Skip to main content

புன்னகையும் அமைதியும்

 
தொண்ணூறுகளில் லவ் பேர்ட்ஸ் என்று ஒரு திரைப்படம் வந்தது. உலகமயம்
தாராளமயம் என்று நாட்கள் மாறிக் கொண்டிருந்த நேரம். மாற்றங்கள். இசையில் ; இயக்கத்தில்.. மின்னணு வாத்தியங்களின் ஒலியில். இந்தப் படத்தில் “மலர்களே மலர்களே என்று ஒரு பாடல். இந்தப் பாடலில் சொற்ப வினாடி ஒரு காட்சி தோன்றி மறையும். நாயகன் புல் தரையில் கால் பதிப்பான். அவன் வைத்து எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் பூ மலரும். கிராபிக்ஸ்.
மன்னிக்கவும். நான் சொல்ல வந்தது கிராபிக்ஸ் பற்றியோ பிரபு தேவாவைப் பற்றியோ அல்ல.
திக் நியட் ஹன். என்பவரைப் பற்றி  யார் இவர்? சொல்கிறேன். இவர் வியட்நாமைச் சேர்ந்த புத்தத் துறவி. புலம் பெயர்ந்து பிரான்ஸூக்குச் செல்கிறார். நடை தியானம் என்ற ஒன்றை பிரபலப்படுத்துகிறார்.  நடக்கும் போது ஒரு அரைப் புன்னகையுடன் நடக்க வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும் போதும் வெளிவிடும் போதும் அமைதியை உணர வேண்டும். மூச்சும் நடையும் ஒத்திசைவு கொள்ள வேண்டும். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் ஒரு பூ மலருவதாக கற்பனை செய்து கொள்ள வேண்டும். புத்தத் துறவிமார்களிடம் ஒரு பழக்கம் உண்டு. ஒவ்வொரு செய்கைக்கும் ஒரு சின்னக் கவிதை சொல்வார்கள்.
அதை “கதா” என்று சொல்வார்கள்.






நடையே தியானமாகும் பொழுது இப்படி ஒரு கவிதை.

                         1        காலடி

எண்ணம் செல்லும் ஆயிரம் திசையில்
எழிலான பாதையில் நடப்பேன் அமைதியில்
இட்ட அடி ஒவ்வொன்றிலும் மெல்லிய காற்றாக
எடுத்த அடி ஒவ்வொன்றிலும் ஒரு சிறிய மலராக

திக் நியட் ஹன் ஜென் குரு. அமைதிச் செயல்பாட்டாளர்.
ஒரு முறை நோபல் அமைதிப் பரிசுக்காக மார்ட்டின்
லூதர் கிங்கால் பரிந்துரைக்கப் பட்டவர். மேலும் கவிஞர்.
மாதிரிக்கு சில கவிதைகளைப் பார்ப்போம் 

                        2        வெற்றுக் கால் தடங்கள்

பாதமும் பூமியும் தோடுகின்றன
ஒளி வீசும் சூரிய காந்திப் பூக்கள் கண்களை நிறைக்கின்றன
தொலைவில் இடி முழங்குகிறது.
வியர்வை கன்னங்களின் கீழே வழிகிறது
பிறப்பும் இறப்பும் ஆன உலகில் முழுதுமாகச் சேரும்
நம் கண்ணீர்த் துளிகள்
எல்லா உயிர்களுக்கும் ஊட்டம் சேர்க்கிறது
பிறப்பு இறப்பு எனும் உலகைக் கடந்து
வெற்றுக் காலடிகள்
எங்கோ செல்கிறது


                       3         மறு சுழற்சி

குப்பை ரோஜாவாக
ரோஜா உரமாக
எல்லாமே ஒர் மாறுதலில்
நிரந்தரம் கூட ஒரு நிரந்தரமின்மைதான்


இப்படி சின்னச் சின்னதாய் கவிதைகள் எழுதிப் போகிறார்  திக் நியட் ஹன்.
உலகம் போற்றிய அந்த ஆன்மிக குரு  தன் இறுதி நாட்களில் தான் விரட்டி
அடிக்கப்பட்ட வியட்நாமுக்கே திரும்புகிறார். எந்த ஆலயத்தில் முதன் முதலாகத் துறவறம் மேற்கொண்டாரோ அதே ஆலயத்திற்கு..எஞ்சிய நாட்கள
உலக அமைதிக்காகத் தியானம் செய்தபடியே இருப்பவராக.


தி சந்தானம்


Comments

  1. அருமையான பதிவு

    ReplyDelete
  2. நன்றி ராம்.பகிர்கிறேன்.தொடர்ந்து
    படியுங்கள்

    ReplyDelete
  3. ஒரு நொடியில் கடந்து போகக் கூடிய திரைக் காட்சி, ஒரு அழகான பதிவைத் தந்திருக்கிறது. Thanks for sharing your knowledge and experience here santhanam. உன் கிட்ட நிறைய எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி. தொடர்ந்து பதிவிட உத்தேசம்

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...