கவிதை போகும் பாதையில் போவது சுகமாக இருக்கிறது. போகப் போக வழி வளர்கிறது. புதிதாகப் புதிதாக ஏதேதோ அர்த்தம் ஆகிறது. உடனே உடனே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று மனது துடிக்கிறது. எனது மொழியில் அதை மாற்றிப் பார்ப்பதில் என்னவோ ஒரு நிறைவு காண்கிறது.
I ask you this:
Which way to go?
I ask you this:
Which sin to bear?
Which crown to put
Upon my hair?
I do not know,
Lord God,
I do not know.
Langston Hughes
நான் உன்னைக் கேட்கிறேன்
எந்த வழியில் போக?
நான் உன்னைக் கேட்கிறேன்
எந்தப் பாவத்தை சுமக்க?
எந்த முடியைத் தலை மேல் சூட?
எனக்குத் தெரியவில்லை
பெரிய கடவுளே!
எனக்குத் தெரியவில்லை
தமிழில்
தி சந்தானம்

Wow 👏👌
ReplyDeleteThank you
Deleteஅருமை.
ReplyDelete*பெரிய* கடவுளே
வேறு பதம் உபயோகித்திருக்கலாமே.
பெரிய கடவுள் காக்க வேண்டும் என்பது பாரதியின் சொல்.. அதை இந்த இடத்தில் எடுத்தாளுவது சரி என்று தோன்றியது.
Deleteஅருமை !
ReplyDeleteபடித்தபின் எனக்குத் தோன்றியது
எந்த வழியில் போக
மூடாத சொர்க்கத்தின்
வாசல் தேடி
ஊர்வலமாய் போகும்
பறவைகள் வழி
பின் போக !
- சீனு
நன்றி கவிதையிலிருந்து வந்த கவிதைக்கு
Delete