Skip to main content

மனதில் வளரும் கதை

 For Sale: Baby shoes, never worn

அது ஆறே வார்த்தைகள் கொண்ட சிறுகதை. ஹெமிங்வே எழுதியதாகச் சொல்லப்படுகிறது. மெய்யாகவே இப்படி ஒரு கதையை ஹெமிங்வே எழுதியிருக்கிறாரா தெரியாது. ஆறு வார்த்தைகளில் ஒரு கதையைச் சொல்லி விட முடியுமா? ஆறு வார்த்தைகளில் கதையைக் கோடிட்டுக் காட்டலாம். மிகுதிக் கதையை வாசிப்பவர் மனது உருவாக்கிக் கொள்ள வேண்டியது தான். 

For Sale: Baby shoes, never worn

இந்த வரிகள் என்ன சொல்கிறது.

ஒரு பொழுதும் அணியாத குழந்தையின் காலணி ஏன் விற்பனைக்கு வர வேண்டும். குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கையில் வாங்கி வைத்த காலணி. ஆனால் பிறக்கவில்லை. இனியும் பிறக்க வாய்ப்பில்லை. எனவே காலணி விற்பனைக்கு வருகிறதோ?


இப்படி எல்லாம் மனதில் கதை வளர்கிறது.





ஹெமிங்வேயின் ஒரு சிறுகதை Cat in the Rain. விடுமுறையைக் கழிக்க அமெரிக்கத் தம்பதி இத்தாலியில் ஒரு ஊருக்கு வருகிறார்கள். ஒரு விடுதியில் தங்குகிறார்கள். அவர்களது அறை இரண்டாவது மாடியில். அங்கிருந்து தொலைவில் கடல் தெரிகிறது. எதிரே பூங்கா. மற்றும் ஒரு போர் நினைவுச் சின்னம். வந்ததிலிருந்து விடாது மழை பெய்கிறது. எங்கும் போகவில்லை. கணவன் எப்போதும் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறான். மனைவி மழையை வேடிக்கை பார்க்கிறாள். ஐன்னலுக்குக் கீழே ஒரு பச்சை நிற மேஜை. மழை நீர் அதன் மைல் பட்டுத் தெறித்து சிதறியபடி இருக்கிறது. மேஜையில் அடியில் ஒரு பூனைக்குட்டி. மழையில் நனையாமல் தனது உடலைக் குறுக்கிக் கொண்டு இருக்கிறது. 

“நான் கீழே போய் அதை எடுத்து வரப் போகிறேன்” என்கிறாள் மனைவி

“நான் போகட்டுமா “இது கணவன்.

“இல்லை நானே போகிறேன் பாவம் அந்தப் பூனை நனைந்து விடப் போகிறது”

என்று மனைவி கிளம்புகிறாள்.

“நீ நனைந்து விடாதே” இது கணவன்.

புத்தகத்திலிருந்து கண்ணை எடுக்கவில்லை.


படியில் இறங்கி வருகிறாள். விடுதிக் காப்பாளர் எழுந்து தலை வணங்குகிறார். இவள் கூச்சம் கொள்கிறாள். முதிய காப்பாளனை இவளுக்குப் பிடித்துப் போகிறது. மழையில் நடந்து அவள் பூனை இருக்கும் மேஜையடிக்குப் போகிறாள். இவள் நனையாமல் இருக்க ஒரு பணிப்பெண் குடை பிடிக்க வருகிறாள். காப்பாளர் அவளை அனுப்பியதாகச் சொல்கிறாள்.. மேஜைக்குக் கீழே பூனை இல்லை. ஏமாற்றம் ஆகி விடுகிறது. எங்கே போயிருக்கும். பணிப்பெண் இத்தாலிய மொழியில் ஏதோ கேட்கிறாள். இவள் இங்கே பூனைக் குட்டி இருந்ததையும் எடுத்துப் போக நினைத்ததையும் சொல்கிறாள்.


அறைக்குத் திரும்ப வரும் போது மறுபடியும் விடுதிக் காப்பாளர் இருக்கையிலிருந்து எழுந்து தலைசாய்த்து வணங்குகிறார். இவளுக்கு அவர் தரும் முக்கியத்துவம் ஒருபுறம் சங்கடமாக இருக்கிறது.. மறுபுறம் அந்தச் சிறிது நேர முக்கியத்துவம் தேவையாகவும் இருக்கிறது.


படியேறி அறைக்கு வருகிறாள். பூனைக்குட்டி கிடைத்ததா என்று கேட்கிறான் கணவன். இல்லை அது போய் விட்டது என்கிறாள். பூனைக் குட்டியைக் கையில் எடுத்து ஏந்திக் கொள்ள எத்தனை விரும்பினாள் அவள். ஏமாற்றமாக இருந்தது அவளுக்கு. கண்ணாடி முன்னால் அமருகிறாள். நெருக்கமாக வெட்டப்பட்டிருக்கும் அவளது தலை முடியைப் பார்க்கிறாள். அவளுடைய தோற்றம் பையனைப் போல இருக்கிறது. நான் நீளமாக முடி வளர்க்கப் போகிறேன் என்கிறாள் அவள். வேண்டாம் என அவள் கணவன் மறுக்கிறான். இல்லை, நான் வளர்க்கத்தான் போகிறேன். எனது மடியில் ஒரு பூனைக் குட்டியை வைத்துக் கொள்வேன். எனக்கு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மேஜையில் அமர்ந்து வெள்ளிக் கரண்டியில் சாப்பிட வேண்டும். அப்போது வசந்தம் வர வேண்டும். எனது மடியில் ஒரு பூனைக்குட்டி வேண்டும். அதை நான் மெல்லத் தடவிக் கொடுக்க வேண்டும். புதிய ஆடைகள் வேண்டும் என்று அடுக்கிக் கொண்டே போகிறாள்.

கணவன் போதும் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துப் படி என்கிறான்.


அவள் ஜன்னல் வழியாகப் பார்க்கிறாள். இருட்டி விட்டது. மழை பெய்து கொண்டே இருக்கிறது. பனைமரம் மழையில் நனைந்தபடி இருக்கிறது. கணவனின் கவனம் புத்தகத்திலேயே இருக்கிறது.


அப்பொழுது கதவு தட்டப்படுகிறது. பணிப்பெண் வெளியே நிற்கிறாள். அவள் கையில் ஒரு பூனைக்குட்டி இருக்கிறது. விடுதிக் காப்பாளர் கொடுத்து விட்டதாகச் சொல்கிறாள்.


கதை இங்கே முடிகிறது. 


இதில் உள்ள விவரங்கள் விடாது பெய்யும் மழை. எங்கேயும் போக முடியாத சூழல். கணவன் மனைவி. சதா படித்துக் கொண்டே இருக்கும் கணவன். வேறு ஒரு தேசம். வேறு ஒரு ஊர். சலிப்பான சூழல். . திடீரென்று ஒரு பூனை. அதிலிருந்து எழும் ஒரு விருப்பம். அதன் வழியாகப் பல விருப்பங்கள். இவைதான் கதையில் சொல்லப் படுகிறது.


சொல்லாமல் விட்டது மனதில் வளருகிறது. கணவன் மனைவியைக் கண்டு கொள்வதில்லை. ஒருவருக்கொருவர் சலித்து விட்டார்கள் என்று தோன்றுகிறது. மனைவிக்கு குழந்தை இல்லை என்ற ஏக்கம் இருக்க வேண்டும். அது பூனைக் குட்டியின் மேல் ஒரு கனிவாய்ச் சுரக்கிறது. அதை மடியில் வைத்துக் கொண்டு தடவிக் கொடுக்க வேண்டும் என்று விருப்பம் எழுகிறது. கணவன் அவளைப் பெரிதும் கண்டு கொள்வதில்லை. விடுதிக் காப்பாளர் அவளைக் கவனித்துக் கொள்வது அவளுக்குப் பிடித்திருக்கிறது.


நல்ல கதை சொல்வதை விட சொல்லாமல் விடுவது அதிகம். ஹெமிங்வேயின் கதை அப்படித்தான்.






Comments

  1. Beautiful commentary on the story. Well written as always.

    ReplyDelete
  2. குழந்தையிடம் இருந்த பல காலணிகளில், உபயோகப் படுத்தாத ஒன்று விலைக்கு வந்திருக்கலாம். 🙂🙂

    எப்பொழுதும் போல அழகாக எழுதியிருக்கிறாய்

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் யோசிக்கலாம். 😆நன்றி படித்ததற்கு

      Delete
  3. அருமையான தெளிவான கதை. நன்றாக சொல்லப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...