Skip to main content

ஒருவர் மட்டும் திரும்பவில்லை

 “ஒருவர் மட்டும் திரும்பவில்லை” (And One did not return) என்று ஒரு சிறுகதை-

எழுதியவர் கே.ஏ.அப்பாஸ்.  டாக்டர் துவாரக்நாத் கோட்னீஸ் என்பவரைப்

பற்றியது- இந்தக் கதையை கே.ஏ.அப்பாஸ் சாந்தாராமிடம் கொடுத்தார்.சாந்தாராம் படத்தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர்.  நடிகரும் கூட. (தோ ஆன்கேன் பாரா ஹாத் நினைவுக்கு வருகிறதா?) அந்தக் கதையை திரைப்படமாக்க முடிவு செய்தார் சாந்தாராம்- படத்தின் பெயர் டாக்டர் கோட்னீஸ்கீ அமர் கஹானி”.  அதாவது டாக்டர் கோட்னீஸின் அழியாச் சரிதம்.கே. ஏ.அப்பாஸ் திரைக்கதை எழுத வசந்த் தேசாய் இசை அமைத்த படம்.


டாக்டர் கோட்னீஸ் கீ அமர் கஹானி- இந்தப் படப் பெயரை நான் அறிந்தது

அம்மாவிடமிருந்து. தனக்கே உரிய ஹிந்தி உச்சரிப்பில் அதைச் சொல்வார். அப்போது அவர் முகம் பிரகாசமாக இருக்கும். ஆனால் படத்தின் கதையைச் சொன்னதில்லை. நானும் கேட்டுக் கொள்ளவில்லை.




1946ல் வெளிவந்த இப்படத்தை யூ டியூபில் பார்த்தேன். இரண்டு மணி நேரத்துக்கும் குறைவாக ஓடியது.டாக்டர் துவாரக் நாத் கோட்னீஸ் என்பவரின் உண்மைக் கதை. சிறு வயதில் சினிமா தியேட்டர்களில் பாட்டுப் புத்தகம் விற்பார்கள். பாடல்களுக்கு முன்னால் திரைப்படத்தின் கதைச் சுருக்கம் இருக்கும். அது மிகவும் சுவாரசியமாக இருக்கும். கதையின் பல்வேறு முடிச்சுகளையும் திருப்பங்களையும் கண் முன்னே நிறுத்தி விடுவார் அதைஎழுதியவர். பின்பு பல கேள்விகளை எழுப்பிவிட்டு மிகுதியை வெள்ளித் திரையில் காண்க என்று முடித்து விடுவார். அவரே சிறந்த எழுத்தாளர் என்று தோன்றும். 


சரி.  டாக்டர் கோட்னீஸின் கதையைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

கோட்னீஸ் மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு தன்னுடைய கிராமத்திற்கு

வருகிறார். அவருடைய தந்தை கிராம மக்களுக்குச் சேவை செய்யும் விதமாக

ஒரு ஆஸ்பத்திரியைக் கட்டி வைத்திருக்கிறார். ஆனால் கோட்னீஸுக்கு வேறு

பணி காத்திருப்பதைச் சொல்கிறார். அது இரண்டாம் உலகப் போர்க்காலம்.

சீனத்தில் ஜப்பான் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது. காயமுற்றவர்கள் சிகிச்சை பெற ஒரு மருத்துவக்குழு  இந்தியாவிலிருந்து செல்கிறது. அதில் ஒருவராக கோட்னீஸ் செல்ல வேண்டும். இதைக் கேட்டவுடன்

தந்தைக்கு அதிர்ச்சி. இருந்தாலும் மகனுடைய நல்ல நோக்கத்தைப் புரிந்து

கொண்டு சம்மதிக்கிறார். கோட்னீஸ்  சீனாவுக்குக் கப்பலில் பயணப்படுகிறார்.


சீனாவின் வடக்குப் பகுதி. சன்கிங் மாநிலத்திற்கு வந்து சேருகிறது மருத்துவக்

குழு. கடுமையான குண்டுப் பொழிவுக்கு நடுவில் பணி. காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவம். படு காயம் அடைந்தவர்களுக்கு அறுவை சிகிச்சை. வசதியோ குறைவு. ஆனால் கொண்ட லட்சியம் பெரிது.  குறுகிய காலத்திலேயே டாக்டர் கோட்னீஸ் அனைவரின் அன்பிற்கும் பாத்திரமாகி விடுகிறார். ஒரு  கட்டத்தில் மற்ற மருத்துவர்கள் தாயகம் திரும்பபி விடுவார்கள். ஆனால்கோட்னீஸ் தன் பணியைத் தொடருகிறார்   ஜெனரல் பாங்( Fang) என்பவரின் படையோடு டாக்டர் கோட்னீஸ் இணைக்கப்படுகிறார். அவருக்கு உதவியாளர் பெண்மையின் சாயலோடு இருக்கிறார். உண்மையில் அவர் பெண்தான் என்று ஒரு கட்டத்தில் தெரிந்து விடுகிறது.  நான்கின் படுகொலையில் அவருடைய குடும்பம் மொத்தமும் கொலையுண்டு விடுகிறது. இவர் ஒரு மருத்துவ மாணவி. ஆண் வேடமிட்டு அலைகிறார். பல கஷ்டங்களுக்குப் பிறகு  மருத்துவ உதவியாளராக வந்து சேருகிறார். அவருடைய பெயர் சிங் லான். கோட்னீஸ் அவருடைய கதையைக் கேட்டு

மனம் கசிகிறார். ஆதரவாகப் பேசுகிறார். கடுங்குளிரின் நடுவே இளவெயில்

தோன்றுவது போல காதல் நேருகிறது அவர்களிடையே.  பின்பு அவர்கள் மணம்

புரிகின்றனர். இணைந்து மருத்துவப் பணியைத் தொடருகின்றனர்.


பிளேக் நோய் தீவிரமாகப் பரவுகிறது. மக்களைக் காக்க கோட்னீஸின் மனம்

பதைக்கிறது.  பாதிக்கப்பட்ட நோயாளியின் உடலிருந்து கிருமியைத் தன்

உடம்பில் செலுத்திக் கொண்டு தக்க மருந்தையும் கண்டுபிடிக்கிறார் கோட்னீஸ். பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. இடையில் அவர்களுக்கு

ஆண் குழந்தை பிறக்கிறது. ஒரு கட்டத்தில் டாக்டர் கோட்னீஸ் 72 மணி நேரம்

கண் உறக்கமின்றி குண்டுக் காயம் பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்த

வண்ணம் இருக்கிறார். அவருக்கு வலிப்பு நோய் கண்டுவிடுகிறது. ஆனால்

பணி தொடர்ந்தபடியே இருக்கிறது.


இந்தியா மீது ஜப்பான் தாக்குதல் நடத்தப் போவதாகச் செய்தி வருகிறது.

கோட்னீஸ் மனைவி குழந்தையுடன் தாயகம் திரும்ப எண்ணுகிறார்.

உடல் நலம் குன்றுகிறது. தாய் மண்ணை நினைத்தபடியே உயிர் துறக்கிறார்.

மனைவியும் குழந்தையும் இந்தியாவில் கோட்னீஸின் கிராமத்துக்குத் திரும்புகின்றனர். கதை முடிகிறது.


படம் பார்த்து முடித்தவுடன் மனம் கனத்துப் போயிருந்தது. சாந்தாராம்

கோட்னீஸாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சிங் லான்

பாத்திரம் ஏற்ற ஜெயஶ்ரீயும் அழகாக நடித்திருப்பார்.  தொழில் நுட்ப வசதிகள்

அதிகம் இல்லாத காலம். பெரும்பாலும் செட் போட்டுதான் எடுத்திருக்கிறார்கள்.

ஆனால் ஒளியமைப்பு  மற்றும் காமிரா கோணங்கள் பிரமிக்க வைக்கின்றன.மேலும் வசந்த் தேசாயின் இசை. மெய் மறக்க வைக்கிறது. சில இடங்களில் சீன இசைக்கருவிகளையே உபயோகித்து இருக்கிறார்.

இந்தப் படம் வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பெருமை பெற்றிருக்கிறது.


நாடுகள் எல்லைகளால் பிரிந்து இருக்கின்றன.  ஆனால் அன்பும் கரிசனமும்

சேவை உணர்ச்சியும் எல்லைகளைக் கடந்து விரிகின்றன. “உலகம் தழீஇய

தொட்பம் “ என்று வள்ளுவர் சொல்லவில்லையா?


 அம்மா இந்தக் கதையைச் சொல்லவில்லை. நான் தான் தேடி அறிய நேர்ந்தது.

அம்மா சோல்லியிருக்கலாம். நதி ஓட்டம் கூழாங்கல்லோடு பேசுவது போல்

பேசுபவராயிற்றே?  அப்பா சொல்லியிருக்க வாய்ப்பில்லை.அவர் பாறை

போல் இறுகிய மெளனம் கொண்டவர். அப்பாவும் அம்மாவும் திருமணம் முடிந்தபின் பார்த்த முதல் படம் இதுதானாம்.இதை  மட்டும் அம்மா சொன்னார்கள்-



.


Comments

  1. அருமையான கதை. படித்தபின் ஒரு கனத்த இதயம். அம்மா அப்பா பார்த்தது என்பது சற்று விஷேஷமானது. பழைய படத்தை கண் முன் கொண்டு நிறுத்தியதிற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம். மனிதர்கள் எத்தனை நலலவர்களாக இருந்திருக்கிறார்கள்.
      நல்ல லட்சியங்களுக்காக வாழ்ந்திருக்கிறார்கள்.
      எண்ணும் போது மெய்சிலிர்க்கிறது

      Delete
  2. //நதி ஓட்டம் கூழாங்கல்லோடு பேசுவது போல்

    பேசுபவராயிற்றே? // எவ்ளவ் அழகா எழுதிருக்க?

    ReplyDelete
    Replies
    1. நன்றி படிப்பதற்கும் ரசிப்பதற்கும் பாராட்டுவதற்கும்

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...