Skip to main content

கரை காணாப் பறவை

 



வெங்கண்திண் களிறடர்த்தாய்

 வித்துவக்கோட்டு அம்மானே!

எங்குப் போய் உய்கேன் உன்

இணையடியே அடையல் அல்லால்

எங்கும் போய்க் கரை காணாது 

எறிகடல் வாய் மீண்டேயும் 

வங்கத்தின் கூம்பேறும் 

மாப்பறவை போன்றேனே 


குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழி


பறவை ஒன்று பாய்மரக் கொடியிலிருந்து பறந்து செல்கிறது. கீழே கடல் நீர் அசைந்தபடி இருக்கிறது. எந்தப் பக்கம் பறந்தாலும் பறவையால் கரையைக் காண முடியவில்லை. மீண்டும் அது பாய்மரக் கொடியின் உச்சிக்கே வந்து சேருகிறது. அது போலவே வித்துவக்கோட்டில் உறையும் எனது இறைவனே! வலிமையான யானையைக் கொன்றவனே! உனது திருவடியை அடையாமல் நான் எங்கு சென்று வாழ்வேன்? எங்கு சுற்றி அலைந்தாலும் உன் இணையடியே வந்து சேர்வேன். 


“தருதுயரம் தடாயால் உன்சரண் அல்லால் சரண் இல்லை “என்று துவங்கி வரும் பத்து பாசுரங்களில் மேலே கண்ட பாசுரம் ஒன்று.

எல்லாமே அற்புதமான பாசுரங்கள். தாய் சினந்தாலும் அவள் முழங்காலையே வந்து கட்டிக் கொள்ளும் குழந்தை. மருத்துவன் வாளால் அறுத்தாலும் சுட்டாலும் அவனையே நம்பி இருந்து அன்பு பூணும் நோயாளி. கதிரவனின் தழல் எரித்தாலும் அவனையே நோக்கி மலரும் தாமரை. எங்கு பறந்தும் திசை அறியாது, கரை காணாது மீண்டும் பாய்மரக் கம்பத்தின் உச்சியிலேயே வந்து அமரும் பறவை. இப்படி எத்தனை எத்தனை அழகான உவமைகள்.


வைணவத்தில் இறைவனையே புகல் என்று பற்றுதல் உயர்ந்த நெறியாகக் கொள்ளப்படுகிறது. அதை சரணாகதி அல்லது பிரபத்தி என்று கூறுவர். பெருமானின் திருவடியில் தஞ்சம் புகுதலே சரணாகதி. 


“எல்லா அறங்களையும் கைவிட்டு நீ என்னையே சரண் புகுக. நான் உன்னை எல்லாப் பாவங்களில் இருந்தும் வி்டுவிக்கிறேன்.” இது கீதையில் கண்ணன் சொன்னது. இதை இறுதி வாக்கியம் அல்லது ச்ரம சுலோகம் என்று கூறுவர்.


ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய மாம்ஏகம் சரணம்வ்ரஜ 

அஹம் த்வாம் சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச:


என்பது தான் அது. இந்த சுலோகத்தை கீதை வெண்பா அழகுத் தமிழில் பின்வருமாறு சொல்கிறது.


எல்லா அறங்களையும் விட்டொழித்திங் கென்றனையே

நல்லாய் சரண் புகுக, நானுன்னை அல்லல்தரு 

பாவங்கள் களின்முற்றும் பற்றறவே விடுவிப்பேன் 

மேவுதுயர் எல்லாம் விடு


அவனைத் தவிர வேறு புகல் இல்லை. அவனது பாதங்களையே பற்றுக. எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபடுக. இவ்வாறு குலசேகர ஆழ்வார் பத்து பாசுரங்களில் சொல்கிறார். உணர்ச்சி மேலிட ஆழ்வார் அழகான பாசுரங்களில் பேசுவது கண்களில் நீர் கட்டச் செய்கிறது.


ஆழ்வார்கள் பற்றி அரவிந்தர் பாரதி மூலம் அறிந்திருக்கிறார். குலசேகராழ்வாரின் குறிப்பிட்ட இந்தப் பத்துப் பாசுரங்களை அரவிந்தர் Refuge என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அது ஆர்யா இதழில் வெளியிடப் பெற்றது.


நாமும் ஒரு எளிய முயற்சியாக மேலே கண்ட பாசுரத்தை ஆங்கிலத்தில் செய்தோம்.



From the cone of the mast

The bird flies and flies

Over the tossing sea

Nowhere it finds the shore

And returns to the mast of the ship

I am like this bird.

I take refuge in your feet

Where else shall I go?

Oh slayer of the strong elephant

With wild eyes!

The Lord of Thiruvithuvakodu


Kulasekara Alwar Perumal Thirumozhi

In English

T Santhanam



உதவிய நூல் 

இந்திய இலக்கியச் சிற்பிகள்

குலசேகர ஆழ்வார்

சாகித்ய அகாடமி வெளியீடு


















Comments

  1. இது 200வது பதிவு. தொடர்ந்து படித்து ஆதரிப்பமைக்கு நன்றி

    ReplyDelete
  2. தமிழ் விரிவுரையும் ஆங்கில மொழி பெயர்ப்பும் சிறப்பு, சந்தானம்.
    இலக்கியம், சங்கீதம், பக்திமார்க்கம் என்று பல்கலையிலும் உன்னுடைய ஆர்வமும் திறனும் மெச்சத்தக்கது!
    Keep rocking and thanks for sharing!

    ReplyDelete
    Replies
    1. Thank you. யாரென்று தெரியவில்லையே..

      Delete
  3. 200 வது பதிவுக்கு எனது வாழ்த்துக்கள். மென்மேலும் சிறக்க வேண்டும். ஆர்வமும் பாராட்டத்தக்கது.இந்த பதிவில் மொழி பெயர்ப்பு அருமை நான்கு நாள் முன்னர் தான் திரு வேலுக்குடி அவர்கள் திருவித்துவக்கோடு திவ்யதேசத்தைப் பற்றி சொல்ல கேட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமனாதன் தொடர்ந்து படித்து ஊக்குவிப்பதற்கு. வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி.

      Delete
  4. Double century க்கு வாழ்த்துக்கள்.
    மொழிபெயர்ப்பு அருமை.

    ReplyDelete
  5. After sending only I realized that it has gone as anonymous! Vaidyanathan

    ReplyDelete
  6. அருமை. 200க்கு வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...