ஹான் ஷான் என்ற சீனக் கவியின் Cold Mountain தொகுப்பிலிருந்து மேலும் சில கவிதைகளைப் பார்க்கலாம்
Bright water shimmers like crystal,
Translucent to the furthest depth.
Mind is free of every thought
Unmoved by the myriad things.
Since it can never be stirred
It will always stay like this.
Knowing, this way, you can see,
There is no within, no without
ஒளி பொருந்திய தண்ணீர்
ஸ்படிகம் போல் மின்னுகிறது.
வெளிச்சம் அதன் ஆழங்களில்
ஊடுருவியிருக்கிறது
மனம் ஒவ்வொரு எண்ணத்திலிருந்தும்
விடுபட்டு இருக்கிறது
பலபலவான எண்ணங்கள் அதில் சலனம் செய்ய முடியாது
அதனால்
அப்படித்தான் அது எப்போதும் இருக்கும்
தெரிந்து கொள் இந்த வழியை
உள்ளே என்றும் வெளியே என்றும் ஏதும் கிடையாது
Are you looking for a place to rest?
Cold Mountain’s good for many a day.
Wind sings here in the black pines,
Closer you are, the better it sounds.
There’s an old man sitting by a tree,
Muttering about the things of Tao.
Ten years now, it’s been so long
This one’s forgotten his way home.
ஓய்வெடுக்க இடம் தேடுகிறாயா?
குளிர் மலையே நல்லது அதற்கு
கரிய பைன் மரங்களில் காற்று பாடுகிறது
பக்கத்தில் நெருங்க நெருங்க பாடல் நன்றாக ஒலிக்கும்
பழைய மனிதன் ஒருவன் மரத்தடியில் அமர்ந்திருக்கிறான்
அவன் தாவோவைப் பற்றிச் சிலதை முணுமுணுக்கிறான்
பத்து வருடங்கள் ஆயிற்று, மிக நீண்ட நாட்கள்
இவன் வீட்டுக்குப் போகும் வழியை மறந்தாயிற்று
Cold rock, no one takes this road.
The deeper you go, the finer it is.
White clouds hang on high crags.
On Green Peak a lone gibbon’s cry.
What friends do I need?
I do what pleases me, and grow old.
Let face and body alter with the years,
I’ll hold to the bright path of mind.
பனிப் பாறை,
யாரும் இந்த வழி வருவதில்லை
ஆழத்தில் செல்லச் செல்ல,
அத்தனை அற்புதம்
நெட்டைப் பாறைகளில் தொங்கும் வெள்ளை மேகங்கள்
பச்சை சிகரத்தில் தனித்தொரு மந்தியின் குரல்
எனக்கு ஏன் நண்பர்கள் தேவை?
நான் விரும்பியதைச் செய்கிறேன்
எனக்கு வயதாகிறது
முகமும் மேனியும் வருடங்கள் தோறும் மாறுகிறது
மனதின் பாதையில் வெளிச்சம் கூடும்
நான் பாதையிலிருந்து மாற மாட்டேன்
தமிழில்
தி சந்தானம்
ஆழ்ந்த கருத்துக்கள். அருமையான மொழி பெயர்ப்பு. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராம்
Delete