Skip to main content

பதினான்காம் நாள் நிலவு

 குருதத் உன்னதக் கலைஞன். ஒளியும் நிழலும் ஊடும் பாவுமாக அவன் நெய்த காவியங்கள் தான் எத்தனை அற்புதமானவை. ஜானி வாக்கர், வஹீதா ரஹ்மான் போன்றவர்கள் குரு தத்தால் கண்டறியப் பட்டவர்கள். அவராலேயே த்த்தம் திறமைகளை வளர்த்து எடுத்துக் கொண்டவர்கள். கருத்துக்களையும் உணர்வுகளையும் காட்சிப் படுத்துவதில் அபாரமான திறமை கொண்டவராக இருந்தார் குருதத். அதற்குத் துணையாக இருந்தவர் வி.கே.மூர்த்தி என்ற ஒளிப்பதிவாளர். வெகு ஜன  சினிமாவின் எல்லையில் நின்று கொண்டே அற்புதமான கலைப்படைப்புகளை உருவாக்கினார் குருதத். ப்யாஸா, காகஸ் கே பூல், ஸாஹேப் பீபீ அவுர் குலாம் என்ற திரைப்படங்களை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் நாம் இங்கு பேசப் போவது செளத்வீன் கா சாந்த் (பதினான்காம் நாள் நிலவு) என்ற திரைப்படத்தைப் பற்றி. வியாபார ரீதியாக பெரும் வெற்றி கண்ட படம்.. இதற்கு முந்தைய படமான காகஸ் கே பூல்  குரு தத் இயக்கத்தில் பெரும் தோல்வி கண்டிருந்தது.   அதனால் இந்தப் படத்தைத தயாரித்த போதிலும் தான் இயக்காமல் வேறு ஒருவரை இயக்க வைத்தார். 



ஒரிஸ்ஸாவில் பணியாற்றும் போது அலுவலக நண்பர் இந்தப் படத்தின் சி.டி யை தந்தார்.-பாரத்தேன். நிறைய உருது வசனங்கள் புரியவில்லை. காட்சி அமைப்பு பிரமாதமாக இருந்தது.முக்கோணக் காதல் கதைகளுக்கு

இந்தப் படம் தான் முன்னோடி போல. பின்னாட்களில் பல தமிழ் மற்றும் இதர

மொழிப் படங்களில் இந்த முக்கோணக் காதலை துவைத்துப் பிழிந்தார்கள்.

போகட்டும். அதை விட்டு விடுவோம். இந்தப் படத்தில் ” செளத்வீங் கா

சாந்த் என்று ஒரு பாடல். இந்தப் பாடலைக் கேட்ட பின்பு பதினான்காம் நாள் நிலவை மாடிக்குச் சென்று வானத்தில் பார்த்தேன். முழு நிலவை விட வடிவத்தில் சிறியது. வட்டம்.  தண்மை. ஒளிப் புன்னகை. வஹிதா ரஹ்மான் போலத்தான் இருந்தது.


காணொளியைப் பார்ப்பதற்கு முன் கட்டுரையை நிறைவு செய்து விடுவோம்.  குருத்த் முந்தைய படத்தின் நஷ்டத்திலிருந்து மீண்டார். ஆனால் மண வாழ்க்கையின் நிம்மதியின்மை அவரைத் துரத்திக் கோண்டே இருந்தது. எளிதில் உணர்ச்சி வசப்படுபவராகவும் நிராசையில் விழுபவராகவும் இருந்தார். ஆசையும் அச்சமும் அவரைத் தடுமாறச் செய்தபடியே இருந்தன. நிறையக் குடிக்க ஆரம்பித்தார். தூக்கம் இழந்து தவித்தார். ஒரு நாள் மதுவும் தூக்க மாத்திரைகளும் கலந்து பருகினார். நிராகரிப்பையும் ஏமாற்றத்தையும் சேர்த்து விழுங்கினார். நிரந்தரமாக இந்த உலகை விட்டு நீங்கினார்..




Comments

  1. அருமையான பாடல். ரசித்தேன். Mesmerise செய்தது.

    ReplyDelete
  2. மிக அருமை. எழுதிய விதமும் பாடலும்.

    ReplyDelete
    Replies
    1. அருமை. அருமை. தெளிவான எழுத்து நடையில் கதை புரிந்தது. இசைக்கு மொழி தேவையில்லை என்பதால் பாடலை ரசிக்க முடிந்தது.

      Delete
  3. Sabitha Srikanth மிக அருமை. எழுதிய விதமும் பாடலும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி படிக்கவும் கேட்கவும் செய்ததற்கு

      Delete
  4. அருமையா எழுதற நீ. ரொம்ப லேட்டா ப்ளாக் ஆரமிச்சுருக்கயேன்னுதான் வருத்தமா இருக்கு. (Better late than never) இப்ப எல்லாரும் ஃபேஸ்புக்ல எழுதறா அல்லது ப்ளாக் லிங்க் அங்க தர. May be for more reach. ரசனைக்காரன் நீ. சில விஷயங்கள் நேரில் நீ சொல்லக் கேட்கும் போது இன்னும் ரசிக்கும்.
    - proud sis

    ReplyDelete
    Replies
    1. முதல் முறையாகக் கேட்கிறேன். அமைதியான இரவில் கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் சொர்க்கம் பக்கத்தில்.. எதுனா தமிழ் பாட்டு இந்த ட்யூன்ல இருக்கா? எதோ கேட்ட ஃபீல் வரது..

      Delete
  5. மனம் திறந்த பாராட்டு. மனதுக்கு சந்தோஷம்

    ReplyDelete
  6. நீல வண்ணக் கண்கள் இரண்டு என்ற பாட்டு கொஞ்சம் சமீபத்தில் வரும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...