I was once a tree- all green.
Very tall, bobbing in the wind.
I had leaves, branches.
And occasional flowers.
I, too, had a name.
A woman. A mother.
Once a tree.
I brush them aside,
My tears, an upright foliage
Lying heavy on my chest.
Ranu Uniyal
This Could Be a Love Poem for You
Collection of Poems
நான் முன்பொரு காலம் ஒரு மரமாக இருந்தேன்
மிகவும் உயரம் எங்கும் பசுமை
எனக்கு இலைகள் இருந்தன
கிளைகள் இருந்தன
அரிதாக மலர்கள்
எனக்கும் ஒரு பெயர் உண்டு
ஒரு பெண். ஒரு அன்னை
முன்பு ஒரு மரம்
நான் அதை எல்லாம் ஒதுக்கித் தள்ளுகிறேன்
நிமிர்ந்திருக்கும் இலைகள் போல
எனது கண்ணீர்த் துளிகள்
இதயத்தில் கனமாக விழுந்து கிடக்கிறது
ரானு உனியல்
தமிழில்
தி சந்தானம்
பெண் மரமாக தன்னை நினைக்கிறாள்.
மலராக முகிழ்க்கிறாள். கனியாக இனிக்கிறாள். தண்ணென்று நிழல் தருகிறாள். சுற்றம் என்னும் பறவைகள் எல்லாம் அருகில் கூடிக் கலகலப்பாய் சிரிப்பதை ரசிக்கிறாள்.
ஜெய்ஹிந்த்புரம் என்றெல்லாம் மதுரையில் ஒரு பகுதிக்குப் பெயர் இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்து பதினைந்து வருடம் ஆகியிருந்தது. நேரு என்று ஒரு தலைவர் இருந்தார். அவரை நேசிக்கும் மனிதர்களும் இருந்தார்கள்.
அங்கே ஒரு சினிமா தியேட்டரும் இருந்தது.
தியேட்டர் என்ற அந்தஸ்து தர முடியாது. அது கூரை வேய்ந்த டூரிங் டாக்கீஸ் தான். ஸ்ரீமுருகன் என்ற பெயரைத் தாங்கி இருந்தது. அங்கு அன்னை என்று ஒரு திரைப்படத்தைப் பார்த்தேன். தெளிவில்லாமல் சில காட்சிகள் ஞாபகம் இருக்கிறது. தலையில் கட்டுப் போட்டபடி ஒரு இளைஞன் ரயில் தண்டவாளங்களின் குறுக்கே நடப்பது போல். அன்னை என்பவள் நீ தானா என்று ஒரு பாடல் காட்சி. ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஒருத்தி மகனாய் வளருகிறானோ? என்ன என்னவோ உணர்ச்சிப் போராட்டங்கள். சரிவர அப்போது புரிந்ததில்லை.
பூவாகிக் காயாகி என்று ஒரு நல்ல பாடல் இத்திரைப்படத்தில் உண்டு. அது நன்கு நினைவிருக்கிறது. வளர்ப்புக் குழந்தையை Perambulatorல் தள்ளிக் கொண்டே பானுமதி பாடுவதாகக் காட்சி.
பானுமதியின் குரல் பிரத்யேகமானது.
டூரிங் டாக்கீஸில் புறமெங்கும் திறந்திருக்கும். காற்று வரும். எங்கும் நிசப்தம் கூடியிருக்கும். பாடல் ஒலிக்கக் கேட்ட தருணம் மறக்க முடியாதது.
இப்பவும் ஜெய்ஹிந்திபுரம்தானே? என்ன ஒரு நினைவாற்றல் உனக்கு? முருகனில் பார்த்த ஒரே படம் ஜெனரல் சக்கரவர்த்தி. நமக்கு ஆஸ்தான தியேட்டர் ஜெகதாதான். டி வி எஸ் நகரில் இருந்த வரை எங்களுக்கு அனுமதி ஜெகதாக்குத்தான். மதிய காட்சிக்கு வெயிலில் அசராமல் நடந்து லைன்ல நின்னு டிக்கட் வாங்கிய காலம். சில நல்ல படங்களுக்கு ரெண்டு பேருக்கு முன்னால டிக்கட் தீர்ந்து போய் அந்த குட்டி ஷட்டர் க்ளோஸ் பண்ணப்படும்போது துக்கம் மண்டிக்கொண்டு வரும். ஆனால் அதுக்காக எல்லாம் சோர்ந்து விடாமல் மீண்டும் படையெடுப்போம். சில சமயம் டிக்கட் காசு போக கடலை மிட்டாய்க்கும் காசு இருக்கும். அது கொண்டாட்டமான நாள்.🙂
ReplyDeleteநல்ல நினைவுகள்
ReplyDelete