Skip to main content

விழியற்ற கலைஞன்

 அது 1981ம் வருடம். இரண்டு ஆண்டுகள் வெளியூரில் பணியாற்றி விட்டு மதுரைக்கு வந்த சமயம். அந்த வருடம்  உடல் ஊனமுற்றவர் ஆண்டாக அறிவிக்கப் பட்டிருந்தது. அப்போது தான் அந்தப் படம் வெளியாகி இருந்தது. ராஜ பார்வை. கமலஹாசன் தயாரித்து நடித்த படம். விழியற்ற வயலின் கலைஞராக நடித்திருப்பார். இணையாக மாதவி. ஓரு மெல்லிய காதல் கதை. இளையராஜாவின் பின்னணி இசை பிரமிப்பூட்டும்  வகையில் இருந்தது. 



அதில் ஓரு காட்சி. ரகு பார்வையற்றவன் என்று நான்ஸிக்குத் தெரியாது.  ரகு கண்களில் கறுப்புக் கண்ணாடி அணிந்திருப்பான். லிப்டில்

போகும் போது தன்னை  தவறான முறையில் உற்றுப் பார்க்கிறார் என்று பொங்கிவிடுவாள்.லிப்டில் இருந்தவர்கள் ரகுவை அடித்துத் தள்ளிவிடுவார்கள். கீழே விழுந்த ரகு கண்ணாடியைத் துழாவுவான். நான்ஸிக்குத் தன் தவறு புரியும். 


நான்ஸியின் தாத்தா அவளுக்கு நல்ல நண்பர். தாத்தாவிடம் நான் ரகுவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று சொல்லுவாள்.  இதோ உனக்கு ஒரு சந்தர்ப்பம் என்று பேப்பர் செய்தியைச் சுட்டிக் காட்டுகிறார். நகரத்தில் ஒரு பெரிய அரங்கில் ரகுவின் வயலின் கச்சேரி நடக்கிறது. உடனே கிளம்புகிறாள்.  இது காட்சி.


இசைக் கலைஞன். வயலின் இசை. இது போதாதா?  இளையராஜாவின் இசைக் கோவையைக் கேளுங்கள்.

வயலின் இசைக் கலைஞர் V.S.நரசிம்மன் இந்த இசைக் கோவை உருவானதில் பெரும் பங்காற்றியிருக்கிறார்.


பிற்பாடு இளையராஜாவின் How to name it?  Nothing but wind போன்ற இசையாக்கங்களுக்கு இதை முன்னோட்டமாகக் கொள்ளலாம்.


தி சந்தானம்







Comments

  1. மதி : 👏 👌🏻
    70s, 80s களில் சில வாரப்பத்திரிக்கைகளுக்கு காத்திருந்தது போல, உன் blog க் கிற்கு இப்போது காத்திருந்து, படித்து மகிழ்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக்க நன்றி மதி.

      Delete
  2. Super ஒரு மலரும் நினைவுகள் மலர்ந்தது

    ReplyDelete
  3. அருமையான பதிவு. அந்த பாடலை பல முறை கேட்டிருக்கிறேன். ரசித்திருக்கிறேன். நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. இந்தப் பாடலுக்குத் தான் எம் எஸ் கோபாலகிருஷ்ணன் வயலின் வாசித்தாரோ

    ReplyDelete
    Replies
    1. V S நரசிம்மன் வயலின். T V கோபாலகிருஷ்ணன் ஹம்மிங் அந்தி மழை பாடல் நடுவில்

      Delete
  5. நான் அப்ப பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன். Central theatre என்று நினைக்கிறேன். அண்ணாவுடன் போன ஞாபகம். பழைய நினைவுகளை அழகாகக் கொண்டு வந்து நிறுத்துகிறாய். அது தொடர்பான பல விஷயங்களை அசைபோடுவதில் அன்றைய பொழுது போகிறது.

    ReplyDelete
  6. ஞாபகங்களும் இசைக் கோவை போல மனதில் ஓடத்தானே செய்யும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...