கவிதைகளோடு காலமெல்லாம் உறவாடியபடி இருக்கிறேன். அந்த உறவு ஒழிவதில்லை.
கவிதை எங்கிருந்து எல்லாமோ வந்து என்னிடம் சேர்கிறது. காலை நனைக்கும் ஆற்று நீரை அள்ளிப் பருகுவதைப் போல கவிதைகளைப் பருகுகிறேன்.
சில பொழுது சட்டென ஒரு வெறுமை வந்து சூழ்கிறது. ஏனென்று தெரிவதில்லை
இனி கவிதைகள்
A torn cloud above the sea.
A wounded heart on the sand.
The sun sets, uncaring.
Nujoom Al-Ghanem
அறுந்து போன மேகம் கடலின் மேலே
காயம் பட்ட இதயம் மண்ணின் மீது
சூரியன் சாய்கிறது
அதற்கென்ன கவலை?
I speak to trees
all day long and
dream of them at night.
பகலெல்லாம் மரங்களோடு பேசுகிறேன்
இரவெல்லாம் அதைப் பற்றி கனவு காண்கிறேன்
The train rushes on, carrying memories.
Laughter hovers over the fields like old souls.
She wished someone had been awaiting her at the next stop.
ரயில் விரைகிறது
நினைவுகளைச் சுமந்தபடி
சிரிப்பு வயல் வெளிகளின் மீது
நிலை கொள்கிறது
பழைய உயிர்களைப் போல
வரவிருக்கும் நிறுத்தத்தில் எவரேனும்
அவளுக்காகக் காத்திருக்க வேண்டும்
என்றே விழைகிறாள்
The train back empty.
Fatigue floats on night’s layers.
City lights flicker till the morning.
ரயில் திரும்பி வருகிறது காலியாக
இரவின் அடுக்குகளில் களைப்பு தொங்குகிறது
நகரத்து விளக்குகள் காலை வரை
மினுங்குகின்றன
Behind those eyes,
so many tears. The child deep inside my soul
weeps for our old days.
அந்த கண்களுக்குப் பின்னால்
பலவாய்க் கண்ணீர்த் துளிகள்
எனது உயிரின் ஆழத்தில் இருக்கும்
ஒரு குழந்தை
நமது பழைய நாட்களுக்காக அழுகிறது
நன்றி
The scroll.in
Penguin books
Comments
Post a Comment