சில குரல்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. வாழ்க்கை முழுதும். குரல்கள் நம்மோடு உறவாடுகின்றன. பாசத்தைச் சொன்ன குரல்கள். பிரியத்தில் நெகிழ்ந்த குரல்கள். பிரியும் போது நடுங்கிய குரல்கள். அறிவறியாப் பருவத்தில் ஆழத்தில் தங்கிவிட்ட அம்மாவின் தாலாட்டுக் குரல். இசையாய் ஒலித்து நம்மை எங்கெங்கோ கூட்டிச் சென்ற குரல்கள்.
உணர்வுகளை மீட்டி உள்ளத்தை உருக்கிய குரல்கள்.
அவற்றில் ஒரு தனிப்பட்ட குரல் லதாவுடையது. ஆளரவமற்ற ரயில்நிலையத்தில் பனி விழும் பின்னிரவில் தனித்து ஒலிக்கும் பறவையின் குரல் போன்றது அவர் குரல். அந்தக் குரல் ஒலித்தால் மட்டுமே போதுமானதாயிருந்தது. இசையின் எல்லாப் பரிமாணங்களும் எல்லா சாத்தியங்களும் இயல்பாகக் கூடி வந்தது. மூன்றரை நிமிடங்களே ஒலிக்கும் பாடல்களில் பெரிய இசை அனுபவம் நாடி வரும் போது மொழி ஒரு தடையாக இருந்ததில்லை.
சிறு வயதில் பள்ளியின் இறுதி மணி ஓலித்து வீட்டுக்கு அவரவர் கிளம்பும் போது
இந்த அடியை மறக்காதே என்று ஓருவர் ஒருவரை அடித்து விட்டு விடை பெறுவோம்
மறந்து விடக் கூடாது என்ற பயம். இந்த பயம் வாழ்க்கை பூராவும் தொடர்ந்தபடியே இருக்கிறது.
இந்தப் பாடல் இப்படித் துவங்குகிறது.
தி சந்தானம்
//மரணம் என்ன செய்யும் உன்னதக் கலைஞர்களை// உண்மை. நான் எஸ் பி பி மறைந்த ஒரு மாதத்திற்கு செய்தி எதுவும் பார்க்கவில்லை. மனதில் அவர் குரல் எப்பொழுதும் போல ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இறுதி வரை குரல் நடுக்கம் வரவில்லை அவருக்கு.
ReplyDeleteஇரண்டாவதாகக் குறிப்பிட்டிருந்த லதாவின் பாடலில் இப்படி ஒரு வரி. நான் ஒரு கனவு அல்ல. ரகசியமும் அல்ல. வலி நிரம்பிய ஒரு குரல்.
ReplyDeleteசந்தானம் ஜீ!!" சில பாடகர்கள் அவர்களின் குரல் மூலம் நம்மை மெய் மறக்க செய்துவிடுவார்கள். நம் மனதை வருடிவிடுவார்கள்.
ReplyDeleteசில சமயங்களில் நம் மனங்களை பாடல்கள் மூலம் கலங்கடித்துவிடுவார்கள்.
நாம் வாழும்வரை அவர்கள் பாடல்கள் மூலம் நம்முடன் வாழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
அன்னாரது ஆத்மா சாந்தியடையட்டும்.
நன்றி சுப்புராஜ். பின்னணிக் குரல்கள் என்று நாம் பெயரிட்டு அழைத்தாலும் அந்தக் குரல்கள் நம்மை என்னவெல்லாம் செய்துவிடுகிறது. எப்படி எல்லாம் நமது உணர்வுகளை அசைத்துப் பார்க்கிறது. அற்புதமாகச் சொன்னீர்கள்
Deleteஎக்ஸாக்ட்லி சுப்புராஜ் சார், நா எஸ் பி பி போனப்ப அப்டித்தான் நெனச்சேன். அவர் குரல் நம்முடன் என்றும் இருக்கும்னு
Deleteகனவிலும் மறக்க முடியாத ஒரு குரல். அவரது பாடல்கள் சாகா வரம் பெற்றவை. அவை எப்போதும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கும்.
ReplyDeleteசரியாகச் சொன்னீர்கள் ராம். கனவிலும் தொடரும் குரல்.
Delete