அது 1981ம் வருடம். இரண்டு ஆண்டுகள் வெளியூரில் பணியாற்றி விட்டு மதுரைக்கு வந்த சமயம். அந்த வருடம் உடல் ஊனமுற்றவர் ஆண்டாக அறிவிக்கப் பட்டிருந்தது. அப்போது தான் அந்தப் படம் வெளியாகி இருந்தது. ராஜ பார்வை. கமலஹாசன் தயாரித்து நடித்த படம். விழியற்ற வயலின் கலைஞராக நடித்திருப்பார். இணையாக மாதவி. ஓரு மெல்லிய காதல் கதை. இளையராஜாவின் பின்னணி இசை பிரமிப்பூட்டும் வகையில் இருந்தது.
அதில் ஓரு காட்சி. ரகு பார்வையற்றவன் என்று நான்ஸிக்குத் தெரியாது. ரகு கண்களில் கறுப்புக் கண்ணாடி அணிந்திருப்பான். லிப்டில்
போகும் போது தன்னை தவறான முறையில் உற்றுப் பார்க்கிறார் என்று பொங்கிவிடுவாள்.லிப்டில் இருந்தவர்கள் ரகுவை அடித்துத் தள்ளிவிடுவார்கள். கீழே விழுந்த ரகு கண்ணாடியைத் துழாவுவான். நான்ஸிக்குத் தன் தவறு புரியும்.
நான்ஸியின் தாத்தா அவளுக்கு நல்ல நண்பர். தாத்தாவிடம் நான் ரகுவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்லுவாள். இதோ உனக்கு ஒரு சந்தர்ப்பம் என்று பேப்பர் செய்தியைச் சுட்டிக் காட்டுகிறார். நகரத்தில் ஒரு பெரிய அரங்கில் ரகுவின் வயலின் கச்சேரி நடக்கிறது. உடனே கிளம்புகிறாள். இது காட்சி.
இசைக் கலைஞன். வயலின் இசை. இது போதாதா? இளையராஜாவின் இசைக் கோவையைக் கேளுங்கள்.
வயலின் இசைக் கலைஞர் V.S.நரசிம்மன் இந்த இசைக் கோவை உருவானதில் பெரும் பங்காற்றியிருக்கிறார்.
பிற்பாடு இளையராஜாவின் How to name it? Nothing but wind போன்ற இசையாக்கங்களுக்கு இதை முன்னோட்டமாகக் கொள்ளலாம்.
தி சந்தானம்
மதி : 👏 👌🏻
ReplyDelete70s, 80s களில் சில வாரப்பத்திரிக்கைகளுக்கு காத்திருந்தது போல, உன் blog க் கிற்கு இப்போது காத்திருந்து, படித்து மகிழ்கிறேன்.
மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி மதி.
DeleteSuper ஒரு மலரும் நினைவுகள் மலர்ந்தது
ReplyDeleteநன்றி
Deleteஅருமையான பதிவு. அந்த பாடலை பல முறை கேட்டிருக்கிறேன். ரசித்திருக்கிறேன். நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteநன்றி ராம்
Deleteஇந்தப் பாடலுக்குத் தான் எம் எஸ் கோபாலகிருஷ்ணன் வயலின் வாசித்தாரோ
ReplyDeleteV S நரசிம்மன் வயலின். T V கோபாலகிருஷ்ணன் ஹம்மிங் அந்தி மழை பாடல் நடுவில்
Deleteநான் அப்ப பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன். Central theatre என்று நினைக்கிறேன். அண்ணாவுடன் போன ஞாபகம். பழைய நினைவுகளை அழகாகக் கொண்டு வந்து நிறுத்துகிறாய். அது தொடர்பான பல விஷயங்களை அசைபோடுவதில் அன்றைய பொழுது போகிறது.
ReplyDeleteசென்ட்ரல் தான்
Deleteஞாபகங்களும் இசைக் கோவை போல மனதில் ஓடத்தானே செய்யும்
ReplyDelete