வெகு நாட்களுக்கு முன்பு அந்தக் கவிதையைப் படித்தேன்.
The night has a thousand eyes,
And the day but one;
Yet the light of the bright world dies
WIth the dying sun.
The mind has a thousand eyes,
And the heart but one;
Yet the light of the whole life dies
When love is done.
இந்தக் கவிதையை எழுதியவர் போர்டில்லான் என்பவர்.
உதகமண்டலத்துக்கு ஒரு முறை சென்ற போது ஒரு குடிலில் தங்க வாய்த்தது. அது மிகப் பழமையானது. கிறித்துவத் தேவாலயத்தோடு இணைந்தது. அந்தக் குடிலில் ஒரு கணப்பு இருந்தது. ஆனால் நெருப்பு இல்லை. பல நாட்களாக உபயோகத்தில் இல்லை.
கணப்பின் அருகில் புத்தக அலமாரி இருந்தது. அதில் சில புத்தகங்கள் இருந்தன. ஆனால் படிப்பவர் இல்லை. தூசி படர்ந்து அடர்ந்திருந்தது. அத்தனையும் ஆங்கிலக் கவிதைப் புத்தகங்கள். அதில் ஒரு புத்தகம்
An Anthology of Modern Verse என்று. நீள வாக்கில் கோடுகள் போட்ட நீல நிற கெட்டி மேலட்டையுடன் பைண்டு செய்யப்பட்டு இருந்தது. பதிப்பகத்தின் பெயர் Methuen & Co. Ltd 36 Essex Street W.C. London என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தாமஸ் ஹார்டிக்கு இந்தப் புத்தகம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ராபர்ட் லின்ட் இதற்கு முன்னுரை எழுதியிருக்கிறார். ராபர்ட் லின்ட் எழுதிய Without Glasses என்ற கட்டுரை எனக்கு கல்லூரியில் ஆங்கிலப் பாடமாக வந்திருக்கிறது.
கணப்பினிலே ஒரு காலத்தில் நெருப்பு எரிந்திருக்க வேண்டும். குளிர் காய்ந்தபடியே சிலர் கவிதை படித்து மகிழ்ந்திருக்க வேண்டும். உதகமண்டலத்திலிருந்து திரும்பும்போது அந்தப் புத்தகமும் என்னோடு வந்தது. அதிலே உள்ள ஒரு கவிதைதான் மேலே சொல்லப் பட்டது.
குலமகள் ராதை என்று ஒரு திரைப்படம். 1963 வாக்கில் வந்தது.
அதில் ஒரு பாடல் இரவுக்கு ஆயிரம் கண்கள். மேலே குறிப்பிட்ட ஆங்கிலக் கவிதையின் வரிகளோடு ஒத்துப் போகிறது. அதாவது ஆரம்பத்தில். பாட்டுத் தொடரத் தொடர வரிகள் வேறு வடிவம் எய்துகிறது. வேறு தடத்தில் சென்று வேறு பொருள் கொண்டு முடிகிறது. அதாவது இப்படி.
அங்கும் இங்கும் அலை போலே
தினம் ஆடிடும் மானிட வாழ்விலே
எங்கே நடக்கும் எது நடக்கும் அது
எங்கே முடியும் யாரறிவார்?
இந்தப் பாடல் குறித்து ஒரு அற்புதமான நினைவு எனக்கு உண்டு.
நான் அப்போது இரண்டாவது வகுப்பில் இருந்தேன். என்னுடைய அக்கா ஏழாவது வகுப்பில். ஒரே பள்ளியில். எங்கள் வீட்டுக்கு எதிர் சாரியிலே இருந்த பள்ளியில் படித்தோம். பள்ளி ஆண்டு விழா என்று நினைக்கிறேன். அதன் பொருட்டு ஒரு கலை நிகழ்ச்சி. மேடை வண்ணம் ஒளி ஒலி அமைப்பு. நான் பார்த்த முதல் கலை நிகழ்ச்சி அதுதான். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஓரு ரிப்பன் கோலாட்டம். பல சிறுமிகளோடு வண்ண உடையில் எனது அக்காவும் பங்கேற்றார். பின்னணியில் இரவுக்கு ஆயிரம் கண்கள் என்ற பாடல் ஒலித்தது. சிறுமிகள் எல்லோரும் கோலாட்டம் செய்தபடியே வண்ண ரிப்பன்களை ஒரு கூடாரம் போல விரித்துப் பின் பிரித்து விட வேண்டும். மூன்று நிமிடப் பாடல் முடிவதற்குள்.
அழகாகச் செய்து முடித்தார்கள். கூட்டத்தில் அமர்ந்து பார்த்த எனக்குப் பிரமிப்பாக இருந்தது.
சிறு வயதில் பள்ளிச் சிறுமிகள் பள்ளிக்குப் பூச்சூடி வருவார்கள். பள்ளியில் நுழையும் போதே கம்மென்று பூக்களின் மணம் எழும்.
அது போலத்தான் இரவுக்கு ஆயிரம் கண்கள் பாடலும் அது தொடர்பான நினைவுகளும்.
இப்போது நினைத்தால் கூட இதமான மணம் பரப்புவதாக இருக்கிறது.
பாடலைக் கேட்கலாம்.
தி சந்தானம்

ஐம்பது பதிவுகள் முடிந்து இது ஐம்பத்து ஒன்றாவது பதிவு. அனைவருடைய தொடர்ந்த ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றி
ReplyDeleteஅருமையான பாடல்
Deleteநன்றி கண்ணன் ரசித்தமைக்கு
Deleteஅருமையான கருத்துச் செரிவுள்ள பாடல். அதை சந்தானம் சொல்லும் விதம் அலாதி. 51 வது பதிவு. வாழ்த்துக்கள். 100ஐத் தொட வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ராம் தொடர்ந்து படிப்பதற்கும் வாழ்த்துவதற்கும்
Deleteகணப்பினிலே
ReplyDeleteஒரு காலத்தில்
நெருப்பு எரிந்திருக்க வேண்டும்.
குளிர் காய்ந்தபடியே
சிலர் ...
கவிதை படித்து மகிழ்ந்திருக்க வேண்டும்.
It's beautiful.
Ram You have captured it. Whi else can do that?
Delete//சிறு வயதில் பள்ளிச் சிறுமிகள் பள்ளிக்குப் பூச்சூடி வருவார்கள். பள்ளியில் நுழையும் போதே கம்மென்று பூக்களின் மணம் எழும்//. அந்த சின்ன வயசுலயே ரசிகன் நீ. இப்பல்லாம் பூ, வளையல் லாம் கிடையாது. No distraction you know :)
ReplyDeleteTVs school la inspection appa black ribbon மடிச்சு கட்டி, கனகாம்பரம் வச்சுண்டு போகனும். Three by three square aa neraya squares ல கேர்ளாஸ் நிப்போம். பிறகு எல்லா சதுரங்களும் இணைந்து வட்டமாகும், அதில் உள் வட்டமுமுண்டு. இறுதியில் தாமரை மலர்வது போல ஒரு ஃபார்மேஷன். அப்ப ஒரே மாரி கருப்பு ரிப்பன் கனகாம்பரம் பூ அழகா இருக்கும். Sridhar sir periya drumsla la adikkara beats Semmaya irukkum. சொன்னா, கனகாம்பரம் பூ க்கு என்ன பெருமை? (சட்டையில பூனை, அதுல என்ன பெருமை -தில்லுமுல்லு டயலாக் மாறி) கேக்கறது சுபர்ணா. ஆனா அப்ப நாங்க அந்த நாளுக்காக காத்திருப்போம்.
ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள்.
சாரி 51 வது பதிவு
Deleteஅற்புதம் ஜெயந்தி. அந்த தாமரை formation ஞாபகப்படுத்தியதற்கு. எத்தனை நினைவுகள்
Delete