ஒரு சமயம் ஏழு நாட்கள் பேசாமல் இருந்தேன். மனம் கொந்தளித்து கொந்தளித்து அடங்கியது. நுரைப் பூக்களைப் போல் வார்த்தைகள் மலர்ந்தன. மறைந்தன. இருந்தாற் போல் சிரிப்பாக வந்தது. காரணம் இல்லாமல் அழுகை வந்தது. சிரிப்பு பாதி அழுகை பாதி என்ற பாட்டு ஞாபகம் வந்தது. வார்த்தைகள் உறைந்து கிட்டித்துப் போனது. மனம் அடங்கியது போல் ஆனது. மெளனம் நல்லது. விசித்திரமானது அது..
லாவோட்சு சீனத்து அறிஞர். 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கிறார். ஞானம் உரைப்பது அவர் வார்த்தைகள். அவை எல்லாம் தாவோ தே ஜிங் என்று நூலாகத் தொகுக்கப் பட்டிருக்கிறது. சிலவற்றைப் பார்க்கலாம்.
கதவை மூடு
தெரிந்தவன் பேச மாட்டான்
பேசுபவன் அறிய மாட்டான்
திறப்பை எல்லாம் அடைத்து விடு
கதவை எல்லாம் மூடி விடு
கூர்மை எல்லாம் மழுங்க அடி
முடிச்சை எல்லாம் நெகிழ்த்து விடு
ஒளியை எல்லாம் குறைத்து விடு
பழைய பாதைகளில் செல்
இது தான் மர்மமான ஒருமை
அதை நீ கொள்ள முடியாது
அதிலிருந்து நீ தப்பவும் முடியாது
அதற்குப் பயன் தர முடியாது
அதனை இடர் செய்யவும் முடியாது
அதனை ஏத்தவும் முடியாது
தாழ்த்தவும் முடியாது
அதன் ஆதிக்க எல்லை முழுதும் அது மதிக்கப்படும் தான்
அறிவரிது
உண்மையான வார்த்தைகள் விரிந்திருப்பது அரிது
விரித்துரைக்கும் வார்த்தைகளில் உண்மை அரிது
நல்ல வார்த்தைகளில் நாவன்மை அரிது
நாவன்மை இருந்தால் உண்மை அதில் அரிது
தெரிந்தவன் என்பவன் அரிதாகவே அறிந்தவன்
அறிந்தவன் என்பவன் அரிதாகவே தெரிந்தவன்
ஞானி என்பவன் ஞானத்தைப் பதுக்க மாட்டான்
மற்றவருக்கு தருவதால் அவனிடம் அது மிக வளரும்
இருப்பதை எல்லாம் பகிருவதால் அவனிடம் செல்வம் வளரும்
சொர்க்கத்தின் வழி உதவும், அது இடர் செய்யாது
ஞானியரின் வழி பெரும்போக்கானது
எல்லா விதமான மறுதலிப்பிலிருந்தும்
விடுபட்டது அது
விலையில்லா மாணிக்கம்
எனது வார்த்தைகளைப் புரிந்து கொள்வது எளிது
கடைப்பிடித்தலும் எளிது
ஆனாலும் யாரும் அவற்றைப் புரிந்து கொள்ள முடியாது
கடைப்பிடிக்கவும் முடியாது
வார்த்தைகளுக்கும் மூலம் இருக்க வேண்டும்
செயல்களுக்கு ஒரு வழிகாட்டி வேண்டும்
சனங்கள் இதை அறியாதவராய்
என்னைப் புரிந்து கொள்ளத் தவறுகின்றனர்
புரிந்து கொள்பவரும் வெகு சிலரே
என்னைப் புறக்கணிப்பவர் கொண்டாடப் படுகின்றனர்
எனவே ஞானிகள் எளிமையாக உடுத்தியிருந்தாலும்
விலையில்லாத மாணிக்கத்தை தமக்குள்ளே மறைத்து வைத்திருக்கிறார்கள்
👍 மெளனம் பேணுதலும் பயனுறுதலும் ! பல வருடங்களுக்கு முன் ஹைக்கு பாணியில் தேடலில் எழுதியது
ReplyDelete'கேள்விகள் சர்ப்பங்களாய்
வழியில் வளைந்து நின்றன
.... சிந்தாத பதில் மாணிக்கம் !
- சீனு
Cheenu, wow!!!
Deleteஅருமை
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகதவை மூடு ,அறிவரிது, விலையில்லா மாணிக்கம் அருமையான பதிவு. ஆழ்ந்த கருத்துக்கள். நினைத்துப் பார்க்க வேண்டியவை. நல்ல பதிவு
ReplyDeleteநன்றி ராமனாதன் மனம் நிறைந்த உங்கள் பாராட்டுக்கு
Deleteஆழ்ந்த பொருள் பதிந்த சொற்றொடர்கள்! காலத்தால் அழியாமல் இன்றும் ஆமோதிக்க வைக்கின்றது! பகிர்ந்தமைக்கு மற்றும் அழகான தமிழாக்கம் செய்தமைக்கு பாராட்டுக்கள் நண்பா!
ReplyDeleteநன்றி நண்பா
Delete