Skip to main content

என்னை மறந்து விட்டாயே

 சில குரல்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. வாழ்க்கை முழுதும். குரல்கள் நம்மோடு உறவாடுகின்றன. பாசத்தைச் சொன்ன குரல்கள். பிரியத்தில் நெகிழ்ந்த குரல்கள். பிரியும் போது நடுங்கிய குரல்கள். அறிவறியாப் பருவத்தில் ஆழத்தில் தங்கிவிட்ட அம்மாவின் தாலாட்டுக் குரல்.   இசையாய் ஒலித்து நம்மை எங்கெங்கோ கூட்டிச் சென்ற குரல்கள்.

உணர்வுகளை மீட்டி உள்ளத்தை உருக்கிய குரல்கள். 


அவற்றில் ஒரு தனிப்பட்ட குரல் லதாவுடையது. ஆளரவமற்ற ரயில்நிலையத்தில் பனி விழும் பின்னிரவில் தனித்து ஒலிக்கும் பறவையின் குரல் போன்றது அவர் குரல். அந்தக் குரல் ஒலித்தால் மட்டுமே போதுமானதாயிருந்தது. இசையின் எல்லாப் பரிமாணங்களும் எல்லா சாத்தியங்களும் இயல்பாகக் கூடி வந்தது. மூன்றரை நிமிடங்களே ஒலிக்கும் பாடல்களில் பெரிய இசை அனுபவம் நாடி வரும் போது மொழி ஒரு தடையாக இருந்ததில்லை.


சிறு வயதில் பள்ளியின் இறுதி மணி ஓலித்து வீட்டுக்கு அவரவர் கிளம்பும் போது

இந்த அடியை மறக்காதே என்று ஓருவர் ஒருவரை அடித்து விட்டு விடை பெறுவோம்

மறந்து விடக் கூடாது என்ற பயம். இந்த பயம் வாழ்க்கை பூராவும் தொடர்ந்தபடியே இருக்கிறது.

இந்தப் பாடல் இப்படித் துவங்குகிறது.


என்னை மறந்து விட்டாயே.




எங்கேயோ தீபம் எரிகின்றது. எங்கேயோ இதயம்



உனக்கும் எனக்கும் இடையில் என்ன ஒரு பந்தம்



மரணம் என்ன செய்யும் உன்னதக் கலைஞர்களை?


தி சந்தானம்





Comments

  1. //மரணம் என்ன செய்யும் உன்னதக் கலைஞர்களை// உண்மை. நான் எஸ் பி பி மறைந்த ஒரு மாதத்திற்கு செய்தி எதுவும் பார்க்கவில்லை. மனதில் அவர் குரல் எப்பொழுதும் போல ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இறுதி வரை குரல் நடுக்கம் வரவில்லை அவருக்கு.

    ReplyDelete
  2. இரண்டாவதாகக் குறிப்பிட்டிருந்த லதாவின் பாடலில் இப்படி ஒரு வரி. நான் ஒரு கனவு அல்ல. ரகசியமும் அல்ல. வலி நிரம்பிய ஒரு குரல்.

    ReplyDelete
  3. சந்தானம் ஜீ!!" சில பாடகர்கள் அவர்களின் குரல் மூலம் நம்மை மெய் மறக்க செய்துவிடுவார்கள். நம் மனதை வருடிவிடுவார்கள்.
    சில சமயங்களில் நம் மனங்களை பாடல்கள் மூலம் கலங்கடித்துவிடுவார்கள்.
    நாம் வாழும்வரை அவர்கள் பாடல்கள் மூலம் நம்முடன் வாழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
    அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுப்புராஜ். பின்னணிக் குரல்கள் என்று நாம் பெயரிட்டு அழைத்தாலும் அந்தக் குரல்கள் நம்மை என்னவெல்லாம் செய்துவிடுகிறது. எப்படி எல்லாம் நமது உணர்வுகளை அசைத்துப் பார்க்கிறது. அற்புதமாகச் சொன்னீர்கள்

      Delete
    2. எக்ஸாக்ட்லி சுப்புராஜ் சார், நா எஸ் பி பி போனப்ப அப்டித்தான் நெனச்சேன். அவர் குரல் நம்முடன் என்றும் இருக்கும்னு

      Delete
  4. கனவிலும் மறக்க முடியாத ஒரு குரல். அவரது பாடல்கள் சாகா வரம் பெற்றவை. அவை எப்போதும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொன்னீர்கள் ராம். கனவிலும் தொடரும் குரல்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...