காலம் என்றால் என்ன
அது ஒரு பூ
அந்தப் பூவுக்குள்
ஒரு உலகம் இருக்கிறது
மகிழ் ஆதன்
ஊழி என்று ஒரு சொல் உண்டு. அது ஒரு நீண்ட காலப் பகுதியைக் குறிக்கிறது. யுகம் என்று சொல்கிறோம் இல்லையா?
ஊழி தோறு ஊழி ஒருவன் என்று நம்மாழ்வாரின் திருவாய்மொழி சொல்லும்.
காலம் என்பது நம்மைத் தொடர்ந்தபடியே இருக்கிறது. ஒரு கரிய நிழல் போல. அது நிலை பெயராத ஒன்றா அல்லது தொடரும் ஒரு இயக்கமா என்பதில் குழப்பம் வருகிறது. அது அசைவது கிடையாது. அது ஒரு மெளன சாட்சி என்றெல்லாம் சொல்லத் தோன்றுகிறது. கண்ணுக்கு முன்னே நீண்டு கிடக்கும் கடலைப் போல அது காண்கிறது. அற்புதமான ரகசியங்கள் அடங்கிய ஒன்று என்று தோன்றுகிறது.
நல்ல நாதசுர இசையைக் கேட்கும் போது காலம் வெளி என்ற பிரக்ஞை அழிந்து விடுகிறது. இன்று அப்படி ஒரு அனுபவம் வாய்த்தது. அது ஆச்சாள்புரம் சின்னத் தம்பியின் வாசிப்பு.
நீண்டிருக்கும் குழலில் ஊதி நிரப்பிய காற்று. துளைகளில் ஒரு காலப் பிரமாணத்தில் அசையும் விரல்கள். சிந்தையில் சேர்ந்திருக்கும் ஞானத்தை மெல்ல அந்தக் குழல் வழியே கடத்தும் பாங்கு. இது எனது காற்று. நான் இதை ஊதி இசையாக்குகிறேன். இப்படி எந்த எண்ணமும் இல்லை. யாதொரு பற்றும் இல்லாத ஒரு பாவனை.
வாசிப்பு அபாரம். மெய்ம்மறந்து கேட்கும்படி இருந்தது. மதுரை மணி பாட்டான தத்வமறிய தரமா
ReplyDeleteபாட்டும் ரீதிகொளை ராகம்.
அசத்தி இருப்பார்.பதிவுக்கு வாழ்த்துக்கள்
நன்றி ராமனாதன்
Delete