Skip to main content

பறவையின் குழப்பம்

 




“வாழ்க்கை என்பது ஒருவர் வாழ்ந்து விட்டது அல்ல. வாழ்க்கை என்பது ஒருவர் எதை ஞாபகம் கொள்கிறாரோ, அதை எப்படி ஞாபகத்தில் கொண்டு சொல்கிறாரோ அது. “


கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் சுயசரிதை எழுதினார். அது Living to Tell the Tale என்பது. அந்த புத்தகத்தில் முதலாக இந்த வரிகள் காணப்படுகிறது. பின்னாட்களில் அவர் ஞாபகங்களோடு போராடினார். அவருக்கு மறதி நோய் ஏற்பட்டது. அவர் செல்வாராம். நான் ஞாபகத்தை இழந்து கொண்டிருக்கிறேன். அதிர்ஷ்ட வசமாக நான் அதை இழக்கிறேன் என்பதையே மறந்து போகிறேன். சுற்றிலும் பழகிய முகங்கள் இருந்தாலும் சமயங்களில் தனது மகன்களையே அவர் மறந்து போகிறார். அவருக்குப் பிரியமான மஞ்சள் ரோஜாவையும் கூட. ஒருமுறை அவரது செயலாளர் அவரிடம் கேட்டார். அந்த மதிய நேரத்தில் மார்க்வெஸ் தோட்டத்தில் இருந்தார். “ இங்கே என்ன செய்கிறீர்கள், கேப்ரியல்?” அதற்கு அவர் சொன்னார். “நான் கண்ணீர் சிந்தாமல் அழுது கொண்டிருக்கிறேன். உனக்குப் புரிகிறதா? எனது மண்டையில் இப்போது வெறும் மலக் குப்பை”


ஞாபகங்களிலிருந்தே எழுத்தாளன் எழுதுகிறான். கேப்ரியலோ கொஞ்சம் கொஞ்சமாக ஞாபகங்களை இழந்து கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் ஒரு நாவலுக்காக குறிப்புகளை எழுதி வைத்திருந்தார்.


அது Until August என்ற நாவல். இந்த நாவல் பதிப்பிக்கத் தகுதியற்றது என்று அவர் கருதினார். தனது இறப்பிற்குப் பின்னால் கூட இதைப் பதிப்பிக்கக் கூடாது என்று சொல்லியிருந்தார். அதற்கு மாறாக அவரது வாரிசுகள் இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்தார்கள். முன்னுரையில் அவர்கள் சொல்கிறார்கள். “மங்கிய நினைவுகள் காரணமாக அவர் இதைச் சரியாக எழுதி முடிக்கவில்லை. அதே மங்கிய நினைவுகள் இது ஒரு நல்ல நாவல் என்று கணிக்க முடியாமல் செய்திருக்கவும் கூடும். அவருடைய வாசகர்கள் இதைப் படித்து மகிழட்டும் என்ற எண்ணத்தில் அவருடைய ஆணையை மீறி இந்தப் புத்தகத்தை வெளியிடுகிறோம்.”


Until August என்ற புத்தகத்தை நான் படித்தேன். அன்னா மக்தலேனா நாயகி. நடுத்தர வயதுப் பெண்மணி. இரண்டு குழந்தைகளுக்குத் தாய். குடும்பம் கணவர் குழந்தைகள் என்று வாழ்க்கை. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் ஒரு தீவுக்குத் தனியே வருகிறாள். அங்கேதான் அவளுடைய அம்மாவின் கல்லறை இருக்கிறது. அதே விசைப் படகு. அவளை அழைத்துச் செல்ல அதே டாக்ஸி டிரைவர். தங்க அதே ஹோட்டல். அம்மாவின் கல்லறையில் வைப்பதற்கு அதே மலர்க்கடையில் அதே மலர்க்கொத்து. இது பல வருடங்களாக நடப்பது. ஆனால் இந்த தடவை என்ன மாறியது? 


இரவு நேரம். சாப்பாட்டு மேஜையில் அன்னா ஜின் அருந்திக் கொண்டிருக்கிறாள். அப்போது பக்கத்து மேஜையில் மது அருந்தும் அவனைப் பார்க்கிறாள். அவனுடைய மேஜைக்கு செல்கிறாள். பேச்சுக் கொடுக்கிறாள். தனது அறைக்குச் செல்கிறாள். கதவைத் தாழிடவில்லை. அவன் வருகிறான். கூடுகிறார்கள். அவள் உறங்கி விழிக்கிறாள். தலை கனக்கிறது. அவள் படிக்கும் திகில் புத்தகத்திற்கு நடுவே இருபது டாலர் கரன்ஸிகள் செருகப்பட்டிருக்கின்றன. மனம் நொறுங்கிப் போகிறாள். 


வருடா வருடம் அன்னையின் நினைவு நாளன்று தீவுக்கு வருகிறாள். தங்கும் இடத்தை மாற்றுகிறாள். முன்னறியாத யாரோ ஒருவனிடம் பழக்கம் கொள்கிறாள் என்று கதை வளர்கிறது. 


ஒரு வருடம் ஆகஸ்ட் மாதம் அன்னா மக்தலேனா அந்நியனோடு கொள்ளும் ஒரு நாள் பழக்கத்துக்கு முடிவு கட்டுகிறாள். அம்மாவின் கல்லறையைத் தோண்டச் செய்கிறாள். மிச்சம் இருக்கும் எலும்புகளைத் திரட்டிக் கொண்டு ஊர் திரும்புகிறாள்.


கதையை முழுதும் படித்து முடித்த பின்பு மார்க்வெஸ் இந்தக் கதையை ஒரு பொழுதும் பதிப்பிக்கலாகாது என்று சொன்னது சரியே என்று தோன்றியது.


இவர் எழுதிய நூற்றாண்டுத் தனிமை (Hundred years of Solitude) Netflix series ஆக வருகிறது என்று கேள்விப்பட்டேன்.


நூற்றாண்டுத் தனிமையில் இப்படி ஒரு வரி.


“so hot that birds in their confusion were flying into walls... and breaking through screens to die in the bedrooms”


Until August என்ற கதையைப் படித்து முடித்த போது இந்த வரிகள் தந்த சித்திரம் மனதில் நிழலாடியது.






Comments

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...