Skip to main content

தரையைத் தழுவும் மொட்டு

 


சில நாட்களாகவே ரூமியின் பாடல்களில் கவனம் குவிந்தது. ரூமி என்று அழைக்கப்படும் ஜலாலுதீன் ரூமி ஒரு சூஃபி அறிஞர். சூஃபி என்பது கடவுளுடன் ஆன அன்பு. கடவுளை ஒவ்வொருவரும் தானே அனுபவித்து அறிவது. அது ஒரு தெய்வீக உறவு.

ரூமியின் கவிதைகள் பெரும்பாலும் பாரசீக மொழியில் எழுதப்பட்டவை. 


சில கவிதைகளைத் தமிழில் செய்தேன். அவற்றைப் பார்க்கலாம்.


Your laughter turns the world to paradise

Jalal al-Din Rumi


translated from the Farsi by Haleh Liza Gafori


Your laughter turns the world to paradise.
It tears through me like fire.
It teaches me.


Reborn in emptiness,
I emerge laughing,
here to learn from Love
new depths of laughter.


I’ve been short on courage,
but I have a heart of sunlight,
straight from the king’s hand.
I stir up laughter even in those who fear joy.


Crack open my shell. Steal the pearl.
I’ll still be laughing.
It’s the rookies who laugh only when they win.


Last night, the spirit of dawn came to my room
and gave me a lesson in laughter.
Our blazing roars lit the morning sky.


When I brood like a rain cloud,
laughter flashes through me.
It’s the habit of lightning to laugh through a storm.


Look at the furnace. Look at the stones.
See the glowing red veins?
Gold—laughing in fire, daring you,


Prove you’re no fake!
Laugh even when you lose.”


We’re fodder for death so learn to laugh
from the angel of death.
He laughs at the jeweled belts and crowns of kings…

all that splendor’s just on loan.


Treetop blossoms erupt in laughter.
Petals rain down.


Laugh like the bud of a flower,
hugging the ground.
Its hidden smile opens to a laugh that lasts a lifetime.


From Gold by Rumi. Translated from the Farsi by Haleh Liza Gafori. 



உனது சிரிப்பு


உனது சிரிப்பு உலகத்தை சொர்க்கமாக மாற்றுகிறது

அது நெருப்பைப் போல எனக்குள்ளே கிழிபட்டுச் செல்கிறது

அது எனக்குக் கற்றுத் தருகிறது

வெறுமையில் மறுபடி பிறந்த நான்

சிரித்துக் கொண்டே வருகிறேன் இங்கே

காதலிடமிருந்து சிரிப்பின் புதிய ஆழங்களை கற்றுக் கொள்ள

எனக்கு தைரியம் குறைந்து போனது 

ஆனால் எனக்குக் கதிரொளி போல ஒரு இதயம் இருக்கிறது

அரசனின் கையிலிருந்து நேரே வந்தது போல

மகிழ்ச்சியை அஞ்சுபவர் இடையே கூட

நான் சிரிப்பைக் கிளப்பி விடுகிறேன்

எனது ஓட்டை உடைத்துத் திறந்து 

முத்தைத் திருடி விடு

அப்போதும்  நான் சிரித்த வண்ணம் இருப்பேன்

புதிதாக ஆடுபவர்கள் வென்றால் மட்டுமே சிரிப்பார்கள்

நேற்று இரவு உதயத்தின் ஆவி எனது அறையில் இறங்கியது

அது சிரிப்பைப் பற்றி ஒரு பாடம் எடுத்தது

எரியும் எமது கர்ஜனைகள் காலை ஆகாயத்தில் ஒளியேற்றியது

நான் மழை மேகம் போல சிந்தனை வயப்படும் போது சிரிப்பு எனக்குள்ளே மின்னலைப் போல வெட்டுகிறது 

புயலின் ஊடே சிரிப்பது என்பது மின்னலின் வழக்கம் 


கணப்பைப் பார். கற்களைப் பார்

சிகப்பாக ஒளிரும் ரத்த நாளங்களைப் பார்

தங்கம்- நெருப்பில் சிரிக்கும் தங்கம்

எனக்கு அறைகூவல் விடுக்கிறது

“நீ போலி அல்ல என்பதை நிரூபி

நீ  சிரி உன்னை இழந்தாலும்


நாம் சாவிற்கு உணவாவோம் 

எனவே மரணத்தின் தேவனிடமிருந்து  சிரிக்கக் கற்றுக் கொள்


அவன் அரசர்களின் மணி முடியின் மீது சிரிக்கிறான், 

ரத்தினம் பதித்த அரைஞாண் மீது

இரவல் வாங்கப்பட்ட அவற்றின் ஒளி மீது


மரத்தின் உச்சியில் முகிழ்த்தவை எல்லாம்  வெடித்துச் சிரிக்கின்றன 

இதழ்கள் மழையாகப் பொழிகின்றன

ஒரு மலரின் மொட்டைப் போலச் சிரி

தரையைத் தழுவும் மலர் மொட்டு….


மறைந்திருக்கும் அதன் புன்னகை

வாழ்நாள் முழுதும் நீடிக்கும் சிரிப்பாக வெளிப்படுகிறது


ஆங்கிலம் வழியாகத் தமிழில்


தி சந்தானம்


Note. No copyright infringement intended in Displaying the portrait and reproducing the English translation.

Due acknowledgement to the original crators/translator










Comments

  1. சூபி கவிதையின் ஆழமான கருத்து. ஆங்கிலம் படித்தாலும் அருமையான மொழி பெயர்ப்பு. புதிய விஷயங்களை த் தெரிந்து கொள்ள உதவியதற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம் படித்துவிட்டு எழுதியதற்கு

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...