வயலின் என்ற ஒன்றை நான் அறிந்தது வானொலிப் பெட்டி மூலமாக. ஆகாஷவாணி ஒலிபரப்பு துவங்கு முன் ஒரு இசை வரும். அது தான் வயலின் என்று பிற்பாடு தெரிந்தது. அந்த வயலினோடு சுருதி சேர்த்த வண்ணம் ஒரு தம்பூரா ஒலியும் ரீங்காரமிடும். அம்மா காபி போடுவதற்காக கரி அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைப்பார்கள். நீர் மெல்ல மெல்லக் சூடேறி கொதி நிலைக்கு வரும் போது ஒரு ஓசை எழும். சுருதி சேர்த்த தம்பூரா ஒலியோடு மனம் அதை ஒப்பிட்டுப் பார்க்கும். காபி போடும் போது அம்மா ‘பரிமள ரங்கா எழுந்திரும்’ என்று பாடும் பூபாளம் சுருதி சுத்தமாக இருக்கும்.
சிறு வயதில் கேட்ட ஒரு கச்சேரியில் வயலின் இசை ஒன்று இணைந்து ஒலித்தது. அந்த ஓசை மாறுபட்டு இருந்தது. அது யார் வாசித்தது என்று கேட்டு அறிய முயன்றேன். அந்த ஓலியை எழுப்பியவர் மைசூர் செளடையா என்று அறிந்தேன். அவர் வாசித்தது அரியக்குடி ராமானுஜ அய்யங்காருக்கு என்றும் தெரிந்து கொண்டேன்.
சாதாரணமாக வயலினில் நான்கு நரம்புகள் அல்லது ஐந்து இருக்கலாம். செளடையாவின் வயலினில் ஏழு நரம்புகள் இருக்கும். எனவே தான் நான் கேட்ட மாறுபட்ட ஒலி. எனவே தான் செளடையாவின் வயலின் பாடகர் குரல் போலவே பேசும். மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும். நான் கேட்ட சில பெண்களின் குரல் போல இருக்கும்.
செளடையாவின் வயலினைப் பற்றி நினைக்கும் போது செல்லோ ( Cello) என்ற வாத்தியம் நினைவுக்கு வந்தது. வயலின் போன்றே தோற்றமளிக்கும் இது அளவில் பெரியது. கையில் ஏந்த முடியாதது.
நெஞ்சம் மறப்பதில்லை என்று ஒரு திரைப்படம். அதில் கதாநாயகனுக்கு பூர்வ ஜென்ம ஞாபகம் எல்லாம் வரும். ஒரு மாதிரியான திகில் படம். பின்னணி இசையில் பெரிதும் செல்லோ என்ற வாத்தியம் ஒலிக்கும். அந்த ஒலி மனதில் சென்று மெல்ல அதிர்ந்து ஒலிக்கும். ஒரு பயத்தை மனதில் உருவாக்கும். எப்படி எல்லாம் பீதியைக் கிளப்புவது என்று இசையமைப்பாளர்களுக்குத் தெரியும்.
துவக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற மெட்டை இசைப்பது செல்லோ (Cello)
அருமை. பல நாட்களுக்குப் பின்னர் உனது எழுத்து. 👌
ReplyDeleteஆமாம். ஒரு சிறிய இடைவெளி
Deleteரசனைக்கார அண்ணா👏👏. தொடர்ந்து ரசித்ததை பகிரவும்.
ReplyDeleteநன்றி ஜெயந்தி
DeleteAahaa, you took me to my primary school days in Triplicane in late 60s (now it's my age), when we bought a 'gec' radio first time in the neighborhood and Amma used to switch on (I think, at 4.55 am) this 'violin' would wake me up coz my shayam was right under the wall-shelf where this 'gec' was installed. Then comes the 'vande maatharam'..aahaa today we celebrate the 150 years of this song. It is divine driven for you to post this...Dharamshala Venkataswamy Naidu mattum ennavaam..alarum appadithaan..enga Thiruvallikkeni vaasi..
ReplyDeleteThank you
DeleteIt was Dwaram Venkataswamy Naidu..Not Dharmashala - ellaam therinjamaadhiri auto-fill mundhirikottai maathiduthu..sorry
DeleteOk
Deleteநான் 1965 ல் இருந்து மீனாக்ஷி அம்மன் கோவிலில் கச்சேரி கேட்டிருக்கிறேன். கல்யார மண்டபத்தில் தான் நடக்கும். அப்போது பிரபல வித்வான்களுக்கு எல்லாம் சௌடையா தான் வயலின்.
ReplyDeleteஇப்போதும் பழைய கச்சேரி கேட்கும்போது இவர் ஞாபகம் நிச்சயம் வரும்.நினைவு பதிப்புக்கு நன்றி
நன்றி ராமனாதன். கல்யாண மண்டபம் கச்சேரிகள் எனது நினைவிலும் நிழலாடுகிறது
Deleteபெங்களூரில் சொளடையா ஹால் என்று கட்டியிருக்கிறார்கள். கட்டிடம் வயலின் பாணியில் இருக்கும். நிறைய நிகழ்ச்சிகள் அங்கு நடக்கின்றன.
ReplyDeleteஆமாம் ராமனாதன்
DeleteI thoroughly enjoyed this write-up. The title bgm of NM is stunning.
ReplyDeleteWhy this long gap -writer's block?-,Write frequently.
Thanks Ram. Yes I shall do as suggested by you. Thanks again for the support
DeleteRam Look at the mix of instruments played. Cello violin flute veena clarinet and bangos
DeleteThis post feels like the background score of life — that quiet rhythm beneath everything, steady, intentional, and beautifully composed.
ReplyDeleteYes. Seldom attention is paid to the beauty of the rhythm
ReplyDelete