அல்லது ஏதாவதை
என் வழியாகப்
பயிலுங்களேன்…
ஆங்கிலம் வழியாகத் தமிழில்
தி சந்தானம்
Note
No copyright infringement intended in
Displaying the portrait of Rumi and reproducing the English translation of Haleh Liza Gafori
Display and reproduction with due acknowledgement to the original creators/translator
மொழி பெயர்ப்பு அருமை."சிந்திப்பது ஏன் தொழில்'👌
ReplyDeleteநன்றி மதி
Deleteபாடல் அருமை. மொழி பெயர்ப்பும். அருமை.
ReplyDeleteநன்றி ராம்
Deleteஅருமை பாடலும் மொழி பெயர்ப்பும் !
ReplyDeleteநன்றி சீனு
DeleteSuch a treasure trove of poems and a translation that retains the original essence.
ReplyDeleteThanks Janani
Delete