குருதத் உன்னதக் கலைஞன். ஒளியும் நிழலும் ஊடும் பாவுமாக அவன் நெய்த காவியங்கள் தான் எத்தனை அற்புதமானவை. ஜானி வாக்கர், வஹீதா ரஹ்மான் போன்றவர்கள் குரு தத்தால் கண்டறியப் பட்டவர்கள். அவராலேயே த்த்தம் திறமைகளை வளர்த்து எடுத்துக் கொண்டவர்கள். கருத்துக்களையும் உணர்வுகளையும் காட்சிப் படுத்துவதில் அபாரமான திறமை கொண்டவராக இருந்தார் குருதத். அதற்குத் துணையாக இருந்தவர் வி.கே.மூர்த்தி என்ற ஒளிப்பதிவாளர். வெகு ஜன சினிமாவின் எல்லையில் நின்று கொண்டே அற்புதமான கலைப்படைப்புகளை உருவாக்கினார் குருதத். ப்யாஸா, காகஸ் கே பூல், ஸாஹேப் பீபீ அவுர் குலாம் என்ற திரைப்படங்களை உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் நாம் இங்கு பேசப் போவது செளத்வீன் கா சாந்த் (பதினான்காம் நாள் நிலவு) என்ற திரைப்படத்தைப் பற்றி. வியாபார ரீதியாக பெரும் வெற்றி கண்ட படம்.. இதற்கு முந்தைய படமான காகஸ் கே பூல் குரு தத் இயக்கத்தில் பெரும் தோல்வி கண்டிருந்தது. அதனால் இந்தப் படத்தைத தயாரித்த போதிலும் தான் இயக்காமல் வேறு ஒருவரை இயக்க வைத்தார்.
ஒரிஸ்ஸாவில் பணியாற்றும் போது அலுவலக நண்பர் இந்தப் படத்தின் சி.டி யை தந்தார்.-பாரத்தேன். நிறைய உருது வசனங்கள் புரியவில்லை. காட்சி அமைப்பு பிரமாதமாக இருந்தது.முக்கோணக் காதல் கதைகளுக்கு
இந்தப் படம் தான் முன்னோடி போல. பின்னாட்களில் பல தமிழ் மற்றும் இதர
மொழிப் படங்களில் இந்த முக்கோணக் காதலை துவைத்துப் பிழிந்தார்கள்.
போகட்டும். அதை விட்டு விடுவோம். இந்தப் படத்தில் ” செளத்வீங் கா
சாந்த் என்று ஒரு பாடல். இந்தப் பாடலைக் கேட்ட பின்பு பதினான்காம் நாள் நிலவை மாடிக்குச் சென்று வானத்தில் பார்த்தேன். முழு நிலவை விட வடிவத்தில் சிறியது. வட்டம். தண்மை. ஒளிப் புன்னகை. வஹிதா ரஹ்மான் போலத்தான் இருந்தது.
காணொளியைப் பார்ப்பதற்கு முன் கட்டுரையை நிறைவு செய்து விடுவோம். குருத்த் முந்தைய படத்தின் நஷ்டத்திலிருந்து மீண்டார். ஆனால் மண வாழ்க்கையின் நிம்மதியின்மை அவரைத் துரத்திக் கோண்டே இருந்தது. எளிதில் உணர்ச்சி வசப்படுபவராகவும் நிராசையில் விழுபவராகவும் இருந்தார். ஆசையும் அச்சமும் அவரைத் தடுமாறச் செய்தபடியே இருந்தன. நிறையக் குடிக்க ஆரம்பித்தார். தூக்கம் இழந்து தவித்தார். ஒரு நாள் மதுவும் தூக்க மாத்திரைகளும் கலந்து பருகினார். நிராகரிப்பையும் ஏமாற்றத்தையும் சேர்த்து விழுங்கினார். நிரந்தரமாக இந்த உலகை விட்டு நீங்கினார்..

அருமையான பாடல். ரசித்தேன். Mesmerise செய்தது.
ReplyDeleteநன்றி ராம்
Deleteமிக அருமை. எழுதிய விதமும் பாடலும்.
ReplyDeleteஅருமை. அருமை. தெளிவான எழுத்து நடையில் கதை புரிந்தது. இசைக்கு மொழி தேவையில்லை என்பதால் பாடலை ரசிக்க முடிந்தது.
Deleteநன்றி ரவி
DeleteSabitha Srikanth மிக அருமை. எழுதிய விதமும் பாடலும்.
ReplyDeleteநன்றி படிக்கவும் கேட்கவும் செய்ததற்கு
DeleteWriteup excellent - Ravi
ReplyDeleteThank you Thank you
DeleteThank you
Deleteஅருமையா எழுதற நீ. ரொம்ப லேட்டா ப்ளாக் ஆரமிச்சுருக்கயேன்னுதான் வருத்தமா இருக்கு. (Better late than never) இப்ப எல்லாரும் ஃபேஸ்புக்ல எழுதறா அல்லது ப்ளாக் லிங்க் அங்க தர. May be for more reach. ரசனைக்காரன் நீ. சில விஷயங்கள் நேரில் நீ சொல்லக் கேட்கும் போது இன்னும் ரசிக்கும்.
ReplyDelete- proud sis
முதல் முறையாகக் கேட்கிறேன். அமைதியான இரவில் கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் சொர்க்கம் பக்கத்தில்.. எதுனா தமிழ் பாட்டு இந்த ட்யூன்ல இருக்கா? எதோ கேட்ட ஃபீல் வரது..
Deleteமனம் திறந்த பாராட்டு. மனதுக்கு சந்தோஷம்
ReplyDeleteநீல வண்ணக் கண்கள் இரண்டு என்ற பாட்டு கொஞ்சம் சமீபத்தில் வரும்
ReplyDelete