Some are born great
Some achieve greatness and
Some have greatness thrust upon them
பள்ளியில் தங்கை ஆங்கிலத்தில் பேசினாள். அதன் துவக்கம் மேலே சொன்னவாறு இருந்தது. அந்தப் பேச்சை அக்கா எழுதிக் கொடுத்தார். தங்கையை பேச்சுக்குத் தயார் செய்யும் போது எனக்கும் மனதில் ஏறிவிட்டது
ரொம்ப நாள் அது அக்கா எழுதிய வரி என்று நினைத்திருந்தேன். பிற்பாடு தெரிந்தது. அது ஷேக்ஸ்பியரின் வரி என்று. அக்கா கல்லூரியில் ஷேக்ஸ்பியரின் இரண்டு நாடகங்களை பாடமாகப் படித்தார்.
அவை Macbeth மற்றும் Antony and Cleopatra. அக்கா ஒருபோதும் வாய் விட்டுப் படித்ததில்லை. அக்காவின் கண்களில் நீர் நிற்கும். அது ஒரு போதும் உருண்டு விழி விளிம்பைத் தாண்டியது இல்லை. நான் அப்படி இல்லை.
சொர்க்கம் என்று ஒரு திரைப்படம் 1970 வாக்கில் வெளிவந்தது. அதில் ஒரு நாடகக் காட்சி. சிவாஜி கணேசன் ஜூலியஸ் சீசராக நடித்திருப்பார். நீளமான சிகப்பு அங்கியை வலது தோளில் வழியும்படி அணிந்திருப்பார். முன்னங்கைகளில் வழியும் துணியைக் கைகளில் ஏந்தியபடி வசனம் பேசுவார். சுற்றி வளைத்து அனைவரும் கத்தியால் குத்துவார்கள். கடைசியாக புரூடஸ். சீசரின் நெருங்கிய நண்பன். மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்துவான். You too Brutus என்று சொல்லியபடியே தரையில் சரிந்து விழுவார். நீரிலிருந்து கரையில் விழுந்த மீனைப் போலத் துடிப்பார். ஷேக்ஸ்பியரை நான் அறிந்தது இப்படி.
பத்தாவது படிக்கும் போது பள்ளியில் ஷேக்ஸ்பியர் கிளப் என்று துவங்கினார்கள். அதில் உறுப்பினர் ஆனேன். ஓரு அடையாள அட்டை தந்தார்கள். அதில் ஷேக்ஸ்பியரின் உருவம் பொறிக்கப் பட்டிருநதது. சில கூட்டங்கள் நடந்தன. நாட்கள் சென்ற பின் மெல்லக் கலைந்து போனது. கண் விழித்த பின் மறையும் கனவுக் காட்சியாக.
பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் புதுமுக லகுப்பில் சேர்ந்தேன். ராஜபார்ட் ரங்கதுரை என்று ஒரு படம் வந்தது. அதில் ஒரு காட்சியில் சிவாஜி Hamlet வேடமிட்டிருப்பார். ஆசனத்தில் ஒரு பக்கமாக அமர்ந்தபடி மேடையில் தோன்றுவார்.. கையில் பிடித்த வாளைத் தரையில் ஊன்றியிருப்பார். ஒன்றும் பேசாமல் சிலை போல இருப்பார். கூட்டம் கூச்சலிடும் பொறுமை இழந்து. ஒரு கல் பறந்து வந்து நெற்றிமைத் தாக்கும். ரத்தம் வழியும். சிவாஜி பேச ஆரம்பிப்பார்.
To be or not to be that is the question என்று.
சிவாஜி தான் பேசினார் என்று நினைத்தேன். இல்லை. பேசியது ஷேக்ஸ்பியர் சுந்தரம் என்ற பேராசிரியர். ஹாம்லெட்டை நான் அறிந்தது இவ்விதம்.
பட்டப் படிப்பு இரண்டாவது வருடம். ஷேக்ஸ்பியரின் Antony and Cleopatra நாடகம் எனக்குப் பாடமாக வந்தது. இரண்டு ஷேக்ஸ்பியர் நாடகங்கள் என்பது ஒன்றாகச் சுருங்கி விட்டது.பாடம் எடுத்தவர் SL என்று அழைக்கப்பட்ட S லட்சுமி நரசிம்மன் என்ற பேராசிரியர். தூய வெள்ளையில் கழுத்தில்லாத ஜிப்பா. கச்சமாகக் கட்டிய தூய வெள்ளை வேட்டி. எடுப்பான மூக்கு. சிறிதான ஆனால் பாவங்களை வெளிப்படுத்தும் கண்கள். Nay the dotage of the General overflows the measure என்று நாடகம் துவங்கும். இந்த வாக்கியம் இன்றளவும் SL அவர்களின் குரலில் மனதில் ரீங்காரமிடுகிறது. SL வகுப்பில் நுழைவார். யாரையும் கவனிக்க மாட்டார். நாற்காலியில் அமர்வார். அமரும் போது வேட்டியின் கச்சத்தை சரி செய்து கொள்வார். பின்பு ஜிப்பாவின் கைப்பகுதியை நீக்கி மணிக்கட்டு கடிகாரத்தை பார்த்துக் கொள்வார். பின்பு அவரது குரல் ஒலிக்க ஆரம்பிக்கும். ஷேக்ஸ்பியர் ஒருபுறம் வார்த்தைகளை அடுக்கியிருப்பார். SL ஒருபுறம். அத்தனையும் புதிய ஆங்கில வார்த்தைகள். முத்துக்களைப் போல சிதற விடுவார். அத்தனையும் அள்ளிக் கொள்ளுவேன். புத்தகத்தில் அங்கங்கே குறித்துக் கொள்வேன். ஆங்கில வார்த்தைகள் மேல் காதல் பெருகி வழிந்த காலம் அது. கிளியோபாட்ரா பேரழகியாம். ஷேக்ஸ்பியர் இப்படிச் சொல்லுவார்.
Age cannot wither her nor custom stale her infinite variety….she makes hungry where most she satisfies..
அப்பா இசைப் பிரியர். நல்ல இசையைக் கேட்டு மனம் நெகிழக் கூடியவர். அவர் சொல்வார்.
If music be the food of love play on
Give me excess of it. That surfeiting may sicken the appetite and thus die..
ஷேக்ஸ்பியரின் ஒரு நாடகத்தில் வரும் என்று அப்பா சோன்னதாக நினைவிருக்கிறது. ஆ.. நினைவு வந்துவிட்டது. அது Twelfth Night.
ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் வரும் பாத்திரங்கள் வேறு வேறு மானிட உணர்வுகளின் கலவையாக இருப்பார்கள். மனித மனங்களை ஒரு தேர்ந்த உளவியல் வல்லுனர் போல் ஷேக்ஸ்பியர் அறிந்திருந்தார். சோகம், துரோகம் ,கழிவிரக்கம் ,தாழ்வுணர்ச்சி, காதல் ,வஞ்சகம் இப்படி யாவற்றையும் அவரால் பாத்திரங்களாக வடிக்க முடிந்தது.
நினைக்கும் தோறும் ஷேக்ஸ்பியரின் வரிகள் மனதில் ஊறி வருகிறது. ஒவ்வொரு உணர்வுத் தருணத்திலும்.
தி சந்தானம்
Shakespeare play is used to see our Sivaji in action once again
ReplyDeleteDramatic moments
Deleteமதி : 👏 👏
ReplyDeleteநன்றி மதி
DeleteTo be or not to be is my life expression.
ReplyDeleteYou too Brutus
These lines are very familiar for me.Twelfth Night degee la padichen.I was the only one who got first-class in college in English So my English professor advised me to take English literature.But my father didn't allow me to take English.He forced me to take physics as there is lot of job opportunities.
Till date I am repenting for it.
Brutus stabbed Caesar. " That was the most unkindest cut"
DeleteThis is also a famous quote.
Thanks for reading and sharing your thoughts
ஒளிப்பதிவு பார்த்தேன். ரசித்தேன். பதிவு நன்றாக இருந்தது. Shakespeare படிக்கக் கூடிய வாய்ப்பு கிட்ட வில்லை. ஆரம்பத்திலிருந்து commerce பாடம் படித்து பின் B Com படித்த காரணத்தினால். SL ஒரு தடவை KRN க்கு பதிலாக பாடம் நடத்த வந்ததால் கேட்டிருக்கிறேன். என் தாத்தா literature என் தகப்பனார் BA English. இருவரும் Shakespeare பற்றி பேசுவதை கேட்டிருக்கிறறேன்.
ReplyDeleteபதிவிற்கு நன்றி.
நன்றி ராம். அப்பாவும் தாத்தாவும் இலக்கியம் படித்தார்களா? இது எனக்குப் புதிய சேதி. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. KRN எனக்கு எடுத்ததில்லை. ஆனாலும் அவரை அறிந்திருந்தேன். சுவாரஸ்யமான மனிதர்கள் பேராசிரியர்கள் என்பதைத் தாண்டி
ReplyDeleteஎன்ன ஒரு ஞாபக சக்தி உனக்கு !! கோவையாக அந்தநினைவுகளை எழுதுகிறாய் சுவாரசியம் குறையாமல்.
ReplyDeleteநன்றி ஞாபகம் சுமை. சில போது சிறகு போல மென்மை
Deleteநம்ம ஸ்கூல்ல கேதரின்ன்னு ஒரு டீச்சர் இருப்பாங்க. ஏழாவது படிக்கும் போது ஹிஸ்டரி, ஜியாக்ரபி எடுத்தாங்க. அவங்க நிறைய கதைகள் க்ளாஸ்ல சொல்வாங்க. அதில் ஒன்று மேக்பத். மற்றபடி நீ சொன்ன சிவாஜி உதாரணம் தவிர எனக்கு வேறு படிக்க சந்தர்ப்பம் வாய்க்கவில்லை
ReplyDeleteஅப்படியா? கேத்ரின் எனக்குத் தெரியாது. நீ காலேஜ் போகும் போது நாம் வேறு வேறு ஊரில்
Delete