டாக்டர் ஷிவாகோ.
போரிஸ் லியோனிடோவிச் பாஸ்டர்நாக் எழுதிய ஆகச்சிறந்த கதை. பாஸ்டர்நாக் மாஸ்கோவில் 1890 ம் வருடம் பிறந்தார். அம்மா பியானோ வாசிப்பவர். இதனால் தானோ என்னவோ ஆர்வத்துடன் இசையைத் தீவிரமாகப் பயின்றார் பாஸ்டர்நாக். பின்னர் 22 வயதுக்குப் பின் இசையைக் கைவிட்டு தத்துவம் பயில ஆரம்பித்தார்.ஒரு வருடம். தத்துவத்தை விட்டு விட்டு கவிதை எழுதுவதற்கு தன்னை முழுவதுமாக ஒப்புவித்தார்.இரண்டு கவிதைத் தொகுதிகள். 1912 மற்றும் 1917. ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபது மற்றும் முப்பதுகளில் புனைகதைகள் எழுத ஆரம்பிக்கிறார். ஷேக்ஸ்பியர் மற்றும் கதேயை இவர் மொழிபெயர்த்தது ரஷ்ய மொழிக்குப் பெரும் கொடையாக அமைந்தது.
நாம் மேலே குறிப்பிட்ட டாக்டர் ஷிவாகோ 1957 58 ல் மேலை நாடுகளில் பதிப்பைக் கண்டது. பாஸ்டர்நாக் 1958 ல் நோபல் பரிசை ஏற்றார். தொடர்ச்சியான பிரச்சாரம். துரத்திய ஏச்சுக்கள். நோபல் பரிசைத் துறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
30 மே 1960ல் மறைந்தார்.
டாக்டர் ஷிவாகோ நாவல் முடிவில் பிற்சேர்க்கையாக " டாக்டர் ஷிவாகோ கவிதைகள்" என்ற தலைப்பில் இருபதுக்கும் அதிகமான கவிதைகள்.
அற்புதம். மாதிரிக்கு ஒரு கவிதையை தமிழாக்கினேன்.
புலரும் போது
எல்லாமாக நீ இருந்தாய்
எனது விதியில்
நீண்ட நீண்ட நாட்கள்
உன்னைப் பற்றி
தடயமும் இல்லை
தகவலும் இல்லை
இத்தனை வருடங்களுக்குப் பிறகு
உனது குரல் என்னைத் தொந்தரவு செய்தது
இரவு முழுதும் உனது வாக்கியங்களைப் படித்தேன்
மயக்கத்திலிருந்து எழுவது போல் இருந்தது.
நான் மனிதர்களுக்கு நடுவே
இருக்க விரும்புகிறேன்
கூட்டத்திற்கு நடுவில்
காலைச் சந்தடிக்கு நடுவில்
யாவற்றையும் உடைத்துத் தூளாக்க நான் தயார்
அவற்றை மண்டியிட செய்யவும்
நான் படிகளில் இறங்கி ஓடுகிறேன்
முதல் முதலாக வெளியே வருவது போல
பனி படர்ந்த வீதிகளை நோக்கி
ஆளில்லாத நடை பாதைகளை நோக்கி
எல்லாப் புறமும்
வெளிச்சம்
மனிதர்கள் எழுபவர்களாக
டீ குடிப்பவர்களாக
டிராம் வண்டியைப் பிடிக்க விரைபவர்களாக
சில நிமிட இடைவெளியில்
நகரம் அடையாளம் காண முடியாத தானது
பனிப்புயல் வலை வீசுகிறது
அடர்த்தியான பனி வாசல்களில் விழுகிறது
எல்லோரும் விரைகிறார்கள்
நேரத்தில் சென்றடைய வேண்டுமென்று
பாதி தின்ற உணவை மீதம் வைத்துவிட்டு
பாதி குடித்த டீயை வைத்துவிட்டு
நான் அவர்களுக்காகக் கசிகிறேன்
அவர்களின் மெய்யோடு கலந்தவன் போல்
உருகும் பனியோடு சேர்ந்து
நானும் உருகுகிறேன்
புலரும் காலையை
முறைத்த வண்ணம் இருக்கிறேன்
எனக்குள்ளே மனிதர்கள்
பெயர் இல்லாதவர்கள்
குழந்தைகள்
இல்லத்தில் இருப்பவர்கள்
மரங்கள்
நான் வெல்லப்படுகிறேன்
அவர்கள் அனைவராலும்
எனது ஒரே வெற்றி இதுதான்
தி சந்தானம்
டாக்டர் ஷிவாகோ புத்தகம் 1971 B Com I year படிக்கும் போது பேராசிரியர் கே ஆர் நாராயணனிடமிருந்து வாங்கிப் படித்தேன். மேற்படி கவிதையைப் படித்தேன். சிறந்த கற்பனை ஓட்டம். நன்றி.
ReplyDeleteGreat Ram. Great.படித்ததற்கு நன்றி. KRN unforgettable
Delete.//தடயம் இல்லை
ReplyDeleteதகவல் இல்லை//நைஸ்
நானா இருந்தா பேச்சு மூச்சில்லைன்னு முடிச்சிருப்பேன். 🤣🤣
For a long time there was no trace no news of you. இதுதான் தமிழ் ஆனது
Delete"செங்கோடனா? என்ன பேச்சு மூச்சு இல்லாம வந்து நிக்கறவன்"
ReplyDeleteஎன்று சிவாஜி முதல் மரியாதையில் வீராச்சாமியைப் பார்த்து கேட்பது ஞாபகம் வந்தது