Skip to main content

ஷேக்ஸ்பியரோடு நானும்

 Some are born great

Some achieve greatness and 

Some have greatness thrust upon them



பள்ளியில் தங்கை ஆங்கிலத்தில் பேசினாள். அதன் துவக்கம் மேலே சொன்னவாறு இருந்தது. அந்தப் பேச்சை அக்கா எழுதிக் கொடுத்தார். தங்கையை பேச்சுக்குத் தயார் செய்யும் போது எனக்கும் மனதில் ஏறிவிட்டது

ரொம்ப நாள் அது அக்கா எழுதிய வரி என்று நினைத்திருந்தேன். பிற்பாடு தெரிந்தது. அது ஷேக்ஸ்பியரின் வரி என்று. அக்கா கல்லூரியில் ஷேக்ஸ்பியரின் இரண்டு நாடகங்களை பாடமாகப் படித்தார்.

அவை Macbeth மற்றும் Antony and Cleopatra. அக்கா ஒருபோதும் வாய் விட்டுப் படித்ததில்லை.  அக்காவின் கண்களில் நீர் நிற்கும். அது ஒரு போதும் உருண்டு விழி விளிம்பைத் தாண்டியது இல்லை. நான் அப்படி இல்லை.



சொர்க்கம் என்று ஒரு திரைப்படம் 1970 வாக்கில் வெளிவந்தது. அதில் ஒரு நாடகக் காட்சி. சிவாஜி கணேசன் ஜூலியஸ் சீசராக நடித்திருப்பார். நீளமான சிகப்பு  அங்கியை வலது தோளில் வழியும்படி அணிந்திருப்பார்.  முன்னங்கைகளில் வழியும் துணியைக் கைகளில் ஏந்தியபடி வசனம் பேசுவார். சுற்றி வளைத்து அனைவரும் கத்தியால் குத்துவார்கள். கடைசியாக புரூடஸ். சீசரின் நெருங்கிய நண்பன்.  மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்துவான். You too Brutus என்று சொல்லியபடியே தரையில் சரிந்து விழுவார். நீரிலிருந்து  கரையில் விழுந்த மீனைப் போலத் துடிப்பார்.  ஷேக்ஸ்பியரை நான் அறிந்தது இப்படி. 


பத்தாவது படிக்கும் போது பள்ளியில் ஷேக்ஸ்பியர் கிளப் என்று துவங்கினார்கள். அதில் உறுப்பினர் ஆனேன். ஓரு அடையாள அட்டை தந்தார்கள்.  அதில் ஷேக்ஸ்பியரின் உருவம் பொறிக்கப் பட்டிருநதது. சில கூட்டங்கள் நடந்தன. நாட்கள் சென்ற பின் மெல்லக் கலைந்து போனது. கண் விழித்த பின் மறையும் கனவுக் காட்சியாக.


பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் புதுமுக லகுப்பில் சேர்ந்தேன்.  ராஜபார்ட் ரங்கதுரை என்று ஒரு படம் வந்தது. அதில் ஒரு காட்சியில் சிவாஜி Hamlet வேடமிட்டிருப்பார்.  ஆசனத்தில் ஒரு பக்கமாக அமர்ந்தபடி மேடையில் தோன்றுவார்.. கையில் பிடித்த வாளைத் தரையில் ஊன்றியிருப்பார். ஒன்றும் பேசாமல் சிலை போல இருப்பார். கூட்டம் கூச்சலிடும் பொறுமை இழந்து. ஒரு கல் பறந்து வந்து நெற்றிமைத் தாக்கும். ரத்தம் வழியும். சிவாஜி பேச ஆரம்பிப்பார்.

To be or not to be that is the question என்று.

சிவாஜி தான் பேசினார் என்று நினைத்தேன். இல்லை. பேசியது ஷேக்ஸ்பியர் சுந்தரம் என்ற பேராசிரியர். ஹாம்லெட்டை நான் அறிந்தது இவ்விதம்.


பட்டப் படிப்பு இரண்டாவது வருடம். ஷேக்ஸ்பியரின் Antony and Cleopatra நாடகம் எனக்குப் பாடமாக வந்தது. இரண்டு ஷேக்ஸ்பியர் நாடகங்கள் என்பது ஒன்றாகச் சுருங்கி விட்டது.பாடம் எடுத்தவர் SL என்று அழைக்கப்பட்ட  S லட்சுமி நரசிம்மன் என்ற பேராசிரியர்.  தூய வெள்ளையில் கழுத்தில்லாத ஜிப்பா. கச்சமாகக் கட்டிய தூய வெள்ளை வேட்டி. எடுப்பான மூக்கு. சிறிதான ஆனால் பாவங்களை வெளிப்படுத்தும் கண்கள். Nay the dotage of the General overflows the measure என்று நாடகம் துவங்கும். இந்த வாக்கியம் இன்றளவும் SL அவர்களின் குரலில் மனதில் ரீங்காரமிடுகிறது. SL வகுப்பில் நுழைவார்.  யாரையும் கவனிக்க மாட்டார். நாற்காலியில் அமர்வார். அமரும் போது வேட்டியின் கச்சத்தை சரி செய்து கொள்வார். பின்பு ஜிப்பாவின் கைப்பகுதியை நீக்கி மணிக்கட்டு கடிகாரத்தை பார்த்துக் கொள்வார். பின்பு அவரது குரல் ஒலிக்க ஆரம்பிக்கும். ஷேக்ஸ்பியர் ஒருபுறம் வார்த்தைகளை அடுக்கியிருப்பார். SL ஒருபுறம். அத்தனையும் புதிய ஆங்கில வார்த்தைகள். முத்துக்களைப் போல சிதற விடுவார். அத்தனையும் அள்ளிக் கொள்ளுவேன். புத்தகத்தில் அங்கங்கே குறித்துக் கொள்வேன். ஆங்கில வார்த்தைகள் மேல் காதல் பெருகி வழிந்த காலம் அது. கிளியோபாட்ரா பேரழகியாம். ஷேக்ஸ்பியர் இப்படிச் சொல்லுவார்.


Age cannot wither her nor custom stale her infinite variety….she makes hungry where most she satisfies..


அப்பா இசைப் பிரியர். நல்ல இசையைக் கேட்டு மனம் நெகிழக் கூடியவர். அவர் சொல்வார்.

If music be the food of love play on

Give me excess of it. That surfeiting may sicken the appetite and thus die..


ஷேக்ஸ்பியரின் ஒரு நாடகத்தில் வரும் என்று அப்பா சோன்னதாக நினைவிருக்கிறது. ஆ.. நினைவு வந்துவிட்டது. அது Twelfth Night.


ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் வரும் பாத்திரங்கள் வேறு வேறு மானிட உணர்வுகளின் கலவையாக இருப்பார்கள். மனித மனங்களை ஒரு தேர்ந்த உளவியல் வல்லுனர் போல் ஷேக்ஸ்பியர் அறிந்திருந்தார். சோகம், துரோகம் ,கழிவிரக்கம் ,தாழ்வுணர்ச்சி, காதல் ,வஞ்சகம் இப்படி யாவற்றையும் அவரால் பாத்திரங்களாக வடிக்க முடிந்தது.


நினைக்கும் தோறும் ஷேக்ஸ்பியரின் வரிகள் மனதில் ஊறி வருகிறது. ஒவ்வொரு உணர்வுத் தருணத்திலும்.


தி சந்தானம்









 





Comments

  1. Shakespeare play is used to see our Sivaji in action once again

    ReplyDelete
  2. To be or not to be is my life expression.
    You too Brutus
    These lines are very familiar for me.Twelfth Night degee la padichen.I was the only one who got first-class in college in English So my English professor advised me to take English literature.But my father didn't allow me to take English.He forced me to take physics as there is lot of job opportunities.
    Till date I am repenting for it.

    ReplyDelete
    Replies
    1. Brutus stabbed Caesar. " That was the most unkindest cut"
      This is also a famous quote.
      Thanks for reading and sharing your thoughts

      Delete
  3. ஒளிப்பதிவு பார்த்தேன். ரசித்தேன். பதிவு நன்றாக இருந்தது. Shakespeare படிக்கக் கூடிய வாய்ப்பு கிட்ட வில்லை. ஆரம்பத்திலிருந்து commerce பாடம் படித்து பின் B Com படித்த காரணத்தினால். SL ஒரு தடவை KRN க்கு பதிலாக பாடம் நடத்த வந்ததால் கேட்டிருக்கிறேன். என் தாத்தா literature என் தகப்பனார் BA English. இருவரும் Shakespeare பற்றி பேசுவதை கேட்டிருக்கிறறேன்.
    பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  4. நன்றி ராம். அப்பாவும் தாத்தாவும் இலக்கியம் படித்தார்களா? இது எனக்குப் புதிய சேதி. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. KRN எனக்கு எடுத்ததில்லை. ஆனாலும் அவரை அறிந்திருந்தேன். சுவாரஸ்யமான மனிதர்கள் பேராசிரியர்கள் என்பதைத் தாண்டி

    ReplyDelete
  5. என்ன ஒரு ஞாபக சக்தி உனக்கு !! கோவையாக அந்தநினைவுகளை எழுதுகிறாய் சுவாரசியம் குறையாமல்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஞாபகம் சுமை. சில போது சிறகு போல மென்மை

      Delete
  6. நம்ம ஸ்கூல்ல கேதரின்ன்னு ஒரு டீச்சர் இருப்பாங்க. ஏழாவது படிக்கும் போது ஹிஸ்டரி, ஜியாக்ரபி எடுத்தாங்க. அவங்க நிறைய கதைகள் க்ளாஸ்ல சொல்வாங்க. அதில் ஒன்று மேக்பத். மற்றபடி நீ சொன்ன சிவாஜி உதாரணம் தவிர எனக்கு வேறு படிக்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? கேத்ரின் எனக்குத் தெரியாது. நீ காலேஜ் போகும் போது நாம் வேறு வேறு ஊரில்

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...