Skip to main content

மழையோடு நடந்து

 A walk in the spring rain என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். அது தற்செயலாக நடந்தது. தலைப்பிலே ஒரு கவிதை இருப்பது போல தோன்றியது. ஐம்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வந்த படம் அது. 




இந்தப் படம் பார்க்கும் வரை இன்கிரிட் பெர்க்மன் என்ற பெண்மணியைப் பற்றித் தெரியாது. A walk in the spring rain 1970ம் ஆண்டு வந்திருக்கிறது. இன்கிட் பெர்மன் இந்தப் படத்தில் தோன்றும் போது ஐம்பது வயதைக் கடந்து விட்டிருந்தார். திரைக்கதை என்னவென்றால் பெர்க்மனின் கணவர் ஒரு புத்தகம் எழுதுகிறார். அதற்கான தனிமை வேண்டி நாட்டுப்புறப் பகுதிக்கு வருகிறார்கள். வளர்ந்த மகளை ஊரில் விட்டு விட்டு. பெர்க்மன் கணவர் புத்தகம் எழுத உதவிகள் செய்கிறார். அன்டனி க்வின் அவர்கள் தங்குவதற்கு ஏற்ற வசதிகள் செய்து தருகிறார். பெர்க்மன் இவருடைய எளிய கிராமியப் பண்புகளால் கவரப்படுகிறார். இயற்கையோடு இயைந்து இருக்கிறது அந்த மனிதனின் வாழ்வு. அவனால் சின்னச் சின்னச் சந்தோஷங்கள் வாய்க்கிறது. உள்ளங்கைகளில் அணில் குஞ்சின் குறுகுறுப்பை உணர்வது போல. அழகழகாய் ஆட்டுக் குட்டிகளை கைகளில் ஏந்துவதைப் போல. அந்த நல்ல பெண்மணி இந்த மனிதனிடம் பழகுவதில் ஆர்வம் காட்டுகிறார். பழக்கம் வளர்ந்து இருவருக்கும் இடையில் அன்பு மலர்கிறது.

கதையில் சில திருப்பங்கள் ஏற்படுகிறது. சினிமாவுக்கே உண்டானவை. இறுதியில் இன்கிரிட் பெர்க்மன் கணவனோடு ஊருக்குத் திரும்பி விடுகிறார். அன்டனி க்வின் வழியனுப்பி வைக்கிறார்.


முதலாக இன்கிரிட் பெர்க்மனின் தோற்றம். ஆர்வம் ததும்பும் விழிகள். முகமெல்லாம் பரவும் புன்னகை. அந்த நாசி நுனி. 


தி.ஜானகிராமன் எழுதிய கதை அன்பே ஆரமுதே. இது கல்கி பத்திரிக்கையில் தொடராக வந்திருக்கிறது. இதைச் சேகரித்து அழகாக பைண்டு செய்து கிராமத்து வீட்டில் வைத்திருப்பார்கள். அறியாக் காலத்தில் அந்தக் கதையைப் படித்திருக்கிறேன். . பின்னால் சில வருடங்களுக்கு முன் இந்தப் புத்தகத்தைப் படித்தேன். காலச்சுவடு வெளியீடு.அதில் ருக்மிணி என்று ஒரு கதாபாத்திரம். இந்தப் பெண்மணியைப் பற்றி தி. ஜானகிராமன் இவ்வாறு எழுதியிருப்பார்.


ஒரு காலத்தில் உருண்டிருந்த அந்த முகம் கன்னச் சதைகள் குறைந்து நீண்டு விட்டது போல ஒரு தோற்றம். அந்தத் தேய்வு முகத்தின் அழகைச் செதுக்கியும் குழித்தும் இன்னும் அழகு படுத்தியிருந்தது. சற்றுத் தூக்கினாற் போன்ற நாசிநுனி. பக்கவாட்டில் பார்க்கும் போது கத்தியால் வழித்து விட்டாற் போல் வளைவு சரிவின்றி நறுக்கென்று தெரிந்தது. அவள் முகத்துக்கு அழகு கொடுத்ததே அதுதான்.அந்த நறுக்கின அமைப்பு….


தி ஜானகிராமன் சொல்லும் கத்தியால் வழித்து விட்டாற் போல என்ற சொற்பிரயோகம் இன்கிரிட் பெர்க்மனின் நாசி நுனியை வர்ணிப்பது போலவே இருக்கிறது.


நீரோடை போலவே என் பெண்மை என்று ஒரு பாட்டு வரி உண்டு. இவரைப் பார்க்கும் போது அதன் பொருள் புரிந்தது. மேலதிகமாக திரைப்படத்தில் ஒரு கட்டத்தில் அன்டனி க்வின் இப்படிச் சொல்வார். There is lot of woman left in you.

ஆமாம் அந்தப் பெண்மை ஒரு பெரிய உண்மை.


ஒரு காட்சியில் இன்கிரிட் பெர்கமனை அன்டனி க்வின் முத்தமிடுவார். அழகான ஒளியமைப்போடு அந்தக் காட்சி அமைந்திருக்கும். அன்டனி க்வின் திறமையான நடிகர் தான். The Guns of Navarone படத்தில் ஒரு சின்னக் காட்சியில் பிரமாதப் படுத்தியிருப்பார். மேலும் Umar Mukthar திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் தான். ஆன போதிலும் இந்தத் திரைப்படத்தில் இன்கிரிட் பெர்க்மனை அன்டனி க்வின் முத்தமிட்டதில் எனக்குச் சம்மதமில்லை. நம்மைக் கேட்டா இதெல்லாம் நடக்கும். அதே நேரத்தில் கிரிகிரி பெக்கோடு இன்கிரிட் பெர்க்மன் நடித்த இது போன்ற காட்சிகள் உறுத்தலாக இல்லை. இளமையும் ஆனந்தமும் ததும்பி வழிகின்றன அந்தக் காட்சிகளில்.


இன்கிரிட் பெர்க்மனின் ஆரம்ப காலப் படங்களில் ஒன்று Casablanca. நாற்பதுகளில் வந்திருக்கிறது. அதில் ஒரு காட்சி மனதை மிகவும் கவர்ந்தது. பியானோவில் ஒரு குறிப்பிட்ட பாடலை வாசித்துக் காட்டும்படி கெஞ்சலோடு கேட்கிறார்.


காட்சியைப் பாருங்களேன்




As time goes by என்ற அந்தப் பாடல் வரிகள் இவ்வாறு

You must remember this A kiss is just a kiss, a sigh is just a sigh.The fundamental things apply As time goes by.And when two lovers woo They still say, "I love you." On that you can rely No matter what the future brings As time goes by.Moonlight and love songs Never out of date.Hearts full of passion Jealousy and hate.Woman needs man And man must have his mate That no one can deny.It's still the same old story A fight for love and glory A case of do or die.The world will always welcome lovers As time goes by.Oh yes, the world will always welcome lovers As time goes by.


பாடல் வரிகளும் காட்சியும் மனதைத் தொடுகிறது அல்லவா?


Comments

  1. அருமை. பகிர்தலுக்கு நன்றி சந்தானம். தி ஜா வோட அம்மா வந்தாள் ல அப்பு அவ அப்பா சொன்னான்னு ப்ரூஃப். ரீடிங்க்கு ஒரு ஆத்துக்கு போவான், அங்க இருக்கற பொண்ண அவன் வார்த்தையில் இப்படி சொல்வார், " அழகான கோலத்தை நிமிர்த்து நிறுத்தியது போலிருந்தாள்" நு 🙂

    ReplyDelete
  2. தி ஜா ரா கதை படித்த நினைவிருக்கிறது. பெர்க்மென் என்ற பெண்மணியைப் பற்றி சற்று விவரமான நல்ல பதிவு. இதெல்லாம் படிக்க சாதாரண மாக வாய்ப்பு கிட்டாது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி படித்து விட்டு எழுதியதற்கு

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...