Skip to main content

தொலை தூரம் சென்று விடாதே

 Don't go far off


Don't go far off, not even for a day, because -

because - I don't know how to say it: a day is long

and I will be waiting for you, as in an empty station

when the trains are parked off somewhere else, asleep.


Don't leave me, even for an hour, because

then the little drops of anguish will all run together,

the smoke that roams looking for a home will drift

into me, choking my lost heart.


Oh, may your silhouette never dissolve on the beach;

may your eyelids never flutter into the empty distance.

Don't leave me for a second, my dearest,


because in that moment you'll have gone so far

I'll wander mazily over all the earth, asking,

Will you come back? Will you leave me here, dying?


Pablo Neruda




தொலை தூரம் சென்று விடாதே 


தொலை தூரம் சென்று விடாதே

அது ஒரு நாள் ஆனாலும் கூட

ஏனென்று சொன்னால்..

ஏனென்று சொன்னால்..

எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை

ஒரு நாள் என்பது நீண்ட பொழுது

நான் காத்திருப்பேன்

காலியான ஸ்டேஷனில்

ரயில் எல்லாம் எங்கோ நிறுத்தப்பட்டு

உறங்கிக் கொண்டிருக்கும்


என்னை விட்டுச் சென்று விடாதே

அது ஒரு மணி நேரம் ஆனாலும் சரி

ஏனென்று சொன்னால்

வேதனையின் சின்னச் சின்னத் துளிகள் சேர்ந்து ஒன்றாகப் பெருகி ஓடும்

இருப்பிடம் தேடி அலையும் புகை வழி தவறி 

எனக்குள் நுழையும்

தொலைந்து போன இதயத்தைத் திணறச் செய்யும் 


ஓ.. உனது நிழல் வடிவம்

கடற்கரையில் மறைய வேண்டாம்

உனது கண் இமைகள் 

வெறும் தொலைவைக் கண்டு

படபடக்க வேண்டாம்

எனதன்பே

என்னை விட்டுப் போகாதே

அது ஒரு வினாடியானாலும் சரி

ஏனென்று சொன்னால் அந்தக் கணம்

நீ வெகு தூரம் சென்று விடுவாய்

நான் பிரமை பிடித்தவனாக 

இந்தப் பூமி எங்கும் அலைந்து கொண்டு இருப்பேன் ஒரு கேள்வியோடு 


நீ திரும்ப வருவாயா?

இல்லை இங்கேயே இறந்து போக விட்டு விடுவாயா?


பாப்லோ நெருடா 

ஆங்கிலம் வழியாகத் தமிழில்

தி சந்தானம்


பாப்லோ நெருடாவின் கவிதை அது. என்ன செய்வது? இதுவும் காதல் கவிதை தான். நெருடா.. நெருதா என்றும் சொல்வார்கள். அவர் நிறையக் காதலித்தார். எனவே நிறையக் காதல் கவிதைகள் எழுதினார். சிலி தேசத்தைச் சேர்ந்தவர். தீவிர அரசியல் செயல்பாட்டாளரும் கூட.


என்னுடைய பழைய பதிவுகள் சிலவற்றில்.. சிலி தேசத்துக் குயில் 1 சிலி தேசத்துக் குயில் 2 என்று தலைப்பிட்டது உட்பட இவரது கவிதைகளை மொழி பெயர்த்து இருக்கிறேன். மொழிபெயர்ப்பு என்பது முகத்திரை அணிந்த பெண்ணை முத்தமிடுவது போல என்று எங்கோ படித்திருக்கிறேன். ஸ்பானிய மூலக் கவிதையை ஆங்கிலம் வழியாகத் தமிழில் மொழிபெயர்ப்பதை என்னவென்று சொல்வது?


ஆட்சியாளர்களை விமர்சிப்பது நல்லது அல்ல. நெருடா அதைச் செய்தார். சுரங்கத் தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவதைக் கண்டித்தார். இதன் விளைவாக நாட்டை விட்டு வெளியேறும்படி ஆயிற்று. எத்தனை வருடங்கள்? ஐந்து வருடங்கள். பல நாடுகளில் சென்று வாழ்ந்தார். அப்படி ஒரு சமயம் இத்தாலியில் ஒரு சிறிய தீவில் இருந்தார். 


இத்தாலியில் தீவில் இருந்த நெருடாவைக் கதாபாத்திரமாக்கி ஒரு திரைப்படம் வந்திருக்கிறது. அந்த இத்தாலியத் திரைப்படத்தின் பெயர் Il Postino (The Postman) தீவில் ஒரு மீனவனின் மகன். மரியோ. மீன் பிடிக்கும் தொழில் அவனுக்குப் பிடிக்கவில்லை. எப்படியோ முயற்சி செய்து தபால்காரன் ஆகிவிடுகிறான். அது ஓரு தாற்காலிகமான வேலை. எழுதப் படிக்கத் தெரிய வேண்டும். சொந்தமாக ஒரு சைக்கிள் இருக்க வேண்டும். மரியோவிடம் இந்த இரண்டும் இருந்தது. வேலை கிடைத்து விடுகிறது

 எப்படி என்றால் அந்தத் தீவில் அதிகமும் கடிதம் வருவது நெருடாவுக்குத் தான். தபாலில் வந்த கடிதங்களைக் கொடுக்க அடிக்கடி வீட்டுக்கு வருகிறான். பல மைல் தூரம் சைக்கிளை மிதிக்க வேண்டும். 

நெருடாவுக்கு கடிதங்களைக் கொண்டு வரும் இவனோடு நட்பு ஏற்படுகிறது.

பழக்கம் அவரோடு நெருக்கத்தை வளர்க்கிறது. நெருடா எழுதும் கவிதைகளும் அவனுக்குப் பரிச்சயம் ஆகிறது. மரியோ அவரிடம் கேட்கிறான்.

உருவகம் என்பது என்ன?

வானம் அழுகிறது என்று நான் சொன்னால் என்ன புரிந்து கொள்வாய்? என்று நெருடா பதில் கேள்வி கேட்கிறார்.

மழை பொழிகிறது என்று சொல்கிறான். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக கவிதையின் நுணுக்கங்களைப் புரிய வைக்கிறார். என்றாலும் அவனால் ஒரு கவிதை கூட எழுத முடிவதில்லை.


                                                            (தொடரும்)


Comments

  1. நல்ல பதிவு. ஒருமுறை எனது நண்பன் அவனது வலைதளம் மூலமாக கவிதை எப்படி எழுதுவது என்று பாடம் எடுக்க முடியுமா என்று கேட்டான். கவிதை எழுதுவதை ஒரு வரைமுறையாக சொல்வது என்று எனக்கு புலன்படவில்லை - இலக்கணம், உவமேயம், எதுகை, மோனை என்பதெல்லாம் கற்றுக் கொடுக்கலாம். ஆனால் கவிதை எழுதுவதற்கான உந்துதலையும், அதற்கான உள் காட்சியையும் எப்படி கற்றுக்கொடுப்பது? உளியை சுத்தியல் கொண்டு கல்லைப் பெயர்ப்பதை கற்பிக்கலாம் - ஆனால் கல்லுக்குள் அமைந்திருக்கும் உருவத்தை சிற்பிதான் கண்டு பிடிக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் என்னால் இயலாது என்று சொல்லி விட்டேன். உனது அடுத்த பதிவை எதிர்பார்க்கிறேன்.
    - சீனு

    ReplyDelete
    Replies
    1. முற்றிலும் சரி. பறவையை வரைவது எப்படி என்ற பிரெஞ்சுக் கவிதையின் தமிழாக்கம் நினைவிருக்கிறதா? ஸ்ரீராம் என்பவர் செய்தது

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...