ஞானக்கூத்தனின் "என் உளம் நிற்றி நீ" என்ற தொகுப்பை வாசித்தேன். பல வருடங்கள் கழித்து மதுரைக்கு வந்தேன். புத்தகக் கண்காட்சியில் அந்த கவிதைத் தொகுப்பை வாங்கினேன். ஞானக்கூத்தன் கவிதைகளில் ஓசை நயம் இருக்கும். மரபுக் கவிதைகள் போல. ஒரு சமயம் மதுரையில் இலக்கியசந்திப்பு.ஞானக்கூத்தனோடு.
மேலமாசி வீதியில் ஒரு சந்து. அங்கு ஒரு வீட்டு மாடியில் நடந்தது. பதினைந்து இருபது பேர் இருந்தோம்.
இசகுபிசகான கேள்விகளை லாகவமாக கையாண்டார். ஏற்கனவே ஞானக்கூத்தனின்
கவிதைகள் சிலவற்றோடு எனக்குப் பரிச்சயம் இருந்தது. அவையாவன...
அம்மாவின் பொய்கள்
பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்
எத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா
அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்
தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?
அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?
தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா
உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?
சரிவு
சூளைச் செங்கல் குவியலிலே
தனிக்கல் ஒன்று சரிகிறது.
தமிழ்
எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால்
பிறர்மேல் அதைவிட மாட்டேன்
இப்படியாக. "அன்று வேறு கிழமை
என்ற தொகுப்பைப் படித்ததில்லை. "
கசடதபற " என்ற பெயரில் அவர் நடத்தியஇதழைப் பார்த்தது கூட கிடையாது.
ஞானக்கூத்தன் மயிலாடுதுறை அருகில் உள்ள திருஇந்தளூரைச் சேரந்தவர்.
என் தங்கையின் கணவர் அவரைத்
தெரியும் என்று சொல்லியிருக்கிறார்.
ஞானக்கூத்தன் திருவல்லிக்கேணியில்
இருந்திருக்கிறார். 2016 ம் வருடம்
மறைந்தார். இவரைப் பற்றிய ஆவணப்
படம் இன்று பார்த்தேன்.
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில்
எடுக்கப்பட்டது.
ஆவணப் படத்தின் பெயர் "இலை மேல் எழுத்து"
இணையத்தில் தேடிப் பாருங்கள்.
தி சந்தானம்
போன மாசம்தான் பையனோட டீல் போட்டேன், இனி பொய் சொல்லி ஏமாத்த மாட்டேன்னு. அவனும் அந்தப் பொய்க்கு ஏங்குவானோ.. ஆரமிக்க வேண்டியதுதான். :) :) பேயோன் யாரு ஞானக் கூத்தனா அவர் மகனா?
ReplyDeleteபேயோனைப் பற்றிப் பேசுவோர் பேசுகிறார். ஜெயமோகன் கூட பேசினாராம். நான் அவரை அறியேன்
Delete//எனக்கும் தமிழ்தான் மூச்சு// தமிழ் தமிழ்னு ஒவ்வொருத்தர் கூவறதப் பார்த்து மாஸ்க் போட்டுக்க வேண்டியிருக்கு.
ReplyDelete😂
ReplyDelete