Skip to main content

சாகசம் விரும்பு

 அயன் பிளமிங் என்ற பெயரை நான் கேள்விப் பட்டபோது எனக்குப்பன்னிரண்டு வயது இருக்கும். “The Man with the golden gun” என்ற புத்தகம்கண்ணில் பட்டது. யார் வாங்கி வைத்தார்களோ தெரியவில்லை. பிரபலமான வார இதழ்களில் வந்திருந்த கதைகள் கல்கி நா.பா.,அகிலன், ஜெகசிற்பியன்,லட்சுமி, ராஜம் கிருஷ்ணன் இவர்கள் எழுதி பைண்டிங் தொகுப்பாக இருந்த தமிழ் கதைகள்  மட்டும் தான் அப்போது படித்திருந்தேன். ஆங்கிலப் புத்தகம் படித்ததில்லை. இந்தப் புத்தகத்தை எடுத்தேன் படிப்பதற்காக. மேலட்டை வழுவழு என்றிருந்தது. பக்கங்கள் ஒரு வித பழுப்பு நிறம். டீ டிகாக்‌ஷனில் தோய்த்து எடுத்தது போல. எடுத்துப் படித்தேன். சரளமாகத் தமிழ் நாவலைப் போல் கடக்க முடியவில்லை. கதை உலகம் புதிதாக இருந்தது. சாகசங்கள் நிரம்பி இருந்தது. ஜேம்ஸ் பாண்ட் 007, வந்தியத் தேவன், இளங்குமரன் இவர்களிடமிருந்து மாறுபட்டிருந்தார். உடைவாளை உருவவில்லை. துப்பாக்கியை அதை எங்கு மறைத்திருப்பாரோ தெரியாது, எடுத்து நீட்டுகிறார்.  கதையின் துவக்கம் திருப்பம் இறுதி எல்லாம் சுத்தமாக நினைவில்லை.  ஆனால் அந்த வாசிப்பு அனுபவம் புதிதாக இருந்தது. பிரமிப்பைத் தந்தது. ஆங்கிலப் புத்தகம் படித்து விட்டோம் என்று பெருமையாக இருந்தது.



இந்த அயன் பிளமிங் கதைகள் தான் ஜேம்ஸ் பாண்ட் படங்களாக சக்கை போடு போட்டன என்று பிற்பாடு தெரிந்தது. ஸீன் கானெரி தான் ஜேம்ஸ் பாண்ட். நல்ல

உயரம். உடற்கட்டு. பழுப்பு  நிறக் கண்கள். ஆந்தையின் கண்ணுக்குள் தோன்றி ஒரு அனாயசமான நடை- பக்கவாட்டில். சரேலென துப்பாக்கியை எடுத்து திரை வழியாகச் சுடுவார். திரை முழுதும் செந்நிறம் பரவும். ஒரு பிரத்யேக இசை. ஜேம்ஸ் பாண்ட் வந்தாயிற்று. சாகசங்கள் ஆரம்பமாகின்றன. ரகசிய உளவாளி 007 ஆட்டம் ஆரம்பம்.  I am Bond ,James Bond என்று இவர் அறிமுகம் செய்து கொள்வது ஓரு அழகு. பெண்களைக் கண்டவுடன் காதல். விதம் விதமான உபகரணங்கள். வட்டமாக காந்தம் போன்ற ஓன்றை இரும்புப் பெட்டி மேல் பொருத்துவார். நாம் சுதாரிப்பதற்குள் நெருப்புப் பொறி சிதறும். இரும்புப் பெட்டியைத் திறந்து ரகசிய ஆவணத்தை எடுப்பார். கண்கள் நான்கு பக்கம் சுழலும். காகிதம் மேல் கோட்டின் உட்புறம் சென்று விடும்.

இவர் சிகரெட் புகைத்தால் கூட எதிராளி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சிகரெட்டில் இருந்து தோட்டா ஓசையின்றி கிளம்பும். தாக்கும். இவர் காதல் வார்த்தை பேசும் பெண்கள் மூலமே இவருக்கு ஆபத்து வந்து சேரும்.  ஆபத்து வந்த வேகத்திலேயே விலகி விடும். மரணத்தோடு விளையாடியபடியே இருப்பார். மயிரிழையில் உயிர் தப்புவார்.  இவர் இறந்து விட்டார் என்று எதிரிகள் நினைப்பார்கள். மீண்டு வந்து குட் ஈவினிங் என்பார். காரில் எதிரிகள் துரத்துவார்கள். இவர் ஓட்டும் கார் சாலையில் போகும். நதியில்  மிதந்து செல்லும். எத்தனை எத்தனை திருப்பங்கள். எத்தனை எத்தனை சுவாரசியங்கள்.


ஸீன் கானரிக்குப் பிறகு பலர் ஜேம்ஸ் பாண்டாக நடித்து விட்டார்கள். ரோஜர்

மூர் என்று ஒருவர் நடித்தார். The Spy who loved me  என்ற படம். பார்த்திருக்கிறேன். இன்றளவும் ஜேம்ஸ் பாண்ட் படங்கள் பிரமிப்பைத் தந்தபடியே இருக்கின்றன.


அயன் பிளமிங் பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர். தங்க முலாம் பூசிய டைப்ரைட்டரை கதை எழுத பயன் படுத்தி இருக்கிறார். மொத்தம் பன்னிரண்டு நாவல்கள். முதலில் குறிப்பிட்ட "The Man with the golden gun"

அவர் இறந்த பின்பு 1964 ம் வருடம் பதிப்பைக் கண்டிருக்கிறது. நேர்த்தியாக உடுத்துவது இவருக்குப் பிடிக்கும். மேலும் உயர்ந்த வகை மது,சிகரெட் இவற்றில் தீவிர ஈடுபாடு. ஐம்பத்தாறு வயதில் மரணம் இவரை அழைத்துக் கொண்டது. ஹார்ட் அட்டாக்.” நீ இரண்டு முறை வாழ்கிறாய். ஒன்று பிறக்கும் போது. இன்னொன்று நீ மரணத்தை கண்ணோடு கண் பார்க்கும் போது”. இது பிளமிங் சொன்னது.


அயன் பிளமிங்  மேலும் கூறுவார்.

" சாகசங்களை பெரிதும் விரும்பு. இல்லையென்றால் வாழ்க்கையில் உப்பு சப்பே  இருக்காது." உண்மைதான். சாகசங்கள் செய்ய முடியாது.  ஆனால் சாகசக் கதைகளை மனம் விரும்பும். இதில் ஆழமான உளவியல் இருக்கிறது.


தி சந்தானம்







Comments

  1. அயன் பிளமிங் கேள்விப்பட்ட பெயர். கதைகள் படித்ததில்லை. ஸீன்கானரி ரோஜர் மூர் இருவரும் தற்போது உயிரோடு இல்லை. ஆனால் அவர்கள் நடித்த படம் பார்த்திருக்கிறேன். அவர்கள் படம் பார்ப்பது ஒரு கெத்து. அதன் பின் தென்னக ஜேம்ஸ்பாண்ட் படம். அவர்கள் நடிப்பு ஸ்டைலிஷாக இருக்கும்.
    பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம். தென்னக ஜேம்ஸ் பாண்டை மறக்க முடியுமா? பாளையம் தங்கவேல் தியேட்டரில் நான் பார்த்த முதல் படம் பழைய ஜேம்ஸ் பாண்ட் படம் தான்

      Delete
    2. தென்னக ஜே பா. யூ மீன் ஜெய்? தமிழ்லயும் நம்ம சிலபஸ் இல்லியே. :)

      Delete
    3. ஜெய் தான். கன்னத்தில் துப்பாக்கியை உரசியபடி சிறிய கண்களால் குறி பார்க்கும் ஸ்டில் பிரபலம்.
      மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பு. வேதாவின் இசை

      Delete
  2. எல்லார் ஜேம்ஸ்பாண்டிலும் சீன் கானரிக்கு தனி இடம் உண்டு அவருடைய கெத்து தனி கெத்து

    ReplyDelete
    Replies
    1. கரெக்ட். சீன் கானரி மாதிரி வராது

      Delete
  3. இது என் ஸிலபஸ்ல கிடையாது. :)

    ReplyDelete
    Replies
    1. ஸிலபஸ் மாறிப் போச்சு

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...