நம்மாழ்வாரின் திருவிருத்தத்தைப் படித்துக் கொண்டிருந்தேன்- இந்தப் பாசுரம் என்னைக் கவர்ந்தது.
பலபல ஊழிகள் ஆயிடும் அன்றிஓர் நாழிகையைப்
பலபலகூறிட்ட கூறாயிடும் கண்ணன் விண்ணனையாய்
பலபல நாள் அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும்
பலபல சூழல் உடைத்து,அம்ம! வாழிஇப் பாய் இருளே
என்ன சொல்கிறார்? பொருள் கொள்ள வேண்டுமே.
இப்படி எழுதிப் பார்க்கலாம்.
கண்ணா!
விண்ணைப் போன்றவனே!
பலபல ஊழிகள் ஆகின்றன
ஒரு நாழிகை பலபல கூறு ஆகிறது
பின்னும் அது பல பல கூறிட்ட கூறாகிறது
பல நாட்கள் பல நாட்கள்
அன்பர் கூடுகிறார்
பிரிகிறார்
நான் மெலிகிறேன்
பலபல சூழ்நிலைகள்
பாய்கின்ற இருளே!
நீ வாழ்க!
நம்மாழ்வார் கண்ணனை இப்படி உணருகிறார்.
பாரதிக்கு கண்ணன் எப்படி அனுபவமாகிறான்
பார்க்கலாமா?
மாலைப் பொழுது. வானையும் கடலையும் பார்த்தபடி இருக்கிறார்
பாரதி. நேரம் போவதே தெரியவில்லை. பின்னால் ஆள் வந்து கண்ணை
மறைப்பதை உணருகிறார்.யாரது? கண்ணன்தான் பெண்ணுருவில் கண்ணன் கேட்கிறான்
“என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?
நீலமான ஆகாயத்தில், கடல் நுரையில்,
சின்னக்குமிழ்களில்,
என்னதான் பார்க்கிறாய்?”
பாரதி பதில் சொல்கிறார்.
“தெரித்த திரைக்கடலில் நின்முகம் கண்டேன்
நீல விசும்பினிடை நின்முகம் கண்டேன்
சின்னக்குமிழிகளில் நின்முகம் கண்டேன்
பிரித்துப் பிரித்து மேக மளந்தே
பெற்றது உன் முகமன்றிப் பிறிதொன்றில்லை”
நம்மாழ்வாருக்கு விண்ணாய் இருளாய் கண்ணன் ஆகின்றான். பாரதிக்கோ
கடலாய் கடலின் நுரையாய் சின்னக் குமிழிகளாய்த் தோற்றம்
கொள்கிறான்.
பக்தியின் பான்மை இதுதான் அல்லவா?
தி சந்தானம்
Super explanations
ReplyDeleteThank you
Deleteசூப்பர். எங்கும் வியாபித்திருக்கும் கண்ணன், எதோ ஒரு வகையில் ஒவ்வொருவருக்கும் ஓர் உருவில் தோன்றுகிறான். நகரும் மேகங்களில், யாகக் கொழுந்தில், காரை உதிர்ந்த சுவற்றில் என. அவனயே எண்ணும் போது அவனே அனைத்திலும் தெரிகிறான்.
ReplyDeleteஅழகாகச் சொன்னாய்
Deleteகவிதை நயம் இசைந்து ஓடுகிறது
ReplyDeleteநன்றி கண்ணன்
ReplyDeleteபக்தியோடு எப்படி பார்க்கிறோமோ அப்படி கண்ணன் தெரிகிறான். எழுத்தில் காட்சி தெரிகிறது.
ReplyDeleteஆமாம். பார்க்கும் மரங்கள் எல்லாம் கண்ணனின் பச்சை நிறம் பாரதிக்குத் தோன்றியது அல்லவா?
Delete