தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும் தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும் விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...
அருமை ! 'காஞ்சன சீதா' மலையாள திரைப்படத்தில் இராமன் இயற்கையின் வடிவத்தில் இருக்கும் சீதையை தேடி மேல் நோக்கும்போது, வீசம் காற்றில் இலைகள் கீழிறங்கும் காட்சி போல் இருக்கிறது.
ReplyDelete-சீனு
காட்சி நினைவுக்கு வருகிறது. அற்புதம். அதில் வரும் ராமன் சீதை தோற்றம் மாறுபட்டது அல்லவா?
ReplyDeleteஆமாம். இராமன் ஆதிவாசியாகவும் சீதை இயற்கையாகவும் தோற்றமைக்கப்பட்டிருப்பர்.
Deleteஅற்புதமான திரைப்படம். சமீபத்தில் சில பகுதிகளைப் பார்த்தேன். காஞ்சனம் என்பது பொன் அப்படியே பொருள் கொண்டால். ராமன் அஞ்சனம்
Deleteஅருமை. எழுத்தில் என்ன ஒரு நளினம். வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராமனாதன்
DeleteA beautifully poetic reflection on the duality of life—its fleeting nature and the peace that comes with acceptance. Pretty profound. Keep writing!
ReplyDeleteThanks Janu. You have captured my thought
DeleteIn materialistic world peace is not stagnant The dried leave has alternative uses
Delete