Skip to main content

இரவுக்கு ஆயிரம் கண்கள்

 வெகு நாட்களுக்கு முன்பு அந்தக் கவிதையைப் படித்தேன். 


The night has a thousand eyes,

And the day but one;

Yet the light of the bright world dies

WIth the dying sun.


The mind has a thousand eyes,

And the heart but one;

Yet the light of the whole life dies

When love is done.


இந்தக் கவிதையை எழுதியவர் போர்டில்லான் என்பவர்.



உதகமண்டலத்துக்கு ஒரு முறை சென்ற போது ஒரு குடிலில் தங்க வாய்த்தது. அது மிகப் பழமையானது. கிறித்துவத் தேவாலயத்தோடு இணைந்தது. அந்தக் குடிலில் ஒரு கணப்பு இருந்தது.  ஆனால் நெருப்பு இல்லை. பல நாட்களாக உபயோகத்தில் இல்லை.

கணப்பின் அருகில் புத்தக அலமாரி இருந்தது. அதில் சில புத்தகங்கள் இருந்தன. ஆனால் படிப்பவர் இல்லை. தூசி படர்ந்து அடர்ந்திருந்தது. அத்தனையும் ஆங்கிலக் கவிதைப் புத்தகங்கள். அதில் ஒரு புத்தகம்

An Anthology of Modern Verse என்று. நீள வாக்கில் கோடுகள் போட்ட நீல நிற கெட்டி மேலட்டையுடன் பைண்டு செய்யப்பட்டு இருந்தது.  பதிப்பகத்தின் பெயர் Methuen & Co. Ltd  36 Essex Street W.C. London என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தாமஸ் ஹார்டிக்கு இந்தப் புத்தகம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ராபர்ட் லின்ட் இதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். ராபர்ட் லின்ட் எழுதிய Without Glasses என்ற கட்டுரை எனக்கு கல்லூரியில் ஆங்கிலப் பாடமாக வந்திருக்கிறது.  


கணப்பினிலே ஒரு காலத்தில் நெருப்பு எரிந்திருக்க வேண்டும். குளிர் காய்ந்தபடியே சிலர் கவிதை படித்து மகிழ்ந்திருக்க வேண்டும். உதகமண்டலத்திலிருந்து திரும்பும்போது  அந்தப் புத்தகமும் என்னோடு வந்தது. அதிலே உள்ள ஒரு கவிதைதான் மேலே சொல்லப் பட்டது.


குலமகள் ராதை என்று ஒரு திரைப்படம். 1963 வாக்கில் வந்தது.

அதில் ஒரு பாடல் இரவுக்கு ஆயிரம் கண்கள்.  மேலே குறிப்பிட்ட ஆங்கிலக் கவிதையின் வரிகளோடு ஒத்துப் போகிறது. அதாவது ஆரம்பத்தில். பாட்டுத் தொடரத் தொடர வரிகள் வேறு வடிவம் எய்துகிறது. வேறு தடத்தில் சென்று வேறு பொருள் கொண்டு முடிகிறது. அதாவது இப்படி.


அங்கும் இங்கும் அலை போலே

தினம் ஆடிடும் மானிட வாழ்விலே

எங்கே நடக்கும் எது நடக்கும் அது

எங்கே முடியும் யாரறிவார்?


இந்தப் பாடல் குறித்து ஒரு அற்புதமான நினைவு எனக்கு உண்டு.

நான் அப்போது இரண்டாவது வகுப்பில் இருந்தேன். என்னுடைய அக்கா ஏழாவது வகுப்பில். ஒரே பள்ளியில். எங்கள் வீட்டுக்கு எதிர் சாரியிலே இருந்த பள்ளியில் படித்தோம். பள்ளி ஆண்டு விழா என்று நினைக்கிறேன். அதன் பொருட்டு ஒரு கலை நிகழ்ச்சி. மேடை வண்ணம் ஒளி ஒலி அமைப்பு. நான் பார்த்த முதல் கலை நிகழ்ச்சி அதுதான். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஓரு ரிப்பன் கோலாட்டம். பல சிறுமிகளோடு வண்ண உடையில் எனது அக்காவும் பங்கேற்றார். பின்னணியில் இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற பாடல் ஒலித்தது. சிறுமிகள் எல்லோரும் கோலாட்டம் செய்தபடியே வண்ண ரிப்பன்களை ஒரு கூடாரம் போல விரித்துப் பின் பிரித்து விட வேண்டும். மூன்று நிமிடப் பாடல் முடிவதற்குள்.

அழகாகச் செய்து முடித்தார்கள். கூட்டத்தில் அமர்ந்து பார்த்த எனக்குப் பிரமிப்பாக இருந்தது. 


சிறு வயதில் பள்ளிச் சிறுமிகள் பள்ளிக்குப் பூச்சூடி வருவார்கள். பள்ளியில் நுழையும் போதே கம்மென்று பூக்களின் மணம் எழும். 

அது போலத்தான் இரவுக்கு ஆயிரம் கண்கள் பாடலும் அது தொடர்பான நினைவுகளும்.

இப்போது நினைத்தால் கூட இதமான மணம் பரப்புவதாக இருக்கிறது.


பாடலைக் கேட்கலாம்.


தி சந்தானம்



Comments

  1. ஐம்பது பதிவுகள் முடிந்து இது ஐம்பத்து ஒன்றாவது பதிவு. அனைவருடைய தொடர்ந்த ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி

    ReplyDelete
    Replies
    1. அருமையான பாடல்

      Delete
    2. நன்றி கண்ணன் ரசித்தமைக்கு

      Delete
  2. அருமையான கருத்துச் செரிவுள்ள பாடல். அதை சந்தானம் சொல்லும் விதம் அலாதி. 51 வது பதிவு. வாழ்த்துக்கள். 100ஐத் தொட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம் தொடர்ந்து படிப்பதற்கும் வாழ்த்துவதற்கும்

      Delete
  3. கணப்பினிலே
    ஒரு காலத்தில்
    நெருப்பு எரிந்திருக்க வேண்டும்.

    குளிர் காய்ந்தபடியே
    சிலர் ...
    கவிதை படித்து மகிழ்ந்திருக்க வேண்டும்.

    It's beautiful.

    ReplyDelete
  4. //சிறு வயதில் பள்ளிச் சிறுமிகள் பள்ளிக்குப் பூச்சூடி வருவார்கள். பள்ளியில் நுழையும் போதே கம்மென்று பூக்களின் மணம் எழும்//. அந்த சின்ன வயசுலயே ரசிகன் நீ. இப்பல்லாம் பூ, வளையல் லாம் கிடையாது. No distraction you know :)
    TVs school la inspection appa black ribbon மடிச்சு கட்டி, கனகாம்பரம் வச்சுண்டு போகனும். Three by three square aa neraya squares ல கேர்ளாஸ் நிப்போம். பிறகு எல்லா சதுரங்களும் இணைந்து வட்டமாகும், அதில் உள் வட்டமுமுண்டு. இறுதியில் தாமரை மலர்வது போல ஒரு ஃபார்மேஷன். அப்ப ஒரே மாரி கருப்பு ரிப்பன் கனகாம்பரம் பூ அழகா இருக்கும். Sridhar sir periya drumsla la adikkara beats Semmaya irukkum. சொன்னா, கனகாம்பரம் பூ க்கு என்ன பெருமை? (சட்டையில பூனை, அதுல என்ன பெருமை -தில்லுமுல்லு டயலாக் மாறி) கேக்கறது சுபர்ணா. ஆனா அப்ப நாங்க அந்த நாளுக்காக காத்திருப்போம்.

    ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அற்புதம் ஜெயந்தி. அந்த தாமரை formation ஞாபகப்படுத்தியதற்கு. எத்தனை நினைவுகள்

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...