Skip to main content

இன்பமும் துன்பமும்

 நம்மாழ்வாரின் திருவாய் மொழி. இந்தப் பாசுரம் ஓரு தரிசனம்.


யானும் நீ தானே ஆவது மெய்யே

    அருநரகு அவையும்நீ ஆனால்

வானுயர்ந்த இன்பம் எய்திலென்? மற்றை

          நரகமே எய்திலென்? எனினும் 

யானும் நீ தானாய்த் தெளிதொறும்  நன்றும்

        அஞ்சுவன் நரகம் நான் அடைதல்

வானுயர்இன்பம் மன்னி வீற்றிருந்தாய்

          அருள் நின் தாள்களை எனக்கே 


"அடியேன் சிறிய ஞானத்தன்" என்பார் நம்மாழ்வார். நாம் எம்மாத்திரம்?

ஒருவாறு பொருள்கொள்வோம்.காக்கை வாயிலும் கட்டுரை கொள்க.


நானும் நீ தான் என்பது உண்மை.

நரகமும் நீயே என்றால், வான் போல் உயர்ந்த இன்பம் அடைந்தால் என்ன?

நரகத்தை அடைந்தால் தான் என்ன?

என்றாலும் நானும் நீ என்ற தெளிவு வரும் வரை நரகம் அடைவதற்கு நான் பயப்படுவேன்.  வான் போன்ற இன்பத்தில் நிலை பெற்று வீற்றிரூப்பவனே!

உனது தாள்களை எனக்கு அருளுக!


தெளிவாகியது. இன்பம் வந்தால் என்ன? நரகமே அடைந்தால் என்ன?

எல்லாம் நீ என்னும்போது ஏது மயக்கம்?  உனது தாள்களே போதும் பற்றிக் கொள்ள. 


பக்தி துவளாது. யாவற்றிலும் பரமனைக் காணும்.    

   

                             *********************************************


சாக்ரடீஸுக்கு விஷம் குடித்து சாக வேண்டும் என்று தண்டனை. முதியவர்.

த்த்துவ ஞானி. காவலாளி சொல்கிறான்.” உடனே குடிக்க வேண்டியதில்லை.

கொஞ்ச நேரம் வாழலாம் “ என்கிறான். சாக்ரடீஸ் சொல்கிறார். “கால தாமதம்

செய்யாதே. உடனே கொடுத்துவிடு. ஒருவேளை அதற்குள் இயற்கையாக நான்

இறந்துவிட்டால் கிரேக்கப் பெருமன்றம் தந்த தண்டனை நிறைவேறாது போய்

விடுமே?””. சாக்ரடீஸுக்கு ஹெம்லக்  என்ற விஷம் தரப்படுகிறது. காவலாளியிடம் சாக்ரடீஸ் கேட்கிறார். “இதை எப்படி அருந்துவது? முறைகள்

என்ன?" காவலாளி சொல்கிறான் “விஷத்தை அருந்த வேண்டும். அருந்தியவுடன் நடந்து கொண்டே இருக்க வேண்டும்.. சிறிது நேரம் கழித்து கை கால்கள் மரத்துவிடும். உயிர் பிரிந்துவிடும்” சாக்ரடீஸ் கோப்பையை கைகளில் வாங்குகிறார். அவருடைய நண்பர்  கேட்கிறார். இத்தனை திடமாக இருக்கிறீர்களே? மரணத்தைக் கண்டு பயமில்லையா?  இதற்கு சாக்ரடீஸ் சொன்ன பதில் மகத்தானது. அவர் சொல்கிறார். “ நமது மரணத்திற்குப் பின் ஆத்மா எஞ்சுவதில்லை. அதுவும் இறந்துவிடும் என்கிறார்கள் நாத்திகர்கள்.. இது உண்மையானால் கவலைப்பட என்ன இருக்கிறது?  ஆஸ்திகர்கள் “உடல்தான் இறக்கிறது. ஆத்மா இறக்காது. அதற்கு அழிவில்லை என்கிறார்கள். இது இப்படி என்றால் மரணத்தைக் கண்டு ஏன் அஞ்ச வேண்டும்?"


ஞானிகள் அப்படித்தான். அவர்களுக்கு எல்லாம் சமம்.


கீழே ஒரு காணொளி. சாக்ரடீஸ் பற்றிய நாடகம். ராஜா ராணி என்ற திரைப்படத்தில். என்ன குரல் வளம். என்ன உடல் மொழி. பாருங்கள்.








Comments

  1. சாக்ரடீஸ் நாடகம் பார்த்தேன். என்ன ஒரு அழுத்தமான பேச்சு. திருவாய்மொழியும் சாக்ரடீஸ் கடைசிக்கால ஒப்புமையும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம். நீங்கள் படித்து விட்டு எழுதுவது நாம் பேசிய அற்புதத் தருணங்களை நினைவுபடுத்துகிறது

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...