Skip to main content

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான்.

அதில் ஒரு வசனம் வரும். 

யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை. 



சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று சொல்ல வேண்டியது இல்லை.


சிங்கார வேலனே தேவாவிலிருந்து மச்சானப் பாத்தீங்களா ஒரு தாவல்.

எத்தனை இசையமைப்பாளர்கள்! எஸ்.எம்.சுப்பையா நாயுடு, எம்.பி. ஸ்ரீனிவாசன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி. …. என்று ஒரு நீண்ட வரிசை. அரிதாக வாய்ப்புகள் தேடி வரும். அது பெரும்பாலும் நல்ல பாடல்களாக அமையும். இயக்குநர் ஸ்ரீதர் படத்தில் நல்ல பாட்டுக்கள் கிடைக்கும். அது போல கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வந்த படங்களில்.

எஸ். ஜானகி என்ற பின்னணிப் பாடகி தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருந்தார். கடுமையான உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பைத் தந்தார். குழந்தையைப் போன்ற கவனம் focus கொண்டிருந்தார். வெற்றி பெற்றார். அவருடைய பன்முகத் தன்மை யாவரையும் வியக்க வைத்தது 

பல பாடல்களைக் குறிப்பிடலாம்.

தென்னங்கீற்று ஊஞ்சலிலே ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி. தூக்கம் கண்களைத் தழுவட்டுமே, பொன் என்பேன். சின்னஞ் சிறிய வண்ணப் பறவை, உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் சொல்லத்தான் நினைக்கிறேன், இப்படி ஒர் தாலாட்டுப் பாடவா அன்னக்கிளி உன்னைத் தேடுது துவங்கி இளையராஜா இசையில் பல பாடல்கள்.

தனிப்பட எனக்குப் பிடித்த பாடல்கள் ஓரிரண்டு.

என் அன்னை செய்த பாவம் நான் மண்ணில் வந்தது.. என்ற சுமைதாங்கி படப் பாடல் கேட்பவர் மனதை உருக வைக்கும்.


அவர்கள் படத்தில் இப்படியோர் தாலாட்டுப் பாடவா என்ற பாடல். 



நீல வானம் கோபம் கொண்டா நிலவு தேய்ந்தது.கண்ணா நேரம் பார்த்து மறுபடியும் ஏன் வளர்ந்தது.

இந்த வரிகளில் குறிப்பாக நேரம் பார்த்து மறுபடியும் என்ற பகுதியில் ஜானகி குரலில் காட்டும் உணர்ச்சி கண்ணில் நீர் வரவழைக்கும்.

பிரம்மா என்ற திரைப்படத்தில் இவள் ஒரு இளங்குருவி என்ற பாடல். இது ஏதோ திரைப்பாடல் அல்ல., Schubert என்ற மேற்கத்திய இசை மேதையின் ஆக்கம் என்பது போல இருக்கும். இந்தப் பாடலை குரலைக் கொண்டு பாடுவது கடினம். இசைக் கருவியில் இசைக்கலாம். இசைக்குறிப்பின் வரி வடிவங்களைப் பார்த்து. திறமையாகச் பாடியிருப்பார் ஜானகி. கேளுங்கள்.



















Comments

  1. மிகமிக அருமையான பதிவு. மூன்று பாடல்களையும் கேட்டேன். இது தவிர தென்னந் கீற்று ஊஞ்சலிலே மற்றும் தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே பாடல்களையும் கேட்டு மகிழ்ந்தேன். என்ன ஒரு mesmerising voice. எத்தனையோ பாடல்கள். அவர்கள் உருவத்திற்கும் குரலுக்கும் சம்பந்தம் இருப்பதாகவே தெரியவில்லை. அவர்கள் மறைந்தது நிச்சயம் ஒரு பேரிழப்பு தான். ஆத்மா சாந்தி அடையட்டும்.

    ReplyDelete
  2. 👌 அருமை..
    ஜானகி பற்றிய அஞ்சலியில் இது நிச்சயம் சிறப்பான ஒன்று..

    ReplyDelete
  3. உண்மை அவர் தன்னை புதுப்பித்து கொண்டது ஒரு அபூர்வ தன்மை ஆகும்

    ReplyDelete
  4. Beautifully written. Her voice was not just heard but felt across generations.

    ReplyDelete
  5. அழகா எழுதியிருக்க. ஜானியில் வரும் காற்றில் எந்தன் கீதம் கூட

    ReplyDelete
    Replies
    1. நிறைய பாடல்கள் உண்டு

      Delete
  6. ராஜாவின் வருகைக்கு முன் ஜானகி தமிழில் நிறைய பாடல்கள் பாடாவிட்டாலும், பாடிய பாடல்கள் அனைத்தம் மிகவும் பிரபலமாக இருந்தன. ஜானகியின் பன்முகத்திறனை வெளிக்கொணர்ந்ததில் ராஜாவின் பங்கு அதிகம், குறிப்பாக ஹம்மிங் - நிறைய பாடல்களில் ஜானகியின் குரலை இன்னொரு இசைக்கருவி போல் பயன்படுத்தியிருப்பார். அன்னக்கிளியை விட என்னை மிகவும் ஈர்த்த பாடல் செந்தூரப்பூவே - அநன் அடிநாதத்தில் காதலின் எதிர்ப்பார்ப்பையும் சோகத்தையும் வெளிக்கொணர்ந்திருப்பார்.
    - சீனு

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். ஒவ்வொருவருக்கும் பிரியமான பட்டியல் இருக்கும்

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...