தூங்கும் நேரம் தவறிப் போனால் அதைப் பிடிப்பது கடினம். ஊரெல்லாம் துஞ்சுகிறது. உலகெல்லாம் நள்ளிருள் சூழ்கிறது. தூக்கம் வருவது இல்லை. எண்ணங்கள் வந்து சூழ்கிறது. இரவைக் கடத்துவது கடினமாகி விடுகிறது.
Sleep dwell upon thine eyes, peace in thy breast.
Would I were sleep and peace so sweet to rest.
அது ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகத்தில் வரும் வசனம். காதல் வயப்பட்ட ரோமியோ அவளைப் பிரிந்து செல்லும் போது இப்படிச் சொல்கிறான். காதல் தூக்கத்தையும் நிம்மதியையும் பறித்து விடுகிறது. எனவே தூக்கமும் அமைதியும் அவளுக்கு வாய்க்கட்டும் என்று வாழ்த்துகிறான்.
தூக்கம் உன் கண்களைத் தழுவட்டும்
உன் ஹ்ருதயத்தில் சாந்தி இளைப்பாறட்டும். அந்தத் தூக்கமும் அமைதியும் நானாக இருந்தால்…
இது அம்பிகாபதி என்ற 1937ம் வருட திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர் பேசும் வசனம். இந்த வசனத்தை எழுதியவர் இளங்கோவன். படத்தை இயக்கியவர் எல்லிஸ் ஆர் டங்கன். அம்பிகாபதி கவிஞன். கம்பரின் மகன். ஆனால் இந்தப் படத்தில் எம் கே டி கவிதையைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. அமராவதியாக நடிக்கும் எம் ஆர் சந்தானலட்சுமியை அடிக்கடி காதல் பார்வை பார்க்கிறார். நிறையப் பாடுகிறார். இந்தப் படத்தில் டூயட் பாடல்கள் உண்டு. மேலும் நெருக்கமான காதல் காட்சிகளும்.
எனக்கு ஐந்து ஆறு வயது இருக்கும். எங்கள் தெருவில் வெள்ளை நிற டவுன் பஸ் போகும். பஸ்ஸின் பின்புறம் உள்ள தட்டி சினிமா விளம்பரங்களைத் தாங்கி நிற்கும். அதில் ஆலயமணி என்ற திரைப்படத்தின் போஸ்டரைப் பார்த்த ஞாபகம் இருக்கிறது. தோழன் என்று ஒரு திரைப்பட போஸ்டர் கூட பார்த்ததாக ஒரு ஞாபகம்.
ஆலயமணி என்ற திரைப்படத்தை நான் அப்போது பார்த்திருக்க வில்லை. ஆனால் தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே என்ற பாடலைக் கேட்டிருக்கிறேன். இனிமையான பாடல். தூக்கம் ஒரு பிரச்சினையாக அப்போது இருந்ததில்லை. இரவு ஒன்பது மணிக்கு எல்லாம் தூக்கம் வந்து விடும். ஓடியாடி உடல் தானாகக் களைத்து விடும்.
முதலில் சொன்ன ஷேக்ஸ்பியரின் வரிக்கு வருவோம். அந்த வரிகள் அப்படியே 1937ம் வருடம் வந்த திரைப்படத்தில் வசனமாகவும் அறுபதுகளில் வந்த ஒரு திரைப்படப் பாடலிலும் எடுத்து ஆளப் பட்டிருக்கிறது.
எப்படியோ தூக்கம் உடலுக்கும் அமைதி உள்ளத்துக்கும் அவசியம் தானே?
Super
ReplyDeleteThank you
DeleteThe importance of 'sleep' is there in our prayers, right from the day, 'Devi Mahaatmiyam' was narrated. We all know the shloka:
ReplyDeleteया देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता । नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमोनमः meaning
"I pay obeisance thrice to the Devi, who is present in all living beings in the form of sleep".
தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே. அருமையான பாடல். இதற்காகவே பாடல்களுக்காவே சில தடவை படம் பார்த்த அனுபவம் உண்டு. இன்றும் இந்த பாடலை கேட்கிறேன். நல்ல பதிவு
ReplyDeleteநன்றி ராம்
Delete👌👏
ReplyDelete🙏
Delete