பல காலம் தொடர்பில் இல்லாமல் இருந்த கல்லூரி நண்பர் என்னைத் தொடர்பு கொண்டார். பல விஷயங்களை நினைவு கூர்ந்து பேசிக் கொண்டோம். எத்தனை மாறுதல்கள் கடந்து போன வருடங்களில்.
தோற்றம், எண்ணம், யாவும். கல்லூரியில் அனைவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட ஃபோட்டோ என்னிடம் இல்லை. அவரிடம் இருந்தது. எனக்கு ஞாபகம் இருந்த பல விஷயங்கள் அவரது நினைவில் இல்லை.
ஓரு கேள்வி கேட்டார். உனது சொந்த ஊர் எது என்று கேட்டால் என்ன சொல்வாய்?
சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. எனது சொந்த ஊர் என்று சொல்ல நினைத்த ஊரில் சொந்தம் என்று சொல்லக் கூடிய யாரும் இல்லை. எல்லோரும் வேறு இடத்தில். நான் இப்போது இருப்பதோ வேறு மாநிலத்தில். யோசித்துப் பார்த்தால் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை எனது ஊர் மாறிக் கொண்டே இருக்கிறது. ஒரே ஊரில் நிலைத்து இருப்பவர்கள் பாக்கியவான்கள் என்று சொல்லலாமா?
நான்மணிக்கடிகையின் இந்தப் பாடல் நினைவுக்கு வந்தது
நல்லார்க்கும் தம்மூரென் றூரில்லை நன்னெறிச்
செல்வார்க்கும் தம்மூரென் றூரில்லை - அல்லாக்
கடைகட்கும் தம்மூரென் றூரில்லை தங்கைத்
துடையார்க்கும் எவ்வூரு மூர். . . .
தன் கையில் பணம் இருந்தால் எல்லா ஊரும் ஊர்தான் என்று முத்தாய்ப்பாகச் சொல்கிறது பாடல்.வீட்டுவாடகை,தயிர்,பால்,காய்கறி மளிகை பெட்ரோல் இப்படி யாவற்றிற்கும் பணமிருந்தால் எல்லா ஊரும் ஊர்தானே?
👌 மிகவும் அருமை 👏
ReplyDeleteநன்றி மதி
ReplyDeleteஅதிக வருடங்கள் வாழ்ந்த சென்னை எனது ஊரென்று எப்பவுமே தோணாது எனக்கு. ஊரென்றால் எனக்கு மதுரை, ஸ்ரீரங்கம்தான். (வாழ்ந்தது மொத்தமே மூணு ஊர்லதான்) 😃
ReplyDeleteஊரெல்லாம் துஞ்சி உலகெல்லாம் நள்ளிருளாய்
Deleteநீரெல்லாம் தேறி ஓர் நீளிரவாய் நீண்டதுவால்...
இன்றும் சொந்த ஊர் என்றால் மதுரை தான். பதிவு மிக அருமை.
ReplyDeleteநன்றி ராமனாதன்
Deleteஎந்த ஊர் என்பவனே இருந்த ஊரைச் சொல்லவா
ReplyDeleteஅந்த நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா.
புரிகிறது. நானும் நீயும் இருந்த ஊர். அறிந்த ஊர் தான்
Delete