Skip to main content

உருகும் பனியோடு

  டாக்டர் ஷிவாகோ.

போரிஸ் லியோனிடோவிச் பாஸ்டர்நாக் எழுதிய ஆகச்சிறந்த கதை. பாஸ்டர்நாக் மாஸ்கோவில் 1890 ம் வருடம் பிறந்தார். அம்மா பியானோ வாசிப்பவர். இதனால் தானோ என்னவோ ஆர்வத்துடன் இசையைத் தீவிரமாகப் பயின்றார் பாஸ்டர்நாக். பின்னர் 22 வயதுக்குப் பின் இசையைக் கைவிட்டு தத்துவம் பயில ஆரம்பித்தார்.ஒரு வருடம். தத்துவத்தை விட்டு விட்டு கவிதை எழுதுவதற்கு தன்னை முழுவதுமாக ஒப்புவித்தார்.இரண்டு கவிதைத் தொகுதிகள். 1912 மற்றும் 1917.  ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபது மற்றும் முப்பதுகளில் புனைகதைகள் எழுத ஆரம்பிக்கிறார். ஷேக்ஸ்பியர் மற்றும் கதேயை இவர் மொழிபெயர்த்தது ரஷ்ய மொழிக்குப் பெரும் கொடையாக அமைந்தது.


நாம் மேலே குறிப்பிட்ட டாக்டர் ஷிவாகோ 1957 58 ல் மேலை நாடுகளில் பதிப்பைக் கண்டது. பாஸ்டர்நாக் 1958 ல் நோபல் பரிசை ஏற்றார். தொடர்ச்சியான பிரச்சாரம். துரத்திய ஏச்சுக்கள். நோபல் பரிசைத் துறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

30 மே 1960ல் மறைந்தார்.




டாக்டர் ஷிவாகோ நாவல் முடிவில் பிற்சேர்க்கையாக " டாக்டர் ஷிவாகோ கவிதைகள்" என்ற தலைப்பில் இருபதுக்கும் அதிகமான கவிதைகள்.

அற்புதம். மாதிரிக்கு ஒரு கவிதையை தமிழாக்கினேன்.


புலரும் போது


எல்லாமாக நீ இருந்தாய்

எனது விதியில்


நீண்ட நீண்ட நாட்கள்

உன்னைப் பற்றி

தடயமும் இல்லை

தகவலும் இல்லை


இத்தனை வருடங்களுக்குப் பிறகு

உனது குரல் என்னைத் தொந்தரவு செய்தது


இரவு முழுதும் உனது வாக்கியங்களைப் படித்தேன்

மயக்கத்திலிருந்து எழுவது போல் இருந்தது.


நான் மனிதர்களுக்கு நடுவே

இருக்க விரும்புகிறேன்

கூட்டத்திற்கு நடுவில்

காலைச் சந்தடிக்கு நடுவில்


யாவற்றையும் உடைத்துத் தூளாக்க நான் தயார்

அவற்றை மண்டியிட செய்யவும்


நான் படிகளில் இறங்கி ஓடுகிறேன் 

முதல் முதலாக வெளியே வருவது போல 

பனி படர்ந்த வீதிகளை நோக்கி

ஆளில்லாத நடை பாதைகளை நோக்கி


எல்லாப் புறமும்

வெளிச்சம் 

மனிதர்கள் எழுபவர்களாக 

டீ குடிப்பவர்களாக 

டிராம் வண்டியைப் பிடிக்க விரைபவர்களாக 


சில நிமிட இடைவெளியில்

நகரம் அடையாளம் காண முடியாத தானது 


பனிப்புயல் வலை வீசுகிறது

அடர்த்தியான பனி வாசல்களில் விழுகிறது

எல்லோரும் விரைகிறார்கள் 

நேரத்தில் சென்றடைய வேண்டுமென்று

பாதி தின்ற உணவை மீதம் வைத்துவிட்டு

பாதி குடித்த டீயை வைத்துவிட்டு


நான் அவர்களுக்காகக் கசிகிறேன் 

அவர்களின் மெய்யோடு கலந்தவன் போல்

உருகும் பனியோடு சேர்ந்து

நானும் உருகுகிறேன்

புலரும் காலையை 

முறைத்த வண்ணம் இருக்கிறேன் 


எனக்குள்ளே மனிதர்கள்

பெயர் இல்லாதவர்கள்

குழந்தைகள்

இல்லத்தில் இருப்பவர்கள்

மரங்கள்


நான் வெல்லப்படுகிறேன் 

அவர்கள் அனைவராலும்

எனது ஒரே வெற்றி இதுதான்


தி சந்தானம் 








Comments

  1. டாக்டர் ஷிவாகோ புத்தகம் 1971 B Com I year படிக்கும் போது பேராசிரியர் கே ஆர் நாராயணனிடமிருந்து வாங்கிப் படித்தேன். மேற்படி கவிதையைப் படித்தேன். சிறந்த கற்பனை ஓட்டம். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Great Ram. Great.படித்ததற்கு நன்றி. KRN unforgettable

      Delete
  2. .//தடயம் இல்லை
    தகவல் இல்லை//நைஸ்
    நானா இருந்தா பேச்சு மூச்சில்லைன்னு முடிச்சிருப்பேன். 🤣🤣

    ReplyDelete
    Replies
    1. For a long time there was no trace no news of you. இதுதான் தமிழ் ஆனது

      Delete
  3. "செங்கோடனா? என்ன பேச்சு மூச்சு இல்லாம வந்து நிக்கறவன்"
    என்று சிவாஜி முதல் மரியாதையில் வீராச்சாமியைப் பார்த்து கேட்பது ஞாபகம் வந்தது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...