Skip to main content

காந்தியோடு

 30.1.1948. மாலைப் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு காந்தி செல்கிறார். 

அவருக்கு இருபுறம் பெண்கள் அபா மனு. மணி 5.20. மூன்று தோட்டாக்கள்.

நெஞ்சில். வயிற்றில். காந்தி கீழே சரிகிறார். ஹே ராம். அவர் உதடுகளிலிருந்து வார்த்தை பிரிகிறது.


காந்தியின் மறைவுச் செய்தியை அப்பா வானொலிப் பெட்டியில் கேட்டிருக்கிறார். அப்போது அவர் சென்னையில் இருந்திருக்கிறார். சைதாப்பேட்டையில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி இருந்தது. அங்கே அவர் படித்துக் கொண்டிருந்த காலம் அது. பெரிய கட்டிடம். இப்போது இல்லை. காந்தி பேசும் கூட்டத்திற்கு அப்பா போயிருக்க வேண்டும். காந்தி பேசும் போது கூட்டத்தில் ஒவ்வொருவரோடும் தனியே பேசுவது போல இருக்கும். இப்படி அப்பா சொல்வார். காந்தியின் குரல் எப்படி இருக்கும் என்று நான் யோசிப்பேன்.


அம்மா கரம் சந்த்ர மோ...ஹனதாஸ் காந்தீ…  என்று துவங்கும் பாடலைப் பாடுவார்கள். அம்மா பாடக் கேட்டு சிறு வயதில் நானும் பாடுவேன். முழுப் பாடல் இப்போது மறந்து விட்டது.கெடுமதியாளர் தம் கொடுமைகள் சகித்தாய்… விடுதலை தந்தாய்… முடிவிலாக் கீர்த்தி கொண்டாய் பா..பூ..ஜீ.. என்றெல்லாம் வரிகள். அம்மா உருகிப் பாடுவார் மெல்லிய குரலில்..  




பத்து வயது இருக்கும். எங்கள் வகுப்பு மாணவ மாணவிகளை காந்தி மியூசியத்திற்கு கூட்டிச் சென்றார்கள். அன்று பூராவும் காந்தியைப் பற்றி பாடம். எல்லோருக்கும் ஒரு புத்தகம். முகப்பில் காந்தியின் கோட்டுச் சித்திரம். நேர்த்தியாக அச்சிடப்பட்ட பக்கங்கள். வரி வரியாக அத்தியாயம் அத்தியாயமாக காந்தியின் வாழ்க்கை.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு சித்திரம். கோபுலு வரைந்திருந்தார். அதில் ஒரு சித்திரம் இன்றளவும் ஞாபகம் இருக்கிறது. காந்தி சிறு வயதில் தவறுகள் செய்கிறார். மனம் வருந்துகிறார். அப்பா கரம்சந்த் படுத்த படுக்கையாகி விட்டார். அவரிடம் நேரே சென்று சொல்ல பயம். ஒரு கடிதமாக எழுதி அப்பாவிடம் தருகிறார்.  இந்தக் காட்சியை கோபுலு உயிரோட்டமாக வரைந்திருப்பார். சிறுவன் மோகன் கைகளால் முகத்தை மூடிக் கொண்டிருப்பான். கட்டிலில் படுத்த நிலையில் கடிதத்தைப் படிப்பவராய் கரம்சந்த். நாள் முடிந்தபோது மனமெல்லாம் காந்தி இருந்தார். ஒரு சிறு தேர்வு வைத்தார்கள். சான்றிதழ் தந்தார்கள். எல்லோருக்கும் பருக பால் தந்தார்கள். காந்தியின் நினைவைப் பேணும் அமைப்பால் இதெல்லாம் நடந்தது.


1983. ரிச்சர்டு ஆட்டன்பரோ எடுத்த காந்தி திரைப்படம் பார்த்தேன். அலுவலக நண்பர்களோடு. படத்தின் துவக்கத்தில் காந்தி சுடப்படும் காட்சி வரும். இறுதியிலும் வரும். பின்னணி இசை பதைக்க வைக்கும். ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்று உணர்த்துவதாய் இருக்கும்.


இதற்குப் பிறகு பல்வேறு சந்தர்ப்பங்கள். பலரோடும் ஒருமித்த உணர்வு கொண்டவர்களோடும் பார்க்க வாய்த்தது. ஒவ்வொன்றும் மறக்கமுடியாத அனுபவம். காந்தியின் நினைவைப் பேணும் அனுபவம்.







Comments

  1. இந்த பதிவு போட்ட நாள் நினைவு கூறத்தக்கது. எனது தாத்தா காந்தியை நேரில் பார்த்திருக்கிறார். எனது சிறு வயதில் அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். காந்தி திரைப்படம் நாம் சேர்ந்து பார்த்த நினைவு. நல்ல பதிவு

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம் படித்ததற்கும் நினைவு கூர்ந்ததற்கும்

      Delete
  2. காந்தியைப் பற்றி ஒரு கலவையான மனநிலை எனக்கு. சிறு வயதில் ஒரு பிம்பம், வளர்ந்து தெரிந்து கொண்டவை வைத்து ஒரு பிம்பமென. ஆனால் படித்து அறிந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கு. நேரமும் வாய்ப்பும் அமைய வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. பிம்பங்கள் பின்னே செல்லாமல் உண்மையை நோக்கி நடத்தல் நலம். நேரமும் வாய்ப்பும் அமையட்டும்

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...